Published:Updated:

டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!

டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

கடைகளில் பொருள் வாங்கினாலும் சரி, வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டாலும் சரி, டெபிட் கார்டினை இனி பயன்படுத்தினால் பின் நம்பரை அவசியம் பதியவேண்டும் என்பது ஆர்பிஐ-ன் உத்தரவு!

இதுநாள் வரை டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால்  அதன் பின் நம்பரை (ரகசிய பாதுகாப்பு எண்) பதியவேண்டிய அவசியமில்லை.    இனி டெபிட் கார்டை பயன்படுத்தி பொருள் வாங்கினால், அதன் பின் நம்பரைக் கட்டாயம் பதியவேண்டும்.

மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் கடையில் நாலுபேருக்கு முன்பு நம்முடைய பின் நம்பரை பதிவதன் மூலம் நமக்கு சில பாதிப்புகள் வரலாம். இதிலிருந்து தப்பிக்க, நம்முடைய டெபிட் கார்டினை பத்திரமாக பயன்படுத்துவது எப்படி?

டெபிட் கார்டுக்கான பின் நம்பரைப் பதியும்போது கடை உரிமையாளர் உள்பட யாரும் பார்க்காதபடி மறைத்துக்கொண்டு ஸ்வைப்பிங் மெஷினில் பதிவுசெய்ய வேண்டும்.

பின் நம்பரை தனியாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை பர்ஸில் வைப்பதும் கூடாது. பர்ஸ் பிட்பாக்கெட் அடிக்கப்பட்டால் திருடனுக்கு கொண்டாட்டமாகிவிடும்.

டெபிட் கார்டு:  பின் நம்பர் பத்திரம்!

டெபிட் கார்டினை பயன்படுத்துகிறவர்கள் பின் நம்பரை பதிவதற்கென ஒரு மறைவான இடம் இருக்கிறமாதிரியான கடைகளில் மட்டுமே அதை பயன்படுத்தலாம். இந்த வசதியை ஏற்படுத்தித் தரும்படி கடைக்காரரை வற்புறுத்தலாம்.  

மறைவான இடம் இல்லாத கடைகளில் பொருள் வாங்கவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டால், பொருட்களை வாங்கியவுடன் அருகில் இருக்கும் ஏடிஎம் சென்டருக்குப் போய், பின் நம்பரை மாற்றிவிட வேண்டும்.  

 எந்தக் காரணம் கொண்டும் நம் டெபிட் கார்டினை நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தரக்கூடாது.

முன்பு டெபிட் கார்டு திருடு போனால் அதை எடுத்தவர் கடைக்குச் சென்று ஸ்வைப் செய்து பொருட்களை வாங்கிவிட முடியும். இனி டெபிட் கார்டுடன் ரகசிய எண்ணும் கிடைத்தால்தான் அப்படி செய்ய முடியும். எனவே, டெபிட் கார்டுடன், அதனுடைய பின் நம்பரும் பத்திரம்!

      - செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு