ஸ்பெஷல்
Published:Updated:

எந்தத் திட்டம் ஏற்றது?

பத்து ஆண்டுகள்... மாதம் ரூ500

எனக்கு 27 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. மாதம் 500 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எனக்கான முதலீட்டுத் திட்டத்தைக் கூறவும்.

மைதிலி, திருப்பூர்.

ஸ்ரீதேவி, நிதி ஆலோசகர்.

''நீங்கள் முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பதால், பேலன்ஸ்டு ஃபண்டான ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். சற்று ரிஸ்க் எடுக்க தயங்குபவர்கள் லார்ஜ் கேப் ஃபண்டான ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

இந்த இரண்டு ஃபண்டுகளும் நீண்டகாலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.''

எந்தத் திட்டம் ஏற்றது?

?என்னிடம் ரூ.10 லட்சம் உள்ளது. இதை முதலீடு செய்து மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும்  முதலீட்டுத் திட்டங்களைக் கூறவும்.  அதிக ரிஸ்க் இல்லாத திட்டங்களைச் சொல்லவும்.  

கணேஷ், புதுச்சேரி.

கே.ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

''உங்கள் முதலீட்டின் மூலமாக மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்க வேண்டுமெனில்,  12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.  ரிஸ்க் குறைவாக உள்ள மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்தால், நீண்டகாலத்தில் 10 - 12% வரை வருமானம் வர வாய்ப்புண்டு.

எந்தத் திட்டம் ஏற்றது?

ஆனால், குறைந்தபட்சம்

5 வருடம் முதலீட்டை தொடர வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவிட்டு, எஸ்.டபிள்யூ.பி மூலம் ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.''

?சென்னையில் எனக்கு சொந்தமான இரண்டு வீடுகளை சமீபத்தில் விற்றேன். அதில் ஒரு வீட்டை அரசின் வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாகவும், மற்றொரு வீட்டை அரசின் வழிகாட்டி மதிப்பைவிடக் கூடுதலாகவும் விற்பனை செய்தேன். அரசின் மதிப்பைவிடக் குறைவாக விற்பனை செய்த வீட்டுக்கு அரசின் மதிப்பில்தான் பத்திரப்பதிவு செய்தோம். இதற்கு மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி?

ராஜசேகர், சென்னை.

என்.எஸ்.ஸ்ரீனிவாசன், ஆடிட்டர்.

''உங்களுடைய ஒரு வீட்டை அரசின் வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாக விற்பனை செய்துள்ளீர்கள். மாநில அரசின் வழிகாட்டி மதிப்புக்கு இணையாக முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப் பதிவுத்துறை வசூல் செய்யும். எனவே, வழிகாட்டி மதிப்புக்குதான் விற்பனை செய்த வீட்டின் மூலதன ஆதாய வரியைக் கணக்கிட வேண்டும்.

இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், இதிலிருந்து தப்பிக்க வழியில்லை. உண்மையான விற்பனை மதிப்பு, வழிகாட்டி மதிப்புக்கிடையே உள்ள வித்தியாசம் மிகவும் கணிசமானதாக இருந்தால், நீங்கள் உண்மையான விற்பனை மதிப்புக்கு மூலதன ஆதாய வரியைக் கணக்கிட்டு வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

மேலும், வருமான வரித்துறையில் உள்ள அதிகாரி நீங்கள் சொத்து விற்பனை செய்த தேதியில் சொத்தின் சந்தை மதிப்பு என்ன, அந்த மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாக உள்ளதா என்பதைப் பார்ப்பார். எனவே, நீங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி கோரிக்கை வைக்கலாம்.

அதன்பிறகு மதிப்பீட்டுத் துறை அதிகாரிகள் மீண்டும் மதிப்பீடு செய்வார்கள். அப்போதும் உங்களின் சொத்து மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாக இருந்தால், அதிகாரிகள் நிர்ணயித்த சொத்து மதிப்பைவிடக் குறைவாக உள்ளது என நடைமுறையை முடிப்பார்கள். அதற்கு ஏற்றவாறு மூலதன ஆதாய வரியும் கணக்கிடப்படும். இதுமாதிரியான தருணங்களில் ஆடிட்டரின் உதவியுடன் இவற்றைக் கையாளுவது அவசியம்.Ó

?ஹெச்.டி.ஐ.எல் பங்கை ரூ.188-க்கு வாங்கினேன். தற்போது அந்தப் பங்கு ரூ.80-க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்கின் விலை  உயருமா, என்ன செய்யலாம்?

ராஜவேல், தஞ்சாவூர்.

எந்தத் திட்டம் ஏற்றது?

ஆர்.சுபாஷ், இயக்குநர், டி.ராம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

''இந்தப் பங்கின் பீட்டா அதிகமாக இருப்பதால் அதிக ரிஸ்க் கொண்டதாக உள்ளது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை விற்பனை செய்வது நல்லது.

இதற்குப் பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ்,

என்.டி.பி.சி ஆகிய பங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்து இரண்டு வருடம் காத்திருந்தால், ஹெச்.டி.ஐ.எல் பங்கின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்துவிடலாம்.''

?கடந்த நான்கு வருடமாக டீமேட் கணக்கில் எந்தவிதமான டிரேடிங்கும் செய்யவில்லை. ஆண்டு பராமரிப்புக் கட்டணத்தையும் செலுத்தாமல் இருந்தேன். தற்போது அந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு கூறுகிறார்கள். இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

ரவிச்சந்திரன், சேலம்.

ஏ.ஆர்.வாசுதேவன்,

மேலாளர், சி.டி.எஸ்.எல்.

''ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்பது நீங்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் நிறுவனத்துக்குச்  செலுத்தும் தொகை. அந்தக் கணக்கில் டிரேடிங் செய்தாலும், செய்யாவிட்டாலும் பராமரிப்புத் தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு ஏதாவது சலுகை அளிக்கப்படும்பட்சத்தில் அதுதொடர்பான முடிவை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் நிறுவனமே எடுக்க முடியும்!''

?எனக்கு 24 வயதாகிறது. என் ஓய்வுக்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். எனக்கேற்ற திட்டங்களைக் கூறவும்.

விவேக், கோவை.

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

''இளம் வயதில் உங்கள் ஓய்வுக் காலத்துக்காக சேமிக்க ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான முடிவு.  டைவர்சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதன்மூலமாக உங்களின் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும்.

பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோகஸ் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

மேலும், 12% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டில் மாதம் ரூ.1,000 என 34 வருடத்துக்கு முதலீடு செய்யும்போது உங்களின் 58-வது வயதில் 57 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

குறைந்தபட்ச  வருமானம் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதன்மூலமாக மாதம் சுமார் ரூ.30 ஆயிரத்துக்குமேல் வருமானம் கிடைக்கும்.''

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:  கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-2.  nav@vikatan.com

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!