Published:Updated:

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

##~##

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சகாப்தம் இந்தியாவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பிறகு 'பாரத ரத்னா’ விருது கொடுத்ததுடன் முடிவடைந்தது. உலக அளவில் இந்த விளையாட்டை சிறப்பித்தவர்களின் குழுவில் இவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சச்சினின் தனிப்பட்ட குணாதிசயங்களான நீடித்து உழைக்கும் திறம், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு, உடலை பேணி வளர்ப்பதில் உள்ள கட்டுப்பாடு, ஆட்டக்களத்திலும், களத்துக்கு  வெளியிலும் இவர் நடந்துகொண்டமுறை ஆகியவைகள் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வரக்கூடிய ஆண்டுகளில் ஓர் உத்வேகத்தைக் கொடுக்கக்கூடும்.

அதேநேரத்தில், இவரைப் போன்ற குணாதிசயங்கள் கொண்ட இவரது சமகாலத்தவர்கள் பலர் இந்த விளையாட்டின் மேன்மைக்கு தங்களது பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்கள் தகுதிக்கும் குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டு அமைதியாக ஓய்வுபெற்றார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.    

சச்சின் மற்றவர்களைக்காட்டிலும் லட்சக்கணக்கான ஆண், பெண்களின் கற்பனையைக் கையகப்படுத்தி யிருக்கலாம். மற்றவர்களைக்காட்டிலும் தன்னை நன்றாகச் சந்தைப்படுத்தி இருக்கலாம்.  வியாபார நோக்கம் கொண்ட ஊடகங்கள் இவரது பிரிவு உபசாரத்தை அதிகமாகச் சூழ்ந்து இருந்திருக்கலாம். தன் மீது சுமத்தப்பட்ட 'எதிர்பார்ப்புகள்’ என்கிற சுமையில் நொறுங்கிவிடாமல் அதைத் தாங்கிக் கொண்டிருந்ததால்கூட மக்கள் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கலாம். காரணம், எதுவாக இருந்தாலும், சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இந்தியா 'எதிர்பார்ப்பு’ என்கிற சுமையைத் தாங்கும் தனிமனிதர்களை தெய்வமாகக் கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்திருக்கவே செய்கிறது.    

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் கூட ஓர் அமைப்புக்குக் தரும் முக்கியத்துவத்தைவிட தனிமனிதருக்குத் தரப்படும் அதிமுக்கியம் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு 'கதாநாயகர்’களும், 'முன்மாதிரி’களும் (ரோல் மாடல்) தேவைதான். ஆனால், முதிர்ந்த சமூகம் மற்றும் அமைப்புக்கு தனிமனிதர்களைத் தாண்டிய ஒரு பார்வை வேண்டும். மிகப் பெரிய குறிக்கோளைச் சென்றடைவதற்கு ஒரு சிறந்த கூட்டுமுயற்சியிலான முறைமை களை உருவாக்குவதற்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா இந்த நிலையை இன்னும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

பிரதம மந்திரியாக முன்நிறுத்தப்பட்டிருக்கிற நரேந்திர மோடி இதுதொடர்பாக கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது.    அடுத்தடுத்து பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிமுறை மீதான எனது அதிருப்தியையும், ஒப்புதலற்ற தன்மையையும் கடந்த ஆறு ஆண்டுகளாக எனது கட்டுரைகளில் (குறிப்பாக, 'மின்ட்’ பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகள்) நான் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. இருக்கக்கூடிய மாற்றுகளை எல்லாம் நன்கு ஆராய்ந்தபிறகு குஜராத்தின் முதலமைச்சர் வருங்கால பிரதமராவதைப் பார்க்க வேண்டும் என்று எனது வலைப்பக்கத்தில் (<லீttஜீ://tரீs.ஸீணீtவீஷீஸீணீறீவீஸீtமீக்ஷீமீst.வீஸீ/>) எழுதினேன். நான் அப்படி சொல்லியிருந்தாலும், 'எதிர்பார்ப்பு’ என்கிற சுமையை நமோ பல  முக்கியமான விஷயங்களை நிறைவேற்ற முடியாதபடிக்கு ஏமாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் அபாயமும் இருக்கிறது.

விளையாட்டில் கூட்டாக தன்னால் எவ்வளவு செய்யமுடியுமோ, அதைவிடக் குறைவாகச் செய்துவிட்டு சச்சின் ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், மோடி மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்திய மக்களின் எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றவில்லையென்றால் அவர்கள் மோடியை அவ்வளவு எளிதாக மன்னிக்க மாட்டார்கள். நமோவின் தோள்களில் இவ்வளவு பெரிய சுமையைச் சுமத்துவதும் நியாயமில்லைதான்.  

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

எனவே, மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் 'ரிஸ்க்’கிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமெனில் ஒரு கட்டத்தில் அவர், இந்தியாவையும், இந்தியர்களையும் கடின வேலைக்குத் தயார்படுத்தவேண்டும். நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாலும் ஒருவரால் நாட்டை தெளிவாக வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால், அவர்களால் எவ்வளவு காலத்துக்கு  அப்படி செய்யமுடியும் என்பதற்கு ஓர் எல்லை உள்ளது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி குறித்து குறிப்பிட வேண்டுமெனில், கடந்த முப்பது ஆண்டுகளில் ராஜீவ் காந்தியின் இரண்டாண்டு கால (1984-86) ஆட்சியையும், நரசிம்மராவின் 1991-93 ஆண்டுகால ஆட்சியையும், வாஜ்பாயின் 2002-04 ஆண்டுகால ஆட்சியையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆனால், இரண்டு விஷயங்களில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். முதலாவதாக, நல்ல ஆட்சிமுறையை அவர்களால் தங்களின் பதவிகாலம் முழுக்கவும் தரமுடியவில்லை, இரண்டாவதாக, அவர்களுடைய முயற்சிகளும், கொள்கைகளும் தேசம் முழுமைக்கும் பரவவில்லை.

நமோ மனப்பூர்வமாக நேசிக்கும் தேசத்துக்கு அவர்களைவிட அதிகமாக செய்யவேண்டும். இதைச் செய்ய அவர் உண்மையைச் சொல்லவேண்டும். முதலாவதாக, இந்தியாவை மீண்டும் நிர்மானிக்க இவர் ஒருவரால் மட்டும் முடியாது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, 2003- 2007-ம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2009-10-லும் 9-10% என வளர்ந்துவந்த இந்தியா இன்றைக்கு அப்படி வளராததற்கான காரணங்களைக்  கண்டறிய வேண்டும்.

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

மூன்றாவதாக, இந்தியா மீண்டும் முன்பிருந்த வளர்ச்சியை எட்டுவதற்கு தனிப்பட்டவர்களின் 'ஈகோ’ மற்றும் 'புகழை’ எல்லாம் தூர எறிந்துவிட்டு இந்தியர்கள் ஒரு குழுவாக செயல்படுவதில் நம்பிக்கை வைத்து அதன்படி வித்தியாசமாகச் செயல்பட வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக சுயநலத்தை முன்வைத்து செயல்படும் சில இந்திய வணிகங்களை நல்வழிப் படுத்தவேண்டும். நான்காவதாக, சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டதுபோல, தற்போது அதிகார வர்க்கம்

நரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்?

முடிவெடுப்பதில் தலைகீழான வழிகள் எதுவும் இல்லை. இவரால் ஒரே இரவில் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த முடியாது. ஆனால், அதற்கான செயல்முறைகளை இவர் ஆரம்பிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் நீண்டகாலத்துக்கு சாதாரண வளர்ச்சியை நோக்கிதான் இந்தியா தள்ளப்படும்.

பல மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் அதிக உழைப்பு, அதிக வருமானம் என்பதற்குப் பதிலாக அதிகமான ஓய்வை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது. இந்த மாதிரியான பிரச்னை வளர்ந்த நாடுகளில் மட்டும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலான பகுதிகளில் இந்தியர்கள் கடினமாக உழைப்பதில்லை. எளிமையான வேலை போதும் என நினைக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை பெரும்பாலான ஆசிய நாடுகளின் தொழிலாளர் உற்பத்தித்திறனுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான்.

இறுதியாக, சச்சினின் விளையாட்டை வேண்டுமானால், நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால், அவர் களத்தில் விட்டுச்சென்ற 'கடின உழைப்பு’ என்கிற விஷயத்தை இந்தியா இழக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இவர் கூறவேண்டும். சச்சின் அடைந்த மேன்மையைப் பெற உழைக்கவேண்டும் என இவர் இளைஞர்களிடம் கூறி அவர்களை இணங்க வைத்தால் சச்சினுக்குக் கொடுத்த 'பாரத ரத்னா’ விருது வீண் போகாது.

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்.

அடுத்த கட்டுரைக்கு