இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

##~##

  'அங்கிள்... எங்க காலேஜுல ஒரு ஃபங்ஷன் வச்சிருக்கோம். நீங்கதான் வந்து பேசணும்...’ பரபரவென வந்து கேட்டான் விக்கி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞாபகமிருக்கா, ஆரம்ப அத்தியாயங்களில் நாம் பார்த்த அதே விக்கிதான்!  

'நான் வர்றதுல ஒண்ணும் பிரச்னை இல்லை... ஆனா, நானேதான் வரணுமா..? பி.எஸ்.ஆர் மாதிரி ஒரு பெரியவரைக் கூப்பிட்டா பெட்டரா இருக்குமே..!’

'கரெக்ட்தான் அங்கிள். ஆனா, நாளைக்கு நடக்கப்போற ஃபங்க்ஷனுக்கு இன்னைக்குப்போயி கூப்பிட்டா நல்லா இருக்குமா..?’ என்றான் சிரித்தபடி.

'நாளைக்கா..? அடப்பாவி’ என்று அலறினேன். ஆனாலும், பேசுவதற்கு  ஒப்புக்கொண்டேன்.

'உங்களுக்குத் தோணறதைப் பேசுங்க சார். ஆனா, ஃபோகஸ் மட்டும் பி பிரிபேர்டு டு ஃபேஸ் தி

சேலஞ்ச்ங்ற மாதிரி இருக்கட்டும்’ என்றார் கல்லூரியின் பேராசிரியர். ஓகே சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தேன்.

எதிலிருந்து பேசுவது? என்று யோசனை. கிரிக்கெட் இருக்க பயமெதற்கு...! பேச ஆரம்பித்தேன்.

''சென்னையில லோக்கல்ல பாபுலரான ரெண்டு டீம், மேட்ச் விளையாடறாங்க. ரெண்டு டீமுக்கும் நடுவுல கடுமையான போட்டி.

டாஸ் போடற நேரமும் ஆயிடுச்சி. பார்த்தா.., ஒரு டீம்ல ஒரு ப்ளேயர் குறைவா இருக்கு. 'மச்சி, ரொம்ப ஸாரி, மேட்சுக்கு வரமுடியாதுபோல இருக்கு... எப்படியாவது மேனேஜ் பண்ணிக்குங்க’ன்னு போன் வந்துடுச்சி. என்ன பண்ணலாம்..? வேற யாரையாவது டீம்ல சேர்த்துக்கலாம்னா, எதிர் டீம் கேப்டன் ஒத்துக்கமாட்டேங்கறாரு. கடைசியில, போனா போகுதுன்னு வேடிக்கை பார்க்கவந்த ஒரு சின்ன பையனைச் சேர்த்துக்க அனுமதி குடுக்குறாரு. எல்லாரும் 20, 25-ல இருக்க, இவன் மட்டும் 12 வயசு பொடியன்!

டாஸ் போட்டாங்க. எதிர் டீம் கேப்டன் ஜெயிச்சுட்டான். இந்த டீமை பேட் பண்ண சொல்லிட்டான். மேட்ச் ஆரம்பமாச்சு. ஃபர்ஸ்ட் ஓவரு. எதிர் டீம்ல ஒரு ஃபாஸ்ட் பௌலர். படு ஃபாஸ்டா பந்து வீசுறவன். 'டப்’புன்னு ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டுது. பார்த்தா, ஸ்டெம்பு சாய்ந்திருந்தது.

எதிர்கொள்!

அடுத்து ஒருத்தன் வந்தான். பந்து எங்கே பட்டு, எப்படிப் போச்சுன்னே தெரியலை. 'ஸ்லிப்’ல கேட்ச். ஃபர்ஸ்ட் ஓவர்லயே நாலு விக்கெட் அவுட்.

ரெண்டாவது ஓவரை 'பிரச்னை’ இல்லாம சமாளிச்சு ஒரு ரன் எடுக்கறாங்க. அடுத்து, மூணாவது ஓவரு. ஏற்கெனவே நாலுபேரை அவுட்டாக்கிய அதே ஃபாஸ்ட் பௌலர்தான், திரும்பவும் வெறியோட பந்தை வீசுறான். 'டப்’. அஞ்சாவது விக்கெட்டும் போயிடுச்சி. அதாவது, பாதி டீம் அவுட் ஆயிடுச்சி. இன்னமும் இந்த ஓவர்ல, அஞ்சு பந்துகள் மீதி இருக்கு.

இப்ப, பொடியனை பேட்டிங் செய்ய டீம் கேப்டன் கூப்பிட்டாரு..? அவனும் போய் நிக்கறான். இப்ப, அந்த ஃபாஸ்ட் பௌலர், பவுண்டரி லைன் வரைக்கும் போக, ரெண்டு நடை நடந்து, பந்து போடுறான். ஆனா.., அந்தப் பொடியன் என்ன பண்ணான் தெரியுமா..? அந்தப் பந்தை அட்டர்ன் பண்ணாம நகர்ந்துட்டான். பௌலர் அடுத்த பாலையும் அசால்டா போட்டான். அதையும் அவன் அட்டர்ன் பண்ணலை. அடுத்து, இன்னும் கொஞ்ச  தூரம்போய் வேகமா வந்து பந்தைப்  போட்டான். அப்பவும் பேட்டை தூக்கி அடிக்கலை. இப்படி கொஞ்சம் கொஞ்சமா அந்த பௌலரை, பவுண்டரி லைனுக்கே தள்ளிட்டான் அந்தப் பொடியன்.

'பொடியனா இருக்கானேன்னு பார்த்தா.., இவ்வளவு தெனாவட்டா இவனுக்கு..?’ன்னு மனசுக்குள்ள நினைச்சபடி, வேகமா ஓ..டி... வந்து பந்தைப் போட்டான் அந்த பௌலர்.    

பொடியனோ கையில் இருந்த மட்டையை ஒரு சுற்று சுற்றினான். பந்து எப்போது மட்டையில் பட்டது

எதிர்கொள்!

என்று தெரியவில்லை. அந்த அணிக்கு முதல் பவுண்டரி கிடைத்தது!

பௌலர் மீண்டும் மைதானத்தின் மூலையில் இருந்து ஆவேசமாக ஓடி வந்தான். பொடியன் அதேமாதிரி பந்தைத் தட்டிவிட, அடுத்த பவுண்டரி...

ஃபீல்டிங் டீம் கேப்டன், 'என்னடா பால் போடறே..? சின்னப் பையன்... அடுத்தடுத்து ரெண்டு ஃபோர் அடிக்கறான்... ஒழுங்காப் போட்றா...’ என்று கத்துறான். இப்ப, அடுத்த பால் போடறப்ப, யாருக்கு அதிகம் பிரெஷர் இருக்கும்..? பௌலருக்கா...? பொடியனுக்கா..? நிச்சயமா பௌலருக்குத்தான்.  

தனக்கு முன்னால விளையாடிய, 'திறமை வாய்ந்த’ இளைஞர்கள் செய்யத் தவறியதை அல்லது அவங்களால  செய்ய முடியாததை எதுவும் அந்தப் பொடியன் செஞ்சுடல. ஆனாலும், அவங்களால அடிக்க முடியாத பவுண்டரி, இவனால எப்படி எடுக்க முடிஞ்சுது..?

மத்தவங்களுக்கு, ஃபாஸ்ட் பௌலர் ஒரு சேலஞ்சாதான் தெரிஞ்சான். அவன் போடுற பந்தை எதிர்த்து விளையாடறது சவாலா இருந்துது. ஆனா.., இந்தப் பையன்,  அதை ஒரு சவாலா எடுத்துக்கிறதுக்குப் பதிலா ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டான்.  

இப்படி ஓடி வர்றானே! இந்தப் பந்து வீச்சை எப்படி அடிக்கப்போறோம்..? அவுட் ஆயிட்டா என்ன செய்றது..?ங்கிற கேள்வியெல்லாம் அவனுக்குள்ள இல்லை. அவனைப் பொறுத்தவரைக்கும், பந்து எங்கே வருகிறது என்பதைப் பார்த்து, மட்டையால அடிக்கணும்,  அவ்வளவுதான். மனதில் எந்தவித சஞ்சலமோ, கலக்கமோ இல்லை.

இதுதான் இன்றைய இளைஞர்கள் கைகொள்ளவேண்டிய அணுகுமுறை. வாழ்க்கை விடுக்கிற எந்த ஒரு கேள்வியையும் சவாலாக எடுத்துக்காம, தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக எடுத்துக்கிற மனப்பக்குவம் வந்துட்டா போதும், இன்றைய இளைஞர்களால் நிச்சயம் சாதிச்சுக்காட்ட முடியும்''.

பேசிமுடித்துவிட்டு என் மெயில் ஐடியையும் தந்துவிட்டு, வீட்டுக்கு வந்தேன். இரவு தூங்கச் செல்லும் முன்பு எனக்கு வந்திருக்கும் மெயில்களை வேகமாக பார்த்துவிடுவேன். மதியம் என் பேச்சை கேட்ட கல்லூரி மாணவன் ஒருவன், ''எனக்கொரு மெயில் போட்டிருந்தான். ''என்னைப் போன்ற இளைஞர்கள் வாழ்வில் சிறக்க சிறந்த வழிகளைச் சொல்லுங்கள்...'' என்று கேட்டிருந்தான். மறுநாள் காலை அவனுக்குப் பதில் அனுப்பினேன்.

எதிர்கொள்!

''நல்ல நெறிமுறைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். நேர்மையான வழிமுறைகளின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

சற்றும் தளர்வின்றி தொடர்ந்து உழையுங்கள். கேளிக்கை,  பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணடிக்காமல், நாள்தோறும் அதிகபட்ச உழைப்புக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.  

வாழ்வின் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக்கொண்டும் விரக்திக்கும் எதிர்மறை எண்ணங் களுக்கும் இடம்தராமல், தனக்கென்று ஓர் இலக்கு நிர்ணயித்துக்கொண்டு, சரியாகத் திட்டமிட்டு செயல்புரியுங்கள்.  

நிறைவாக, எந்தவொரு மனிதனையும் இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து 'வா... வா...’ என்று வரவேற்காது.  நாம்தான், உழைத்து உழைத்து உழைத்து, எதிர்த்து எதிர்த்து எதிர்த்து, தடைகளை உடைத்து உடைத்து உடைத்து முன்னேற வேண்டும். இதுதான் நம் அனைவருக்குமான ஒரே விதி. இந்த 'விதி’க்கு உட்பட்டு விளையாடுகிற அத்தனைபேருக்கும் கிடைக்கிற வெகுமதிதான், வளமான எதிர்காலம்! ஆல் தி பெஸ்ட் டு ஆல் ஆஃப் யூ!''  

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism