நடப்பு

‘ஊர்’வலம் - ஈரோடு

பெ   ரியார் பிறந்த பூமி... அரசியல் ரீதியாகவும் சமூக மறுமலர்ச்சி அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்! இப்போது தொழில் துறையிலும் முத்திரை பதித்து கொங்கு மண்டலத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறது ஈரோடு! இந்த இதழ் ‘ஊர்’வலம் இங்கேதான்!

பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையில் அமையப்பெற்ற ஊர். ஈரோடை என்ற பெயரே பின்னாளில் ஈரோடு ஆனது என்று ஊருக்குப் பெயர்க்காரணம் சொல்கிறார்கள். இன்றைய நிலையில் ஜவுளித்துறை, விவசாயம் என்ற இரண்டு பெரிய தொழில் ஓடைகள் ஈரோட்டு பொருளாதாரத்தை அழகாக நகர்த்திச் செல்கிறது என்று சொல்லலாம்.

ஈரோட்டின் சுற்றுவட்டாரம் முழுக்க மஞ்சள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி என்று விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே அத்தனை தொழில்களும் வளர்ந்து இருக்கின்றன. எண்ணெய் தயாரிப்பும், மஞ்சள் ஏற்றுமதியும் அவற்றில் பிரதானமான தொழில்கள்.

ஈரோட்டுக்கு ‘மஞ்சள் சிட்டி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே மஞ்சள் விலையை நிர்ணயிப்பது, ஈரோடுதான். கூட்டுறவு சொசைட்டிகள் விலையை முறைப்படுத்துகின்றன.

மஞ்சள் தொழிலில் இருக்கும் விஸ்வநாதனிடம் பேசியபோது, ‘‘மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மஞ்சள் மண்டி வைத்திருக்கிறார்கள். வருடத்துக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. அதில் இருபது கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விளையும் மஞ்சளை அப்படியே விற்பனைக்கு அனுப்புகிறார்கள். மற்றொரு முறையான காயவைத்து பாலீஷ் செய்தும் போகிறது. பவுடராக்கி அனுப்புவதும் உண்டு. தமிழகம் மட்டுமின்றி, மைசூர், கொள்ளேகால் பகுதியில் இருந்தும் மஞ்சள் இங்கே வருகிறது. இதில், 95% உணவுப்பொருள், 5% அலோபதி, சித்த மருந்தாகப் போகிறது’’ என்று புள்ளி விவரங்களை அடுக்கினார்.

ஜவுளித்தொழில்! லுங்கிகள், சேலைகள், மெத்தை விரிப்புகள் போன்றவை ஈரோட்டில் தயாராகி இந்தியா முழுவதும் செல்கிறது. ஜவுளித் தொழிலை நம்பியே பல்வேறு உபதொழில்களும் இங்கு இயங்கி வருகின்றன. பஞ்சாலை தொழிலாளர்களில் ஆரம்பித்து, தயாரான துணியைக் கட்டு கட்டி அனுப்பும் தொழிலாளர்கள் வரையில் பலருக்கும் சோறு போடுகிறது ஜவுளித்தொழில்.

இந்தத் தொழிலில் பல ஆண்டுகால அனுபவமுள்ள சதாசிவம் பேசும்போது, ‘‘வருடத்துக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வரை புழங்குகிறது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், திரிபுரா போன்ற வட மாநிலங்களுக்குத்தான் ஜவுளி அதிகம் போகிறது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவே உற்பத்தி சரியாக இருப்பதால் வெளிநாட்டு ஏற்றுமதி என்பது பெயரளவிலேயே நடக்கிறது’’ என்றார்.

பல்வேறு மாநிலங்களுக்கும் ஆர்டர் எடுக்கச் சென்று வருவதன் காரணமாக ஹிந்தி, ஒரியா என கலந்து கட்டி பேசுகிறார்கள் இங்கு உள்ளவர்கள். ஆனால், ஆங்கிலம்தான் பலருக்குக் கை கொடுக்க மறுக்கிறது.

சுற்றுவட்டாரத்தில் உள்ள அந்தியூர், கவுந்தபாடி, வெள்ளகோயில், சென்னிமலை போன்ற ஊர்களில் இருந்து துண்டுகள், மெத்தைவிரிப்பு போன்ற பொருட்கள் தயாராகி ஈரோட்டுக்கு வருகிறது. இதற்காக வாரந்தோறும் செவ்வாய், புதன் கிழமைகளில் ஈஸ்வரன்கோயில் வீதியில் உள்ள ஜவுளிச் சந்தை ஜோராக களைகட்டுகிறது.

பிரின்டட் லுங்கிகள் மற்றும் சேலைகள் ஈரோட்டில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன் பிரின்டிங் பட்டறைகள் ஈரோட்டில் இருக்கின்றன. ஆனாலும், நவீன தொழில்நுட்பத்துக்குள் போகாமல் இன்னமும் பழைய முறையையே பயன்படுத்துகிறார்கள்.

இதுபற்றி ‘அம்மன் ஸ்கிரீன் பிரின்டிங்’கின் சக்திவேல் பேசினார். ‘‘இதுமாதிரி கையால் செய்யும் பிரின்டிங் பட்டறை போடுவதற்கு ஐந்து லட்ச ரூபாய் முதலீடு இருந்தால் போதும். இதுவே, நவீன தொழில்நுட்பத்துக்கு போவதென்றால் கோடிக்கணக்கில் தேவைப் படும். அந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் பலமடங்கு உற்பத்திப் பெருக்கமும் லாபமும் பார்க்க முடியும்தான். ஆனால், உற்பத்திச் செலவு ஜாஸ்தியாகும். உள்நாட்டுத் தேவைக்கு மலிவான விலையில் பொருளைக் கொடுக்கவேண்டி இருப்பதால் இந்த பிரின்டிங் முறைதான் கட்டுபடியாகும்’’ என்றார்.

கிட்டத்தட்ட 12,000 பேர் இந்த பிரின்டிங் தொழிலால் நேரடியாக பலன் பெறுகிறார்கள். பிரின்ட் அடித்த பிறகு, துணியை அயர்ன் செய்தல், மடித்தல், பேக்கிங் என்று பல்வேறு பிரிவினருக்கும் வேலை கிடைக்கிறது.

ஜவுளித்தொழிலின் அடிப்படைத் தொழிலான சாயப்பட்டறைகளும் இங்கே நிறைய இயங்குகின்றன. ஆனால் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் ‘டையிங்’ மூலப்பொருட்கள் அகமதாபாத்தில் இருந்து வரவழைக்கப் படுகின்றன. டையிங் பொருட்களுக்கான ஃபேக்டரியை யாரேனும் இந்த ஊரில் ஆரம்பித்தால் திருப்பூர், கரூர் போன்ற ஊர்களுக்கும்கூட பயனுள்ளதாக இருக்கும்.

ஜவுளிக்கு அடுத்தபடியாக சக்கைபோடு போடும் தொழில், எண்ணெய் தயாரிப்பது. இங்கே எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் விளைவது முக்கியக் காரணம். உள்ளூர் தேவைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட எண்ணெய், அறுபதுகளுக்குப் பின்னால்தான் பெரிய தொழிலாக உருவெடுக்க ஆரம்பித்தது. எண்ணெய் எடுக்கும் எக்ஸ்பெல்லர் ( Expeller  ) மெஷின்கள் இருநூறுக்கு மேல் உள்ளன. எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலைகள் ஆறு இருக்கின்றன.

‘மிஸ்டர் கோல்டு’ என்ற பெயரில் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது சன்ராஜா ஆயில் இண்டஸ்ட்ரீஸ். இதன் எம்.டி-யான காந்திராஜனும், டைரக்டர்களில் ஒருவருமான ரமேஷ்குமார் நம்மிடம் பேசும் போது, ‘‘எங்கள் தொழிலைப் பொறுத்த அளவில் வெளிநாட்டு ஏற்றுமதி கிடையாது. உள்ளூர் தேவைக்கு மட்டுமே போகிறது. அதிக அளவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு இங்கிருந்து எண்ணெய் போகிறது. தினமும் எண்ணெய்த் தொழில் வர்த்தகம் மட்டுமே சுமாராக மூன்று கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது’’ என்றார்கள்.

சுத்திகரிப்பு ஆலைகளைச் சேர்ந்தவர்களில் சிலர் பிராண்ட் போட்டு விற்பனை செய்கிறார்கள். இன்னும் சிலர், வேறு பிராண்ட்களுக்காகத் தயார் செய்து அனுப்புகிறார்கள். எண்ணெயைக் கொதிக்க வைத்து சுத்திகரிக்கும் மேலைநாட்டுத் தொழில் நுட்பத்தை நம்மூரில் யாரேனும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது இங்குள்ள தொழிலதிபர்களின் எதிர்பார்ப்பு!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சோப் தயாரிக்கப் பயன்படும் எண்ணெயும் ஒருவித மெழுகும் உபபொருட்களாகக் கிடைக்கின்றன. அதனால், சோப் தயாரிக்கும் கம்பெனிகள் இங்கு அதிகமாக இருக் கின்றன. அந்த அளவுக்கு மெழுகை மூலப்பொருளாகக் கொண்ட கிரீஸ் தயாரிப்பு போன்ற தொழில் ஏதுமில்லை. இதுபோன்ற கம்பெனிகளைத் தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்.

எண்ணெய் தயாரிப்பின் இன்னொரு உப பொருளான புண்ணாக்கு, மாட்டுத் தீவனம் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவதால் குறைந்த அளவில் கால்நடை தீவனம் தயாரிக்கும் கம்பெனிகளும் இங்கே கடை விரித்து இருக்கின்றன.

எண்ணெய் தயாரித்து பல இடங்களுக்கு அனுப்ப உதவியாக அட்டைப்பெட்டி தயாரிப்பு, டின் தயாரிப்பு போன்ற கிளைத் தொழில்களும் ஈரோட்டில் முளைத்திருக்கின்றன. முன்பு இந்த பேக்கிங் பொருட்களை டெல்லி, மும்பை போன்ற ஊர்களில் இருந்து வாங்கினார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஈரோட்டில் பெரிய அக்ரஹாரம் என்ற பகுதியில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பெரிய அக்ரஹாரத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் எப்படி? என்று ஆச்சரியத்துடன் விசாரித்தால் வித்தியாசமான கதை ஒன்று வந்து விழுகிறது.

‘‘சாம்பப்பள்ளி என்ற கிராமத்தில் தோல் பொருட்களைச் செய்து வந்த பல இஸ்லாமியக் குடும்பங்கள் இருந்தன. அவர்களுடைய கிராமம் மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, அணையினுள்ளே போய்விட, அங்கிருந்து பெரிய அக்ரஹாரத்துக்குக் குடிபெயர்ந்தனர். ஆனாலும் அவர் களுடைய தொழிலை விடவில்லை. அதுதான் இப்போது நாற்பது தொழிற்சாலைகளாகப் பெருகியிருக்கிறது. இப்போது இஸ்லாமியர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தோல் தொழிலில் வேரூன்ற ஆரம்பித்துவிட்டனர். அக்ரஹாரத்து ஆட்கள் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர்’’ என்று தோல் தொழில் இங்கு வேரூன்றிய கதையைச் சொல்கிறார்கள்.

‘கே.கே.எஸ்.கே’ லெதர் ஃபேக்டரி முதலாளியான ரபீக் பேசும்போது, ‘‘சுமார் எழுபது வருஷத்துக்கு மேல இந்தத் தொழில் இருக்கு. இதன் மூலமா நேரடியா நாலாயிரமும், மறைமுகமா ஆறாயிரம் தொழிலாளர்களும் பலன் பெறுகிறார்கள். தோல்களை வாங்கி தரும் ஏஜன்ட்கள், தோலைப் பதனிட உதவும் கெமிக்கல், சுண்ணாம்பு போன்ற பொருட்களை சப்ளை செய்பவர்கள் என பலருக்கும் வேலைவாய்ப்பு தருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வர்த்தகம் ஒரு வருஷத்துக்கு நடக்கிறது. அதில் எண்பது கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நேரடியாகச் செல்கிறது. மீதமுள்ளவை ஷூ, பர்ஸ், கையுறை போன்றவை ஏற்றுமதி ஆகிறது.

இங்கு வாங்கப்படும் தோல் சென்னை, மும்பை போன்ற நகரங் களுக்குச் சென்று பொருட்களாக உருமாறி வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதை நாமே செய்தால் என்ன என்ற எண்ணத்தில் எங்கள் ஃபேக்டரியிலேயே ஒரு யூனிட் போட்டிருக்கிறோம். இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் பணியில் பலரும் ஈடுபட்டால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சீர்கேடு என்று குரல் எழுப்புபவர்கள் ஒருபக்கமும் முழுமையான சுத்திகரிப்பு முறைகளைச் செய்திருக்கிறோம். அதனால் எந்த மாசுபாடும் கிடையாது என்று விளக்கங்கள் இன்னொரு பக்கமும் கேட்கின்றன.

ஈரோட்டைப் பொறுத்த அளவில் தொழில்களுக்கும் உற்பத்திக்கும் பஞ்சமில்லை. ஆனால், வெளிநாட்டு ஏற்றுமதியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் ஈரோடு எங்கேயோ போய்விடும் என்பது ஊர்வல முடிவில் நாம் கண்ட உண்மை!