டி.ராஜன், முதலீட்டு ஆலோசகர்,
ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

பல்வேறு வகையில் நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் குறிப்பிட்டு சொல்லும் படியான வைப்புநிதி (எஃப்.டி), வரியில்லா கடன் பத்திரங்கள் (Tax Free Bonds), பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடும் எஃப்எம்பி- களின் நிதித் திட்டங்களின் தன்மையும், எந்தெந்த திட்டங்களில் யாருக்கு உகந்தவையாக இருக்கும் என்பதையும் விரிவாக அலசுவோம்.

வைப்பு நிதி (Fixed Deposit)!

வங்கி மற்றும் இதர வங்கிசாரா நிதி நிறுவனங்கள், உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் வைப்புநிதி மூலம் நிதி திரட்டுகின்றன. இந்த முதலீட்டில் வட்டி 8-10% வரை இருக்கும். வட்டியானது நிதி சேகரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

சாதகமான அம்சங்கள்!

முதலீடு மற்றும் முதலீடு மீதான வட்டிக்கு பாதுகாப்பு அதிகம்.

முதலீட்டு மீதான வட்டி - மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அல்லது கூட்டுவட்டியாக பெறலாம்.

முதிர்வுக்குமுன் திரும்பப் பெறும் வசதி உண்டு.

கவனிக்க வேண்டியவை!

வரிக்குப் பிந்தைய வருமானம் குறைவு.

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை.

யாருக்கு உகந்தது?

நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள்.

ஓய்வூதியம் பெறுபவர்கள்.

குறுகியகால தேவைக்கு முதலீடு செய்பவர்கள்.

டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் (Tax Free Bond)!

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் வரியில்லா கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி வருகின்றன. இதில் செய்யப்படும் முதலீடு மீதான வட்டிக்கு வரி ஏதும் செலுத்த தேவையில்லை.

சாதக அம்சங்கள்!

முதலீடு செய்த பணத்துக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி ஏதும் கிடையாது.

வரியில்லா கடன் பத்திரங்கள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்படுவதால் முதலீட்டுக்கும் வருமானத்துக்கும் பாதுகாப்பு உண்டு.

முதலீட்டுக்கான வட்டி ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

இந்தவகை பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். இவற்றை எப்போது வேண்டுமானாலும் விற்று முதலீட்டை திரும்பப் பெறலாம்.

கவனிக்க வேண்டியவை!

டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் வெளியீட்டில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?

மற்ற வங்கி டெபாசிட்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரிக்குப் பிந்தைய வருமானத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

டாக்ஸ் ஃப்ரீ பாண்டில் முதலீடு செய்யும்போது, முதிர்வுக்குமுன் திரும்பப் பெறும் வசதி, முதலீடு செய்யும் பாண்டின் தரக்குறியீடு கிகிகி மற்றும் கிகி குறையாமல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

அதிகத் தொகையை முதலீடு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வைத்திருக்கவேண்டியதில்லை என்றாலும், முதிர்வுக்குமுன் முதலீட்டை திரும்பப் பெறவேண்டுமானால் டீமேட் கணக்கு மூலமாக பங்குச் சந்தையில் விற்றுப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

யாருக்கு உகந்தது?

அதிகபட்ச வருமான வரி வரம்புக்கு உட்பட்டவர்களுக்கு.

நிலையான ஆண்டு வருமானம் பெற விரும்புபவர்களுக்கு.

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (FMP)!

இந்தவகையான திட்டங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களால் வெளியிடப் படுவது. இந்தத் திட்டத்தில் முதலீடுகள் பல்வேறு கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் முதலீட்டுக்குப் பாதுகாப்பு அதிகம். முதலீடு மீதான வருமானம் 8 - 10% வரை இருக்கும்.

கவனிக்க வேண்டியவை!

முதலீட்டுக் காலம் 1 - 3 வருடங்களுக்குள் இருப்பது உகந்தது.

தரக்குறியீடு AAA மற்றும் AA குறையாமல் இருப்பது நல்லது.

குறிப்பிட்ட கால அளவுக்கு முன் முதலீட்டை திரும்பப் பெற இயலாது.

வரிக்குப் பிந்தைய வருமானம் வைப்பு நிதியைவிட அதிகமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

யாருக்கு உகந்தது?

அதிகபட்ச வரி வரம்புக்கு உட்பட்டவர்களுக்கு.

குறுகியகால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு.