வேலை

இ  ந்த மாதம் 28, 29 மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடக்க உள்ளது. இந்த கண்காட்சியில் பத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்ய உள்ளது.

பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பைப் பெறலாம். இதில் கலந்து கொள்ளும் முன்பாக  new.tmifirst.com/hf6/hfregistration.phpx  என்ற இணையதளத்தில் பெயர், கல்வித்தகுதி, ஊர், முகவரி, தொலைபேசி எண் போன்ற உங்களைப் பற்றிய அடிப்படைத் தகவலை பதிவு செய்துகொள்ளலாம்.

பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எஸ்ஸி படித்தவர்கள், தற்போது இறுதித் தேர்வு எழுதுகிறவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். கண்காட்சியின் போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவை நடக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அப்போதே வேலைக்கான ஆர்டர் கிடைக்கும்!

ஐ  .டி. வேலை வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் போகவேண்டும் என்றிருந்த காலம் மாறிவிட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் ஐ.டி. வேலைவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

விரைவில் கோயம்புத்தூரில் ஐ.டி. பார்க் வர உள்ளதால், அங்கு இப்போதே ஐ.டி. நிறுவனங்களும், பி.பீ.ஓ. நிறுவனங்களும் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இதனால் ஐ.டி. தொடர்பான பல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

பி.பீ.ஓ. துறையில் உள்ள ‘பெரட் சிஸ்டம்’ நிறுவனம் கோவையில் தன் அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. இதன் சி.இ.ஓ\வான வர்த்தமன் ஜெயின், ‘‘எங்கள் சென்னை அலுவலகத்தில் 3,000 பேர் வேலை பார்க்கிறார்கள். கோவையில் கிளை அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம். தற்போது இங்கு முன்னூறு பேர் வேலை பார்க்கிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் முன்னூறு பேரைத் தேர்வு செய்ய உள்ளோம். நாங்கள் ஹெல்த் சம்பந்தமான பிராஜெக்ட்களை செய்துவருவதால் பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்டரி, நர்ஸிங், பிசியோதெரபி, பயாலஜி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறோம். மாதச் சம்பளமாக 12 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எங்கள் கால்சென்டர் நிறுவனத்திலும் ஆட்களைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறோம். பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மாதச் சம்பளம் தருகிறோம். நன்றாகத் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தால் கூட வேலை வாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும்’’ என்றார்.

‘‘வா  ய்ப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தேவையான ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்றார் ஐ.டி. துறையில் அவுட்சோர்ஸிங் ஃபிராடக்ட் டெவலப்மென்ட் பணிகளைச் செய்துவரும் ஆஸ்பையர் நிறுவனத்தின் மனித வள மேலாளர் கல்பனா சீனிவாசன்.

‘‘இப்போது பட்டப்படிப்பு முடித்து வெளிவருகிறார்களுக்கு ஜாக்பாட் பரிசு போல் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. படிக்கும்போதே கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றித் தெரிந்து வைத்திருந்தாலே போதும். நல்ல கம்யூனிகேஷன் திறன் இருந்தால், பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் கொத்திக் கொண்டு போகத் தயாராக இருக்கின்றன. இதற்குக் காரணம் நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதுதான். இதனால் வேலைக்குத் தேர்வு செய்த பின்னர் பயிற்சி கொடுத்து, தங்களுக்குத் தேவையான பணி செய்பவர்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள். மேலும் நிறுவனங்களும் தொடர்ந்து விரிவாக்கம் செய்துகொண்டிருப்பதால் வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. எங்கள் நிறுவனமும் விரிவாக்கப் பணி செய்து வருவதால் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் வேலையும், இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சாஃப்ட்வேர் டெஸ்டிங் வேலையும், பி.பி.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு நிர்வாக வேலைகளும் காத்திருக்கின்றன’’ என்றார் கல்பனா சீனிவாசன்.