Published:Updated:

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

செ.கார்த்திகேயன்

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

குஜராத்தைப்போல..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

மதுரையைச் சேர்ந்த அரசுப் பணியாளர் சமுத்திரகனியுடன் பேசினோம். ''குஜராத்தை முதல் மாநிலமாக மாற்றியதைப்போல, வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ள மாநிலங்களை இந்தியாவின் முதல் மாநிலங்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனிதவளம் அதிகம் உள்ள நம் நாட்டில் இலவசங்களை வழங்காமல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து மக்களை மேம்படுத்த வேண்டும்'' என்றார்.

கிராமங்களின் வளர்ச்சி..!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சிவானந்தம், ''பிஜேபி-யின் முதல் முக்கிய வேலையே விலைவாசி ஏற்றத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதனால், பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் அதிகமாகவே இருக்கின்றன. அந்தக் கிராமங்களின் மீது கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்'' என்றார்.

ஆராய்ச்சி நிறுவனங்கள்..!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளரான மோகனுடன் பேசினோம். ''இந்தியாவில் கல்வி நிலையங்கள் போதுமான அளவுக்குத் தாராளமாக உள்ளன. ஆனால், அதற்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகையால், புதிய கல்லூரிகளைத் திறப்பதை நிறுத்திவிட்டு, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நிறுவனங்களை ஒவ்வொரு துறைக்கும் அதிகரிக்க வேண்டும்'' என்றார் தெளிவாக.

ஜவுளித் துறையில்..!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகரான கே.எஸ்.கே. நடேசனுடன் பேசினோம். ''பருத்தி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. இதை குஜராத்தில் உருவாக்கியவர் மோடிதான். அதே முயற்சியை இந்தியா முழுவதும் எடுத்து டெக்ஸ்டைல் உற்பத்தியில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். டெக்ஸ்டைல் துறையில் துணி, நூல் போன்ற பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு வழிவகைச் செய்யவேண்டும்'' என்றார்.

வேலைகளை விரைவாக்க வேண்டும்!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

சென்னையைச் சேர்ந்த சமூக ஆய்வாளர் ஜெயபாஸ்கரன் எடுத்துவைத்தது முக்கியமானதொரு விஷயத்தை. ''அரசுப் பணியாளர்களைக் கூர்மையாகக் கவனித்து அவர்களின் பணி, செய்த வேலை, போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு தரவேண்டும். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கப் பாடுபட வேண்டும். அரசு துறைகளில் தனியார் நிறுவங்களைப் போன்று தொழில்நுட்பங்களைப் புகுத்தி வேலைகளை விரைவாக்க வேண்டும்'' என்றார்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு அவசியம்!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஐ.டி இன்ஜினீயரான ஹேமநந்தினி, ''பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை மோடி நிறைவேற்ற வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கும், பெண் சிசு கொலை போன்ற குற்றங்களுக்கும் தீவிரமான சட்டதிட்டங்களை மோடி தலைமையிலான அரசு செய்தே ஆகவேண்டும்'' என்றார்.

நீராதாரங்களை மேம்படுத்த வேண்டும்!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாய்ப்பாடிப்புதூரைச் சேர்ந்த விவசாயி மாரப்பன், ''இன்று அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னையால் விவசாயம் மோசமான நிலையில் உள்ளது. அதனைப் பாதுகாக்க மத்திய அரசு, மாநில அரசுகளும் நீராதாரங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுகாதார நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அதற்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மோடி, என்றும் மதவாதத்துக்கு ஆதரவாக செயல்படக் கூடாது'' என்றார்.

ஊதிய உயர்வுக் கொள்கை!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

திருவண்ணாமலையில் வசிக்கும்  இராம.அருணாதேவி இப்படிச் சொன்னார். ''அரசு ஊழியர்களான எங்களுக்குக் கொண்டுவந்திருக்கும் பென்ஷன் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். விலைவாசி அதிகரித்திருப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊதிய உயர்வுக் கொள்கையைப் பிறப்பித்து மக்களின் வருமானத்தையாவது உயர்த்த வேண்டும்'' என்றார்.

வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  பாலமுருகனுடன் பேசினோம்.  ''நதிகளை இணைத்து விவசாயத்துக்கு ஊக்கம் தரவேண்டும். நம் நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்குத் தகுந்த மாதிரி கல்லூரிகளையும், மாணவர்களின் படிப்பையும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பு அளிப்பதோடு இலவசங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். வரி வரம்பை உயர்த்தி ரூ.4-5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும்'' என்றார்.

தேவை மின்சாரம்!

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

கோவை ஆனைக்கட்டியைச் சேர்ந்த விஜயகுமார், ''கோவை எப்போதும் தொழில்சார்ந்த நகரம். அருகில் இருக்கும் திருப்பூருக்கு நிகராக வணிகத்தை ஈட்டித் தரும் நிலையில், இதன் தலையாயப் பிரச்னையாக இருப்பது மின்வெட்டுதான். குஜராத் போன்று தமிழகத்தையும் சூரிய ஆற்றல் போன்ற மரபுசாரா ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி இந்தியா முழுவதையும் அவ்வாறு மாற்ற வேண்டும்'' என்றார்.

இலவசங்களை ஒழித்துக்கட்டி, ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.  நாட்டின் உண்மையான வளர்ச்சியை மனத்தில் கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் மோடி தலைமையிலான இந்தப் புதிய அரசாங்கம் தீட்ட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

  மாணவப் பத்திரிகையாளர்கள்,
படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வீ.சிவக்குமார்,  மு.சரவணக்குமார்.

மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
மோடி ஆட்சியில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்ன?