‘‘ தொ  ழிற்சாலைகளில் பண ரீதியாகவும் பயன் பாட்டு ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகளைச் சந்திக்க வைக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைச் சொல்லி விட்டீர்கள். இன்னும் முக்கியமான மூன்றைப் பற்றிச் சொல்லவில்லையே...” என்று நண்பர் எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சொல்லாமல் விடமுடியுமா என்ன?

தொழிற்சாலைகளை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு, அதனால் முதலீட்டாளர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் பதில் சொல்வதில் சிக்கல் ஏற்படும்போது கைகொடுக்கும் சேவகனாக வரும் இன்ஷூரன்ஸ், தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய பிறகும் காவலனாகத் துணை நிற்கிறது.

தொழிற்சாலை ஆரம்பித்த பிறகு என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது? தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்து நிர்வாகம் செய்துவந்தாலும், தொழிற்சாலையின் தயாரிப்புப் பணிகளின்போது சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஏதாவது சிரமங்கள் ஏற்படலாம். உதாரணமாக, ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நதிநீர் பாழ்பட்டு, அதனால் விவசாயத்திலும் பயன்பாட்டிலும் பல பிரச்னைகள் ஏற்படலாம். இதையடுத்து சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் ஆலை மீது நஷ்டஈடு கோரலாம்.

இதேபோல் ஆலையில் இருந்து வெளியாகும் புகை உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகப் புகார்கள் எழலாம். இதுபோன்ற சமயங்களில் ஆலைகள் நஷ்டஈடாகப் பெரும் தொகையைக் கொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்தச் சமயத்தில் கைகொடுக்கும் பாலிசிதான் ‘பப்ளிக் லயபிலிட்டி பாலிசி’. பொதுவான சமூகரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் பாலிசி இது! முன்பு சொன்னது போன்ற ஒரு நிலைமை கம்பெனிக்கு ஏற்பட்டால் கடன் கொடுத்த வங்கிகள், கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள், பார்ட்னராக இருக்கும் கம்பெனிகள், ஷேர் வாங்கியிருக்கும் முதலீட்டாளர்கள் என எல்லோருமே பணரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் நஷ்டஈடு கொடுக்கவேண்டி வரலாம். அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்திருக்கும் கம்பெனி அதைத்தாண்டி இப்படி ஒரு சிக்கலைச் சந்திக்க நேரும்போது, இந்த பாலிசி கைகொடுக்கும்.

இதேபோல ‘ப்ராடெக்ட் லயபிலிட்டி பாலிசி’ என ஒன்று இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்பட்ட பொருள், மக்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பை உண்டாக்கிவிட்டால், அப்போது இந்த பாலிசி உதவிகரமாக இருக்கும். உதாரணமாக, ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனி மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து சந்தைக்கு அனுப்புகிறது. அந்த வண்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது தயாரிப்புக் குறைபாட்டினால்தான் என்பது நிரூபணமானால், கம்பெனி நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில் ‘ப்ராடெக்ட் லயபிலிட்டி பாலிசி’ கம்பெனிக்கு பாதுகாப்புக் கொடுக்கும். இந்த பாலிசி மருந்து கம்பெனி போன்ற கம்பெனிகளுக்கு மிகவும் கைகொடுக்கும். இப்படிப்பட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நஷ்டஈடு கொடுக்க வழியில்லாமல் கம்பெனியையே இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படலாம்.

மூன்றாவதாக கம்பெனியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்வதால், ஏற்படும் விளைவுகளில் இருந்து கம்பெனியைக் காப்பாற்றும் பாலிசி ஒன்று இருக்கிறது. அதற்கு ‘டைரக்டர்ஸ் அண்ட் ஆபீசர்ஸ் லயபிலிட்டி பாலிசி’ என்று பெயர். இதை ‘எக்ஸிகியூட்டிவ்ஸ் அண்ட் ஆபீசர்ஸ் லயபிலிட்டி பாலிசி’ என்றும் சொல்வார்கள்.

கம்பெனியின் ஊழியர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இயக்குநர்கள் போன்றவர்கள் செய்யும் தற்செயலான அல்லது தவறான செயல்கள் கம்பெனிக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும். உதாரணத்துக்கு, கம்பெனி கணக்கில் தவறு அல்லது மோசடி செய்வது, கம்பெனிச் சொத்தைத் தவறாக உபயோகிப்பது, கம்பெனியின் சார்பாக பொய் வாக்குறுதி கொடுப்பது போன்ற செயல்களால் கம்பெனி நடவடிக்கையே ஸ்தம்பித்துப் போய்விடும்.

அதேபோல் தகுந்த காரணம் இல்லாமலோ அல்லது சட்டத்துக்குப் புறம்பான வகையிலோ, வேலையை விட்டு நீக்குவது அல்லது பதவி உயர்வு கொடுக்காமல் இருப்பது, வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவையும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டால், பெரிய அளவில் நஷ்டஈடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

இப்படி நடப்பதும் கம்பெனிகளுக்கு பெரிய ரிஸ்க்தான். நஷ்டஈடு கொடுப்பதால் ஏற்படும் பணநஷ்டம் ஒருபுறமிருக்க, இதன்தொடர்ச்சியாக நல்ல ஊழியர்கள் வேலை செய்வதற்கேகூட யோசிக்கும் நிலை ஏற்படலாம் அல்லவா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கம்பெனியின் நற்பெயருக்கும் வளர்ச்சிக்கும் அது இடையூறாக அமைந்துவிடும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பணரீதியாகக் கைகொடுக்கும் இந்த ‘டைரக்டர்ஸ் அண்ட் ஆபீசர்ஸ் லயபிலிட்டி பாலிசி’யை வழங்கும் நிறுவனங்கள், சில சேவைகளையும் அளிக்கிறது. எந்த மாதிரியான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது, அவற்றைத் தடுக்க கம்பெனிகள் என்னவெல்லாம் செய்யலாம் என்பது போன்ற ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுக்கும். அதை ஏற்றுக்கொண்ட பிறகே பாலிசி கொடுக்கும். ஆலோசனைகளை ஏற்று செயல் படாவிட்டால் அதிக பிரீமியம் கொடுக்க வேண்டியதாகிவிடும்!

இந்த மூன்று வகை பாலிசிகளுமே ஸ்பெஷல் வகையைச் சேர்ந்தவை. எல்லா பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுமே இந்த வகை பாலிசிகளைக் கொடுக்கும். சில நிறுவனங்கள் இதில் ஸ்பெஷலிஸ்ட்டாகவே இருக்கின்றன! பாலிசி கவரேஜ், பிரீமியம், கண்டிஷன்கள் அனைத்துமே நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்புதான்.

‘‘புகழ் பெற்றவர்கள் தங்களது உடல் உறுப்புகளுக்கு ஸ்பெஷலாக பாலிசி எடுத்துக் கொள்கிறார்கள். மெக்கானிக் வேலை பார்த்துவரும் எனக்கு என் கைகள்தான் மூலதனம். அவர்களைப் போல நானும் என் கைகளுக்கு ஸ்பெஷலாக இன்ஷூரன்ஸ் செய்துகொள்ள முடியுமா?’’

\ கே.செல்வம், சென்னை\35.

‘‘தா  ராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது விபத்து ஏற்பட்டு உங்கள் கைகள் பாதிக்கப்படும்போது, நீங்கள் உழைக்க முடியாமல் போய்விடுகிறது என்றால், அதற்காக பாலிசி எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய உழைப்பால் என்ன வருமானம் வரும் என்று நீங்கள் பாலிசி எடுக்கும்போது சொல்லியிருக்கிறீர்களோ, அந்தத் தொகையை இன்ஷூரன்ஸ் கம்பெனி கொடுத்துவிடும்.

பிரபலங்கள் தங்கள் உடல் உறுப்புகளை பல கோடிகளுக்கு இன்ஷூர் செய்திருப்பார்கள். உதாரணமாக, கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கைகள்தான் முக்கியம். கைகள் இல்லாவிட்டால் அவரால், கிரிக்கெட் ஆடமுடியாது. அதனால், அவருக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். எனவே, அவர் கைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு இன்ஷூர் செய்துகொள்ளலாம்.

உங்களுக்கு இழப்பு மாதம் இரண்டாயிரம் ரூபாயாக இருக்கக்கூடும். அதற்கு இதுபோன்ற ஸ்பெஷல் பாலிசிகளை நாடுவதைவிட பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியை எடுக்கலாம். அதில், ஊனமுற்றால் க்ளைம் வேண்டும் என்கிற பிரிவையும் சேர்த்து எடுக்கவேண்டும். பாதிப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு க்ளைம் கொடுத்து விடுவார்கள்.’’

‘‘இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினியாக ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரை நியமிக்கமுடியுமா?’’

-ஆர்.சுலக்ஷனா, மதுரை.

‘‘மு  டியுமே..! பாலிசிதாரருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அந்த பாலிசித் தொகை யாரைப் போய்ச் சேரவேண்டும் என்பதற்குதான் நாமினி விவரம் கேட்கப்படுகிறது. எனவே ரத்த சம்பந்தமாக இல்லையென்றாலும் நியமிக்கலாம்.’’

‘‘ஏற்கெனவே ஒரு என்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். இதில் மெடிக்கல் ரைடர் பாலிசியை இணைக்கவில்லை. இப்போது அதை என் பாலிசியுடன் சேர்த்துக்கொள்ள முடியுமா?’’

\ எஸ்.செபாஸ்டியன், திருச்சி.

‘‘மு  டியாது. பாலிசியை எடுக்கும்போதே ரைடர்களையும் சேர்த்துதான் எடுக்கவேண்டும். தனியாக இணைக்கவும் முடியாது. ரைடர்களை மட்டும் தனியாக எடுக்கவும் முடியாது. இப்போது நீங்கள் விரும்பும் மெடிக்கல் ரைடர், வேறு ஏதாவது தனியான பாலிசியில் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், இந்த மெடிக்கல் ரைடருக்காக புதிதாக ஒரு பாலிசியை எடுக்க வேண்டியது தான்.’’