நடப்பு

பா  ல் கிடைக்கவில்லை... பஸ் பிடித்து ஊருக்குச் செல்ல முடியவில்லை என்றெல்லாம் பொதுஜனங்கள் அவதிப்பட்டது ஒருபக்கம் என்றால் மார்ச்-31\ம் தேதியன்று பந்ந் நடத்தி, பிஸினஸ் உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர் அரசியல் கட்சியினர். கார்ப்பரேட் உலகுக்கு மார்ச் 31 என்பது மிக முக்கியமான நாள். நிதியாண்டு முடியும் அந்த இறுதி நாளில் நொடிகளை எண்ணியபடி வேலைகள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் எதிர்பாராமல் வந்த பந்த், பல நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் பந்த் பற்றி தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொழில்துறைகளில் இருக்கும் பிரபலங்களிடம் கேட்டபோது...

தமிழ் வர்த்தக சங்கத்தின் கௌரவச் செயலாளர் ராஜ்குமார்:

‘‘உற்பத்தி, போக்குவரத்து, வியாபாரம் எல்லாம் முடங்கிப் போனதால் பந்த் தினத்தன்று ஏற்பட்ட இழப்பு சுமார் 750 கோடி ரூபாய். இந்த வகையில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பாதிப்பு அதிகம்தான்.

இன்று பல துறைகளிலும் வெளிநாட்டினரின் முதலீடு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அவர்களுடைய பார்வையில் குஜராத், மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுடைய ஆர்வத்தைக் குறைத்துவிடும். பந்த் நடந்ததின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், ஏற்பட்ட பாதிப்பு அதிகம்.’’

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருப்பூர் சக்திவேல்:

‘‘பந்த் அன்று திருப்பூரில் மட்டும் பின்னலாடை ஏற்றுமதிக்கான உற்பத்தி இழப்பு 50 கோடி ரூபாய். இதுபோன்று தமிழ்நாட்டில் பல வகைகளிலும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசுக்கும் தியேட்டர்கள், வாகனப் போக்குவரத்து மூலம் வருமானம் இழப்பு என ஏற்பட்டிருக்கிறது. எனவே, கால அவகாசம் கொடுத்து திட்டமிட்டு அறிவித்திருக்கலாம்.’’

மதுரை சிறு தொழில்கள் மற்றும் குறுந்தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி:

‘‘சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 120 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நிதி இறுதியாண்டின் இறுதி நாள் என்பதால், கையில் இருக்கும் ஸ்டாக் கணக்குகளைச் சரிபார்த்து முடிக்கும் நேரம். வேலைக்கு ஆட்கள் வரமுடியாத நிலை. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால் பெரிதும் சிரமப்பட்டுப் போனார்கள் தொழில் துறையினர்.

அரசு, தொழில்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் வேளையில் இத்தனை அவசரமாகச் செய்திருக்கத் தேவையில்லை. எதிர்ப்பைத் தெரிவிக்க உண்ணாவிரதம் போன்ற மக்களைப் பாதிக்காத வேறு வழிகளை அணுகியிருக்கலாம்.’’

தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ரத்னவேலு:

‘‘பந்த் நடப்பதை தொழில்துறையினர் யாரும் வரவேற்பதில்லை. அதற்கான நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம். அதற்காக அனைவரும் பாதிக்கப்பட வேண்டுமா என்ற ஒருகேள்வி எழுகிறது.

குறிப்பாக தொழில்துறையில், ஷிஃப்ட் முறையில் உற்பத்தி என்பது தொடர்ந்து சங்கிலித்தொடர் போல நடந்துகொண்டிருக்கும். இதில் எங்காவது ஒரு இடம், ஒரு நாள் வேலை நிறுத்தப்பட்டால், அதன் பாதிப்பு அடுத்தடுத்து நிறைய இருக்கும். இதுதவிர, சுற்றுலா என்பது தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறை. இந்நிலையில், வெளிநாட்டு, பிற மாநிலத்து சுற்றுலாப்பயணிகள் முன்னரே திட்டமிட்டு, வந்திருப்பார்கள்.

உணவு கிடைக்காமல், உரிய நேரத்தில் எங்கும் செல்ல முடியாமல், பொருட்கள் கிடைக்காமல் தவிக்க வேண்டியதும் இருக்கிறது. எனவே, பந்த் என்பதை தவிர்க்க முடியாத நிலையில் கடைசி முயற்சியாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும், அதுவும் முன்னரே திட்டமிட்டு.’’

எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதற்காக பந்த் நடத்துவது சரியா தவறா என்பது விவாதமல்ல... அதனால், ஏற்படும் பாதிப்புகளை எப்படி ஈடு செய்வது என்பதுதான் கேள்வி. நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம். ஆனால் அவற்றை முன்னரே திட்டமிட்டப்பட்டு, முன்னேற்பாடுகளைச்செய்ய கால அவகாசம் கொடுத்திருக்கலாம்.

இயந்திரத்துடன் இயந்திரமாகச் சுழன்று கொண்டிருக்கும் மனிதனின் உழைப்பு, 24 மணிநேரம் போதாது என ஓடிக்கொண்டிருக்கும் தொழில்துறையினர் அனைவருக்கும் இந்த பந்த் ஒரு சறுக்கல்தான்.