நடப்பு

விருந்தா... மருந்தா..? பட்ஜெட் பராக்!

‘பட்ஜெட் என்பது மிகவும் ரகசியமான விஷயம், ரிலீஸ் தினத்துக்கு முன்னால் வெளியில் சொல்லக்கூடாது’ என்றெல்லாம் பாதுகாக்கப்பட்டது அந்தக்காலம். கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் பல விஷயங்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிடுகின்றன.

இ  ந்த ஆண்டுகூட போஸ்ட் ஆபீஸில் மாதாந்திர வருமானம் கிடைக்குமாறு சேமிக்கப்படும் தொகைக்கு இறுதியில் வழங்கும் 10% போனஸ் தொகையை நிறுத்தும் அறிவிப்பை, பிப்ரவரி 10\ம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதனால் 9.2 சதவிகிதமாக இருந்திருக்கவேண்டிய நிகர வருமானம், 8 சதவிகிதமாகக் குறைந்துபோகும் வாய்ப்பிருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு சேமிக்கக் கூடிய பணத்தை மூன்றாவது ஆண்டுக்குப்பின் எடுக்க முயற்சித்தால் அதற்கு 1% அபராதமும் விதிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது நிதியமைச்சகம்.

மார்ச் 1-ம் தேதி முதல் நீண்ட தூர தொலைபேசி கட்டணங்கள் 1 நிமிடத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே என்ற அறிவிப்புகூட பட்ஜெட் வரை காத்திருக்காமல் இப்போதே வெளியாகி இருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து ஆலோசனை சொல்ல நியமிக்கப்பட்டுள்ள சி.ரங்கராஜன் குழு அறிக்கைகூட, பட்ஜெட்டுக்கு முன்னரே இறுதியாகி, அறிவிக்கப்படக்கூடும்.

இப்படிப்பட்ட அறிவிப்புகளெல்லாம் ஒருபுறம் வெளியாகிக் கொண்டிருந்தாலும் பட்ஜெட்டுக்கென்றே சில விஷயங்களை நிதியமைச்சர் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக ‘கடந்த பட்ஜெட்டில் ‘எஜுகேஷன் செஸ்’ என்ற பெயரில் கல்வித்துறைச் செலவுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டியதுபோல, இந்த பட்ஜெட் டில் மருத்துவத்துறை செலவுகளைச் சமாளிக்க ‘ஹெல்த் செஸ்’ என்ற வரிவிதிப்பு முறையை அறிவிக்கலாம்’ என்ற பரிந்துரை பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது இப்போதைக்கு வருவது சந்தேகமே! காரணம், செங்கொடி தோழர்களின் எச்சரிக்கை! அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்தல் வருகிறதே!

சமீபத்தில் நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசிய கம்யூனிஸ்ட்டுகள், பங்குச் சந்தை வர்த்தகம் பற்றித்தான் விவாதித்திருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய கால மூலதன லாப வரியாக இப்போது இருக்கும் 10% வரியை அதிகரிப்பதோடு, நீண்டகால மூலதன லாப வரியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் கம்யூனிஸ்ட்டுகளின் பிரதான கோரிக்கை. பங்குச் சந்தை என்பது ப.சி. ஆர்வம் காட்டும் துறை என்பதால் இது நடப்பது சாத்தியமல்ல என்பது துறைசார்ந்தவர்களின் கருத்து!

விவசாயத்துறை மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைகளில் ஒதுக்கீடு குறித்தும் பெரிய அளவிலான கோரிக்கைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தரப்பினரும் நிதியமைச்சரைச் சந்தித்து இதுபோல பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாராகும் என்று தெரிகிறது.

மேலும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..?

கடந்த பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் சிக்னல் தந்த இ.இ.டி. என்ற வரி வசூல் முறை அமலாவது கொஞ்சம் தள்ளிப்போகலாம். பலரும் தேர்தலைக் காரணம் காட்டினாலும் தெளிவான அணுகுமுறை இன்னும் தயாராகாததுதான் இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் தொலைதொடர்புத் துறைக்கான தயாரிப்புகளுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும் என தெரிகிறது. இந்தச் சலுகை, வெளிநாட்டு இறக்குமதிப் போட்டியைச் சமாளிக்க உதவும். இத்துடன் நோக்கியா போன்ற நிறுவனங்களின் முதலீட்டைத் தக்கவைக்கவும் இன்னும் சிலரை நம் நாட்டில் முதலீடு செய்ய ஈர்க்கவும் இச்சலுகைகள் அவசியம்.

தற்போது 10% என விதிக்கப்படும் ‘சர்வீஸ் டேக்ஸ்’ மேலும் சில சேவைகளுக்கு விஸ்தரிக்கும் திட்டங்கள் இருந்தாலும், சிலவகை சேவைகளுக்கு அதிகமாகவும், மற்றவற்றுக்கு குறைவாகவும் விதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பெங்களூர் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸுக்கு கிடைத்த ஒதுக்கீடு போல இன்னும் சில அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

சிறுதொழில் பிரிவுக்கான தொழில் பட்டியலில் சின்ன மாற்றங்கள் வரலாம்.

டெக்ஸ்டைல்ஸ், அதுதொடர்பான மெஷினரி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் எதிர்பார்க்கலாம்.

சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீனமயமாதல், இயந்திர மயமாக்கல் போன்ற வளர்ச்சிக் காக தோல் தொழிற்துறை யினருக்கு மேலும் சில சலுகை களுக்கு வாய்ப்பிருக்கிறது.

கடல் உணவுப் பொருட்கள் மற்றும் இந்தியாவுக்கே உரித்தான நறுமண பொருட்கள் சந்தை யில் ஏராளமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதால் இந்தத் துறைகள் சலுகைகள் பெறும் சாத்தியங்கள் இருப்பது தெரிகிறது.

சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் ‘பாரத் நிர்மான்’ என்ற கிராமப்புற அடிப்படை கட்டமைப்புத் திட்டம் இந்த ஆண்டும் தனி ஒதுக்கீடு எதுவும் இல்லாமல் மற்ற பல திட்டங்களின் ஒதுக்கீடுகளைக் கொண்டே விவாதத்துக்குள்ளாகும் எனத் தெரிகிறது.

வருமான வரிச்சலுகை வழங்கும் செக்ஷன் 80சி பிரிவின் கீழ், தற்போது வழங்கப்பட்டு வரும் மொத்த சலுகைத் தொகை 1 லட்ச ரூபாய் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்பதில் சிறுசிறு மாற்றங்கள் வரும் என தெரிகிறது. உதாரணமாக, வங்கி டெபாசிட், நிறுவனங்களில் செய்யப்படும் டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் இந்தப் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. அல்லது இந்த 1 லட்ச ரூபாய் உச்சவரம்பிலேயே மாற்றங்கள் வரலாம்.

கறுப்புப் பணத்தை தோண்டி எடுக்கும் புதியதொரு திட்டம் வைத்திருக்கிறாராம் நிதி அமைச்சர். அந்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று ஒரு தகவல் சுற்றுகிறது. வங்கியில் இருந்து பெரும் தொகையை எடுப்பதன் மீது விதிக்கப்பட்ட வரியையட்டி, நிதியமைச்சகம் ஏராளமான தகவல்களைத் திரட்டிவைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில்தான் புதிய திட்டம் தயாராகிறதாம். கடந்த ஆண்டு வைக்கப்பட்ட கண்ணிவெடி, இந்த ஆண்டு தன் வேலையைக் காட்டும் போலிருக்கிறது.

டிபன் கேரியர் மூடி இருக்கிறது. மேலே சொன்னவை எல்லாம் மூடியிருக்கும் கேரியரை வாசம் பிடித்ததில் கசியும் செய்திகள் தான்.

28-ம் தேதி பந்தியில் ப.சி., எதைப் பறிமாறப் போகிறார்..? கேரியரைத் திறந்தால்தான் தெரியும், உள்ளே இருப்பது விருந்தா... மருந்தா என்று!

தேய்மானத்தை உயர்த்திக் கொடுங்கள்!

சனிக்கிழமையும் சந்தை வையுங்கள்!

புதிய வரிக்கு சில யோசனைகள்!

ஃபிரின்ஜ் தொல்லை தீருமா..?

வங்கி தண்டத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்!

ரெடிமேட் கதவுகளை ஆதரியுங்கள்!

அனைவரும் சூப்பர் வருமானம் பெற ஐடியா!

சலுகையைக் குறைப்பது நல்லது!