ஸ்பெஷல்
Published:Updated:

மதுரை கலக்கல்...''கயிறு, கவரு, லைட்டு!''

நாணயம் விகடன் பொக்கிஷம் 01 Feb, 2006

''உங்களுடைய 'ஒருநாள் முதலாளி’ சவாலுக்கு நான் தயார்! ’ என்ற நரசிம்மனிடம்,  1000 ரூபாயைக் கொடுத்தப்படி   ''என்ன பிசினஸ் பண்றதா திட்டம்?'' என்று கேட்டோம்.

''மதுரை டவுன்ஹால் ரோட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பதாகத் திட்டம' என்றவர், செல்போன்களுக்கான ஜிப் கவர், செல்போன் பேனல், இருவகையான ரோப்கள், லைட்டு என வாங்கிவிட்டு, பில் தொகையைக் காட்டினார். 978 ரூபாய்! 950 ரூபாய்க்கு பில்லை செட்டில் பண்ணினார்.

''மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் தானே!'' என்றபடி தெற்கு கோபுரத்தருகே சேல்ஸை ஆரம்பித்தார். ''நாங்க வெளியே கடையில வாங்குறதுல பாதி விலை சொல்றியே... ஒரிஜினல்தானா..?'' என்று சந்தேகப்பட்டனர்.

மதுரை கலக்கல்...''கயிறு, கவரு, லைட்டு!''

''ஒரிஜினல் பீஸ்தான். கடைல வியாபாரம் பண்றவங்களுக்கு ஏகப்பட்ட செலவிருக்கே. ஆனா, எனக்கு அது கிடையாதே அதனால் விலை குறைவு'' என்றார். நம்பிக்கை வரவே,  85 ரூபாய்க்கு முதல் போணியே வெயிட்டாக அமைந்தது.

அடுத்து ஐம்பது ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறிய ரோப்பை இலவசமாக (அடக்க விலை 2 ரூபாய்) வழங்கி அசத்தினார்.

கடிகாரத்தைப் பார்த்த நரசிம்மன், அவசர அவசரமாகக் கிளம்பி வரிசையாக அடுத்தடுத்து மூன்று காலேஜ் விசிட்களை அடித்து 10% தள்ளுபடிகொடுத்து விறுவிறுவென விற்றுமுடித்தார். வரவு செலவுகளை கூட்டிக்கழித்து கணக்கு போட்டு 1,376 ரூபாயை நம்முன் வைத்தார். ஆயிரம் ரூபாயை நம் பக்கம் தள்ளியவர், 376 ரூபாயை பர்ஸுக்குள் திணித்துக் கொண்டார்.

''வரட்டா பாஸு...!'' என்றபடி 'ஜூட்’ ஆன நரசிம்மனின் நிழலில் நாளைய தொழிலதிபர் தெரிந்தார்.

- கி.கார்த்திகேயன்.