Published:Updated:

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

செ.கார்த்திகேயன்

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. இன்வெர்ட்டர் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக் கலாம் என்று பார்த்தால், அதற்கும் மின்சாரம் தேவை. எனவே, இப்போது  எல்லாதரப்பு மக்களின் கவனமும் சோலார் மின்சாரத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. வீடுகளில் சோலார் தொழில் நுட்பத்தை அமைத்துத் தருவது பற்றி கோவையைச் சேர்ந்த பிரபுவுடன் பேசினோம்.

மின்சாரம் இன்றியமையாதது!

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் கடந்த ஆறு வருடங்களாக சோலார் சிஸ்டத்தைப் பயன்படுத்தி வருகிறேன். மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அதனால் கரன்ட் பிரச்னை தீராததால்,  சூரியஒளி மின் உற்பத்திக்கு மாறினேன். இதற்கு ஆரம்ப முதலீடு அதிகம் என்று தெரிந்தும்கூட நான் ஏற்றுக்கொள்ளக்  காரணம், இன்வெர்ட்டர் மற்றும்  ஜெனரேட்டருக்கு ஆகும் பராமரிப்புச் செலவைத் தவிர்க்கத்தான்.

பராமரிப்புச் செலவு இல்லை!

நான் அமைத்துள்ளது 2 கி.வாட்ஸ் அளவுக்கான பேனல்கள். இதற்கான செலவு சுமார் ரூ.3 லட்சம். இதை அமைத்து ஆறு ஆண்டுகளாகியும் எந்தவொரு பராமரிப்பு செலவையும் செய்யவில்லை. பேட்டரியில் இருக்கும் அமிலத்தை மட்டும் அவ்வப்போது மாற்றுகிறேன். முன்னர் என் கடை, வீடு இரண்டும் சேர்த்து மாதம் ரூ.3,000 வரை மின் கட்டணம்  கட்டுவேன்.  இப்போது குறைந்தபட்ச தொகையான ரூ.40 மட்டுமே கட்டுகிறேன்.

15 யூனிட்கள் கிடைக்கிறது!

ஒருநாளைக்கு 15 யூனிட்கள் வரை கிடைக்கிறது. எனவே ஏ.சி, ஃப்ரிட்ஜ், டிவி, மோட்டார், ஹீட்டர் என சகலத்தையும் பயன்படுத்த முடிகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது. ஆனால், இதுமுறையாக எனக்கு வந்துசேரவில்லை. இதற்காக விண்ணப்பித்து ஆறு ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சோலார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய பிரச்னை ஆரம்ப முதலீடுதான். ஆனால், அதன்பின் அந்தப் பணத்தை சில வருடங்களில் சேமித்துவிடலாம். ஒரு வீட்டுக்கு எவ்வளவு பயன்பாடுகளுக்கு, எவ்வளவு செலவு என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சோலார் பேனல்களை அமைப்பது நல்லது.

யாருக்கு எவ்வளவு?

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

ஃப்ரிட்ஜ், ஏ.சி மற்றும் போர்வெல் மோட்டார் பயன்படுத்தாதவர்கள் 1,000 வாட்ஸ் திறன்கொண்ட சோலார் பேனல்களை வீட்டில் பயன்படுத் தலாம். வெயில் அதிகம் இருக்கும்போது நாளன்றுக்கு 5-7 யூனிட்டும், வெயில் குறைவாக இருக்கும்போது 3-5 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும்.

ஃபேன், லைட், டிவி, ஃப்ரிட்ஜ், போர்வெல் (ஏ.சி தவிர்த்து) என அனைத்தையும் பயன்படுத்த நினைப் பவர்கள், 2,000-2,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைக்கலாம். இரண்டு லைட் மற்றும் ஒரு ஃபேன் தொடர்ந்து பயன்படுத்துவதாக இருந்தால், 500 வாட்ஸ் திறன்கொண்ட சோலார் பேனல்களை அமைக்கலாம். தொடர்ந்து பயன்படுத்தமாட்டோம் என்பவர்கள் 300 வாட்ஸ் திறன் கொண்ட  பேனல்களைப் பயன்படுத்தலாம்.  

சோலார் மின்சாரம் வந்தபிறகு மின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டாம். தொடர் மழை, மேகமூட்டம் போன்ற காரணங்களால் சோலார் பேனல் மூலம் மின்சாரம் கிடைக்காமல் போகும்போது, தற்போதுள்ள மின் இணைப்பின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பேனல் விலை!

சோலார் பேனல்களின் விலை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். தோராயமாக, 1000 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் சிஸ்டம் ரூ.1.5 லட்சம், 2000 வாட்ஸ் திறன் கொண்டது ரூ.3 லட்சம், 2500 வாட்ஸ் திறன்கொண்டது ரூ.3.75 லட்சம் ஆகும். 500 வாட்ஸ் திறன்கொண்ட பேனல் அமைக்க ரூ.90,000-மும், 300 வாட்ஸ் திறன்கொண்டது ரூ.65,000-மும்  செலவாகும். இந்தச் செலவுகள்போக இடவசதி, அதற்கான வேலைகள், போக்குவரத்துச் செலவுகளைப் பொறுத்து அமைத்துத்தரப்படும்  கட்டணமானது வித்தியாசப்படும்'' என்றார் பிரபு.

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

மானியம்!

மானியம் குறித்து டெடா (TEDA - Tamil Nadu Energy Development Agency)160; வட்டாரத்தில்  விசாரித்தோம். ''சோலார் பேனல்களுக்கு விலையில் சுமார் 30-50% வரை மானியம் கிடைக் கிறது (சோலார் பேனல்களைப் பொறுத்து). ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் திட்டம் மூலம் இதற்கான மானியத் தொகை திட்ட மதிப்பைப் பொறுத்து 50% வரை வங்கிக் கடன் தரப்படுகிறது. பெரும்பாலும் சோலார் பேனல் மானியத்தை அரசிடமிருந்து அதைப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்பவரே கிளைம் செய்ய வேண்டும். ஒரு சில விற்பனையாளர்கள் மானிய விலையை கழித்துக்கொண்டும் விற்பனை செய்கிறார்கள். சோலார் பேனல்களுக்கான மானியத்தை மத்திய, மாநில அரசாங்கம் ஒதுக்கியவுடன் அதை உரியவருக்கு வழங்கி வருகிறோம்.

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

1-5 கிலோ வாட்ஸ் வரை வீட்டு பயன் பாட்டுக்கான சாதனங்களை வாங்க ரூ.2 லட்சம் முதல் செலவாகும். இதில் ரூ.80 ஆயிரம் வரை அரசு மானியம் கிடைக்கும். மோட்டார் பம்புசெட்கள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு மானியத்தோடு வங்கிக் கடனும் தரப்படுகிறது. அதாவது, 20% பணத்தை மட்டும் கட்டினால் போதும். 30% மானியம், 50% வங்கிக் கடன் பெற்று சோலார் சிஸ்டத்தை அமைத்துவிட முடியும். மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரி இல்லாமல் சோலார் பேனல்களை அமைத்தால் 1 கிலோ வாட்ஸுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவு குறையும்'' என்றார்கள்.

சோலார் மின்சாரம்: 'கரன்ட் கட்'-டிலிருந்து விடுதலை!

ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்படும் பேனலுக்கு 50% வங்கிக் கடன் வாங்கி, அதற்கு மாதமொன்றுக்கு 14% வட்டி கட்ட வேண்டுமெனில், ரூ.1,750 கட்ட வேண்டும். உங்கள் மின்சாரக் கட்டணம் மாதம் ரூ.1000  எனில் மீதமுள்ள ரூ.750-தை கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டும். ஆனாலும் உங்கள் வீட்டில் கரன்ட் கட் என்கிற பேச்சுக்கே இடமிருக்காதே!

ஞா.சுதாகர் படங்கள்: தி.விஜய்