நடப்பு

ஷேர்லக் ஹோம்ஸ்

கைகூடிய கார்ப்பரேட் காதல்!

ப    தற்றமாக உள்ளே நுழைந்தார் ஷேர்லக். ‘‘எதனால் இத்தனை பதற்றம்?’’
என்று விசாரித்தபடியே ஆப்பிள் ஜூஸை நீட்டினோம்.

‘‘கொஞ்ச நாளாக தலைகாட்டாமலிருந்த மணிலிங்க் பூதம் கிளம்பிவிட்டது. தங்கத்தை தேடி அலையும் கூட்டம் இது என்கிறார்கள்.
தேன் ஒழுகப் பேசும் அவர்களது வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி விட்டில்பூச்சிகளாக மக்கள் விழத் தொடங்கிவிட்டார்கள்.
இன்று காலையில் ஒரு நபர் தன் ஆட்டோவை விற்று,
பணம் கட்டியிருக்கிறார்’’ என்ற ஹோம்ஸ்,
ஜூஸை ஒரு சிப் குடித்துவிட்டு, பேசத் தொடங்கினார்.

‘‘ம  யிலாப்பூரில் உள்ள ஒரு பெரிய ஸ்டார் ஓட்டல் அது. பணம் பண்ணும் கூட்டம் என்று அழைக்கிறார் களாம். நுழைவுக் கட்டணம் 25 ரூபாய். மேடையில் முன்னாள் உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் இருக்க, புது ஆட்களை அழைத்துவந்து மேடையில் இருப்பவர்களைக் காட்டி நம்பிக்கை தருகிறார்கள்.

பின்னர் மேடையில் இருப்பவர்கள், ‘இந்தத் திட்டத்தில் சேர்ந்து நான் இவ்வளவு சேர்த்தேன்... அவ்வளவு சேர்த்தேன்’ என்று முழங்கு கிறார்கள். அதன்பின் இந்தத் திட்டத்தை நடத்துபவர்கள் சார்பாகப் பேசும் ஒருவர், ‘இந்தத் திட்டத்தில் சேர தலைக்கு 25 ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் சேரும் எல்லாருக்கும் ஒரு தங்க நாணயம் அல்லது தங்க வாட்ச் பரிசாகத் தரப்படும். இதில் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

இது வெறும் தங்கமல்ல, ‘ஆன்டிக் வேல்யூ’ எனப்படும் புராதன மதிப்பு கொண்ட விலை மதிப்பில்லாத பொருள். அதை எவ்வளவு நாட்கள் வைத்திருக்கிறீர்களோ அவ்வளவு மதிப்பு கூடும்...’ இப்படி அறிக்கையாக அவர் வாசிக்கும்போதே இன்னொருவர் மேடையேறி, ‘அடுத்த பேட்ச் ஆட்கள் வந்துவிட்டார்கள். அதனால் மேலும் விளக்கம் தேவைப்பட்டால், உங்கள் டீம் லீடரை அணுகுங்கள்’ என்று அறிவித்துவிட்டு அறையை காலி செய்யச் சொல்கிறார்கள்.’’

‘‘அதாவது, அடுத்த செட் ஏமாளிகள் தயார்! என்று அர்த்தமாக்கும்..?’’

கூட்டத்துக்கு வந்த அப்பாவிகளிடம் விசாரித்தால், ‘நாம் 25 ஆயிரம் கட்டி உறுப்பினராகிவிட்டு அப்படியே நமக்கு கீழே உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்தால் கமிஷனாக பணம் கொட்டத் தொடங்கி விடும்’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள். எனக்கு ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தைப் போட்டுவிட்டு பனகல் பார்க்கில் கூட்டம் போட்டவர்களின் முகங்கள்தான் நிழலாடியது’’ என்றார் ஷேர்லக். அதே கவலையோடு தன்னுடைய அதிகார நட்பு வட்டத்தில் யாருக்கோ போன் போட்டு தகவலைச் சொல்லிவிட்டு நம் பக்கம் திரும்பினார்.

‘‘சென்னைக்கு வருவதாக இருந்த ‘செம் இந்தியா செமி கண்டக்டர் உற்பத்தியாலை’ ஹைதராபாத்துக்கு போய்விட்டதே! என்ன அதன் பின்னணி?’’ என்றோம்.

‘‘நம்மூரில் அனல் பறக்கும் அரசியலைப் பார்த்து அந்த என்.ஆர்.ஐ-க்கள் அரண்டு போய் விட்டதாகக் கேள்வி.

என்ன முடிவெடுப்பது என்று அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளே நுழைந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிட்டார்’’ என்ற ஷேர்லக் ஹோம்ஸ், ‘‘இந்த விஷயத்தில் கர்நாடக அரசும் கோட்டைவிட்டு விட்டதாக புலம்பல் கேட்கிறது. தெரியுமா?’’ என்று கூடுதல் தகவலைச் சொன்னார்.

‘‘இந்தியாவுக்கு வர விரும்பிய ‘செம் இந்தியா’ நிறுவனம் நான்கு விஷயங்களை அடிப்படைத் தேவைகளாகக் கேட்டதாம். ஒரே இடத்தில் 1200 ஏக்கர் இடம், போதுமான தண்ணீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதி என்ற தன் கோரிக்கைப் பட்டியலைக் கொடுத்ததாம் செம் இந்தியா.

சர்வதேச விமான நிலையம் அருகில் இல்லை என்பதால் போக்குவரத்து வசதியில் கர்நாடகா வாய்ப்பை இழக்க... தமிழக அரசுக்கு தண்ணீர் பிரச்னை என்கிறார்கள். கீழ் மட்டத்தில் இருக்கிற சில அரசியல் தலைகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வைத்த பதில் கோரிக்கைகளும் அவர்கள் தெறித்து ஓடக் காரணம் என்று ஒரு தகவல் இருக்கிறது.

ஆனால், ஆந்திர ரெட்டிகாரு 15 நிமிடத்தில் விமானம் ஏறும் அளவுக்கு இடம் தந்ததோடு எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டாராம்’’ என்றார் ஷேர்லக்.

‘‘தேர்தல் நேரத்தில் நம்மூர் கட்சிகள் சாதனையைச் சொல்லிக்கொள்ள வழியில்லாமல் போய்விட்டதே...’’ என்று நாம் சொல்ல,

‘‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள். ‘இந்த கம்பெனி வராமல் போனதற்கு யார் காரணம் என்று தேர்தல் நேரத்தில் பட்டியல் போட்டாலும் போடுவார்கள். உங்களுக்கு ஏன் இந்த அரசியல் கவலை..?’’ என்று நமுட்டுச் சிரிப்போடு சொல்லிவிட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டார்.

‘‘என்ன... வேலன்டைன் பார்ட்டி ஏதாவது இருக்கிறதா... படபடப்பாக இருக்கிறீரே?’’ என்று சீண்டினோம்.

லேசாக மீசையை முறுக்கிக்கொண்டு, ‘‘என் வேலன்டைன் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு எதற்கு? கார்ப்பரேட் ஏரியாவில் ஒரு காதல் கைகூடி கல்யாணத்தில் முடிந்திருக்கிறது, அதைப்பற்றிக் கேளுங்கள்’’ என்று அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

‘‘ஹைதராபாத் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் வாரிசும், சென்னையில் உள்ள சிமென்ட் கம்பெனி நிறுவனர் பேத்தியும் காதலித்தார்களாம். இருதரப்பிலும் ஓகே ஆக, சீக்கிரமே கல்யாணம்தானாம்’’ என்ற ஷேர்லக்,

‘‘நண்பர் ஒருவரைத் சந்திக்க பீச் ரிசார்ட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தேன்’’ என்று நம் முகத்தை குறுகுறுப்பாகப் பார்த்த ஷேர்லக், வெள்ளி மணலாய் இருந்த தன் கலர் தலைமுடியைக் கோதிவிட்டபடியே சொன்னார்.

‘‘அந்த ரிசார்ட்டே ஒரு செய்திதான். சாஃப்ட்வேர் துறையில் கிராஃபிக்ஸ் வித்தை செய்கிற சென்னை நிறுவனத்துக்குச் சொந்தமானது அந்த பீச் ரிசார்ட். அதை சென்னையின் பிரபல ஹோட்டல் நிறுவனம் விலைக்கு வாங்கி இருக்கிறது’’ என்றவர், ‘‘வரட்டுமா’’ என்று சொல்லிவிட்டு, கிளம்பிவிட்டார்.