ஸ்பெஷல்
Published:Updated:

வீடு... வாசல்... வில்லங்கம்... மோசடிகளுக்கு ஒரு குட்பை!

நாணயம் விகடன் பொக்கிஷம் 30 Nov, 2007

ரியல் எஸ்டேட் மோசடியிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார் வக்கீல் கண்ணன்.  

''கடந்த 30 வருடமாக சொத்து யார் யார் பெயரில் இருந்து வருகிறது என்பதை வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து மனை மற்றும் சொத்து விஷயத்தில் தாலுக்கா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து விவரங்களைக் கேட்க வேண்டும். அவரிடம் ஃபீல்டு மேப் (Field Map) கேட்டு வாங்கவேண்டும். அதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக் குரிய சொத்து எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, சர்வேயர் வைத்து மனை அல்லது வீட்டை அளக்க வேண்டும்.

வீடு... வாசல்... வில்லங்கம்... மோசடிகளுக்கு ஒரு குட்பை!

அ-பதிவேடு வாங்கிப்பார்க்க வேண்டும். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். சொத்தை வாங்குபவர், தன் பெயரில் புதிதாக வாங்கினால், அந்த விவரம் அ-பதிவேட்டில் இடம்பெறும்.

நகரம் என்கிறபோது, தாலுக்கா அலுவலகத்தில் நிரந்தர நிலப் பதிவேடு (Permanent Land Register) இருக்கும். இதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லை, சொத்தின் அளவீடுகள் போன்ற விவரங்கள் இருக்கும். பிளான் மற்றும் பில்டிங் அப்ரூவல், கடைசியாகச் சொத்துவரி கட்டியதற்கான ரசீது போன்றவற்றை வாங்க வேண்டும்.

ஆவணத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், உரிமையாளர் அனுமதியுடன் முன்னணி பத்திரிகைகளில், 'இந்தச் சொத்தை வாங்கப்போகிறேன். இதில் வில்லங்கம், ஆட்சேபனை ஏதாவது இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்கவும்’ என்று விளம்பரம் கொடுப்பது நல்லது.

- சி.சரவணன்.