ஸ்பெஷல்
Published:Updated:

அலிபாபாவும் ஆன்லைனும்!

சித்தார்த்தன் சுந்தரம், பிசினஸ் சன்சல்டன்ட்

சான்பிரான்சிஸ்கோ  வில் உள்ள காபி கடையில் பணிபுரியும் பெண்ணிடம் ஜாக் மா (JackMa), 'உனக்கு அலிபாபாவைத் தெரியுமா?’ என்று கேட்க அதற்கு அவளும், 'ஓ, தெரியுமே! அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேனே’ என்று சொல்ல, ஜாக்கின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசம். ஏக குஷியில் குதித்தார்! அதற்குப்பிறகு சாலையில் நடந்துசெல்கையில் ஏறக்குறைய முப்பது பேர் களிடம் 'அலிபாபாவைத் தெரியுமா?’ என்று கேட்க, எல்லாருமே 'தெரியும்’ என்றே பதில் சொன்னார்கள். ஜாக் மா ஏன் எல்லாரிடமும் இப்படிக் கேட்டார்  தெரியுமா? அவர் புதிதாக ஆரம்பிக்க இருந்த ஆன்லைன் இணையதளத்துக்கு அலிபாபா என பெயர் வைக்க விரும்பினார். அலிபாபா என்கிற பெயர் எல்லாருக்கும் தெரிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவே எல்லாரிடம் இப்படி கேட்டார். 

அலிபாபாவும் ஆன்லைனும்!

இன்றைக்கு புராதன காலத்து அலிபாபாவை தெரியுமோ இல்லையோ, அலிபாபா.காம் பல நாடு களிலும் பிரபலம். அதுவும் இந்த நவீன காலத்து அலிபாபா சீனாவில் படுபிரபலம்.

1999-ல் தன்னுடைய சாதாரண ஃப்ளாட்டில் மிக மிக எளிமையாகத்தான் அலி பாபா.காமை தொடங்கினார் ஜாக் மா. இந்த வலைதளம் எந்தப் பொருட்களையும் வாங்கி விற்பதில்லை.  பெரிய வர்த்தகர்கள் விற்கும் பொருட்களை சிறிய வர்த்தகர்கள் வாங்குவதற்குத் தோதான ஓர் இடைத்தரகர் வேலையையே இந்த வலைதளம் செய்கிறது. அதாவது, பொருட்களைத் தயாரிப்பவர்களும், பொருள் தேவைப்படுபவர்களும் இந்த வலைதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு வாங்குபவர்களும், விற்பவர்களும் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்வார் கள். இதற்காக அலிபாபா நிறுவனம் கமிஷன் எதையும் வாங்குவதில்லை. அப்படி யென்றால் அலிபாபாவுக்கு என்ன வருமானம் என்று கேட்கிறீர்களா? அதுதான் ரகசியம். அதைக் கடைசியில் சொல்கிறேன்.

இன்றைக்கு அலிபாபா டாட்காமில் மட்டும் பதிவு செய்திருக்கும் விற்பனையாளர் களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். இதன் மூலம் கிட்டத்தட்ட 240 நாடு களிடையே பரிவர்த்தனை யாகும் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 170 பில்லியன் டாலர்கள் (2012-13 கணக்குபடி, சுமார் 10.20 லட்சம் கோடி ரூபாய்).

அலிபாபாவும் ஆன்லைனும்!

சீனாவில் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தவர் ஜாக் மா. கடந்த நூற்றாண்டின் கடைசியில் இன்டர்நெட்டின் வளர்ச்சியை கண்டு அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அமேஸானின் ஜெஃப் பேஷாஸ் (Jeff Bezos) போல, ஏதாவது செய்ய நினைத்ததன் விளைவுதான், இந்த அலிபாபா டாட்காம்.  

உலகம் முழுக்க வியாபாரம் செய்வதற்கு ஆங்கிலத்தில் அலிபாபா டாட்காம் எனில், சீன மொழி மட்டுமே தெரிந்த உள்நாட்டு வர்த்தகச் சமூகத்திற் கென்று இவர் 1688 டாட்காம் என்கிற இன்னொரு வலைதளத் தையும் ஆரம்பித்தார். இதன் மூலம் நடைபெற்றுவரும் பரிவர்த்தனையின் மதிப்பு சுமாராக நாளன்றுக்கு 30 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.180 கோடி).

அலிபாபா நிறுவனம் 2000-ம் ஆண்டில் 25 மில்லியன் டாலரை சாஃப்ட்பேங்க், கோல்டுமேன் சாக்ஸ், ஃபிடிலிட்டி மற்றும் சில நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீடு திரட்டி, 2001-ம் ஆண்டிலேயே லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தது.

உலகத்திலேயே அதிக ஜனத்தொகைக் கொண்ட சீன  நாட்டு நுகர்வோர்களைக் கவர என்ன செய்வது என ஜாக் மற்றும் அவரது குழுவினர் யோசிக்கையில் தடாலென்று உதயமானது 'டௌபௌ’ (Taobao)’ வலைதளம். இது ஏறக்குறைய இ-பே (Ebay) போலத்தான். ஆனால், இதில் ஏலம் (auction) மட்டும் இல்லை. இதன்மூலம் நுகர்வோர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை நினைத்த மாத்திரத்தில் ஒரு 'கிளிக்’கில் வாங்க முடிந்தது. சீனாவில் உள்ள நுகர்வோர்களின் பெரும்பசியை இப்போது டௌபௌ தீர்த்துக் கொண்டிருக்கிறது.

ஜாக் மா இதோடு நின்றுவிட வில்லை. வர்த்தகர்களிடமும், நுகர்வோர்களிடமும் இருந்த / இருக்கிற பயம், நாம் பணம் செலுத்தினால் அது ஒழுங்காகச் சென்றடைய வேண்டியவர் களைச் சென்றடையுமா, ஆர்டர் செய்த பொருட்கள் நமக்கு ஒழுங்காக வந்து சேருமா என்பதுதான். இதைப் புரிந்துகொண்ட ஜாக், அலிபே டாட்காம் (Alipay.com) என்கிற மிகவும் பாதுகாப்பான 'நுழை வாயில்’ (Gateway) ஒன்றை ஆரம்பித்தார். இன்றைக்குச் சீனாவில் நடைபெறும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏறக்குறைய 50% இந்த அலிபே மூலம்தான் நடக்கிறது.

அலிபாபாவின் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள். அவை,

அலிபாபாவும் ஆன்லைனும்!

1. இது பொருட்களைக் கையாளுவதில்லை. இதனால் விற்பனையில் ஆதாயம்

(Margin on sales) என்பதற்கே இடமில்லை. அனைத்து வருமானமும் விளம்பரம்/லிஸ்ட்டிங் மற்றும் மேலதிக சேவையிலிருந்து வருவதுதான்.

2. வாடிக்கையாளர்களே பிரதானம். சிறு வியாபாரி, பெரிய நிறுவனம், நுகர்வோர் என யாராக இருந்தாலும், மக்கள் சேவையே அலிபாபாவின் கொள்கை!

3. யாரிடம் என்ன கிடைக்கிறது, யாருக்கு என்ன வேண்டும் என்பதை ஒரேஇடத்தில் துரிதமாகத் தெரிந்துகொள்ள இந்த வலைதளம் வழிவகுக்கிறது.

இவ்வளவு பெரிய வெற்றியைக் காணவைத்த ஜாக் மா, அலிபாபா டாட்காம் நிறுவனத்தின் 7% பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார். சாஃப்ட்பேங்க் கார்ப்பரேஷன் 36.7%ம், யாகூ 24% பங்குகளையும் வைத்திருக்கிறது. அலிபாபா குழுமத்தில் வேலை பார்ப்பவர் களின் எண்ணிக்கை சுமார் 26,000 பேருக்குமேல். அலிபாபாவின் வருமானம் 2008-ம் ஆண்டில் 457 மில்லியன் டாலர். இது 2013-ம் ஆண்டு 6.7 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 40,200 கோடி ரூபாய்) உயர்ந்தது. மொத்த லாபம் 4.9 பில்லியன் டாலர்கள். அதாவது, 73% ஆதாயம்.

அலிபாபாவின் லாப ரகசியத்தை இப்போது சொல்கிறேன். அலிபாபா வளைதளத்தில்

அலிபாபாவும் ஆன்லைனும்!

பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை விளம்பரம் செய்துகொள்ளத் தரும் பணம் மற்றும் மேலதிக சேவைக்காக (Value added service) வசூலிக்கும் பணம் அலிபாபாவின் பிரதான வருமானம். இது அமேஸானின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான். ஆனால், இதன் மூலம் நடக்கும் பரிவர்த்தனை அமேஸானின் வருமானத்தைப் போல, 2.5 மடங்கு அதிகம்.

இந்தியாவுக்கென அலிபாபா தனி வலைதளம் உள்ளது. தற்போது சீன தயாரிப்பு பொருட்கள் நம் சந்தையில் குவிந்துகிடப்பதுபோல, எதிர்காலத்தில் இந்த அலிபாபா டாட்காம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை! · சீனாவில் டெலிவரி செய்யப்படும் பார்சல்களில் 60 சதவிகிதம் அலிபாபா குழும வலைதளங்களில் வாங்க/விற்கப்படும் பொருட்கள்தான்.

அலிபாபாவின் சுவாரஸ்யங்கள்!

அலிபாபாவும் ஆன்லைனும்!
அலிபாபாவும் ஆன்லைனும்!

  இந்தக் குழும வலைதளங்களில் வியாபாரத்துக்கென பதிவு செய்யப்பட்டிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் (100 கோடி) டாலர்.

அலிபாபாவும் ஆன்லைனும்!

  'வாட்ஸ் ஆப்’போல அமெரிக்காவில் இயங்கிவரும் US Chat  Appஆன 'டாங்கோ’-வில் இந்தக் குழுமம் 215 மில்லியன் முதலீடு செய்துள்ளது.

அலிபாபாவும் ஆன்லைனும்!

  உலக அளவில் அதிகமாக விசிட் செய்யும் 'டாப் 25 வலைதள’ங்களில் அலிபாபாவும் ஒன்று.

அலிபாபாவும் ஆன்லைனும்!

  அலிபாபா டாட்காம் பெயரை பதிவு செய்யும்போதே அலிமாமா டாட்காம்

(Alimama.com) என்ற பெயரையும் பதிவு செய்து வைத்திருக்கிறார் ஜாக் மா.