Published:Updated:

'ஓல்டு இஸ் கோல்டு’

பழைமை தரும் பக்கா வருமானம்! செ.கார்த்திகேயன் - இ.கார்த்திகேயன்,படங்கள்: ர.சதானந்த், தி.ஹரிஹரன்.

ஹாபிஸ்

 ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். பழங்காலப் பொருட்களைப் பொறுத்தவரை இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. பழங்காலப் பொருட்களுக்கான மதிப்பு பத்தாயிரத்தில் தொடங்கி பல லட்சம் ரூபாய்க்கு மேல் செல்கிறது.  

நம்மில் சிலருக்கு பழங்காலப் பொருட்களைச் சேமித்து வைப்பது பிடித்தமான விஷயமாக இருக்கும். அப்படி முன்னதாகச் சேமித்து வைக்கும் பொருட்கள் இன்று நல்ல வருமானத்தை வழங்கி வருகிறது என்பது சுவாரஸ்யமான உண்மை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழைய பொருட்களைச் சேகரிப்பதோடு அது சார்ந்த விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலமும் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். இது குறித்து சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் ப்ளாசாவுக்கு எதிரில் உள்ள பேரார்வமூட்டும் பழைய பொருட்கள் அங்காடியின் (The Old Curiosity Shop)உரிமையாளர் லத்தீப்புடன் பேசினோம்.

ஆர்வமும், அறிவும் என்னை வழிநடத்துகிறது!

''1946-ம் ஆண்டு ‘Kashmir Art Palace’ என்ற பெயரில் என் தந்தை குலாம் முஹம்மது இந்தக் கடையை ஆரம்பித்தார். அவருக்குப்பின் இந்தக் கடையை நான் நடத்திவருகிறேன். எனக்கு முதன்முதலில் ஆர்வம் ஏற்பட்டது அஞ்சல்தலை சேகரிப்பில் தான். அதன்பிறகு என் தாத்தா மற்றும் தந்தை எனக்குக் கொடுத்த பழைய பொருட்களின் மீதான ஆர்வமும், அறிவும் தற்போது என்னை வழிநடத்தி வருகிறது.

'ஓல்டு இஸ் கோல்டு’

பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த என் தந்தை அந்தந்த நாட்டில் செய்யப்படும் கலைப்பொருட்களை வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தார். பின்னர் அதை விற்கவும் ஆரம்பித்தார். இது ஆங்கிலேயர்களை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேய அரசு அதிகாரிகள் முதல் சாதாரணக் கூலி வேலை செய்யும் மனிதர்கள் வரை எங்கள் கடையின் பிரத்யேகமான வாடிக்கையாளராக அமைந்தார்கள். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது.

இதுபோன்ற பழங்காலப் பொருட் களின் மீது காதல் கொண்டிருப்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்தக் கலைப்பொருட்களும் உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்'' என்றவர், பழங்காலப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் அனுபவம் பற்றிப் பேசினார்.

பார்த்தே வாங்குவேன்!

''என் கலை ஆர்வத்தைப் புரிந்துகொண்ட என் தந்தையும் தாத்தாவும் ஒவ்வொரு பொருள் குறித்த அறிவை, அதாவது ஒரு பொருள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு, அதன் வரலாறு போன்ற விஷயங்களை எனக்குள் புகுத்தினார்கள். அந்த அனுபவத்தினாலேயே எங்களின் கடைக்கு வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பழங்காலப் பொருட்களைச் சரியாகக் கண்டுபிடிக்க முடிகிறது.

'ஓல்டு இஸ் கோல்டு’

நான் பழங்காலப் பொருட்களை விற்பதோடு, வாடிக்கையாளர் களிடமிருந்து பழங்காலப் பொருட் களையும் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன். இதுபோன்ற பொருட்களுக்கு எம்ஆர்பி ரேட் இல்லை என்பதால், அதன் தரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆண்டு அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்வேன். வாடிக்கையாளர் கொண்டுவரும் பொருளை ஆராய்ந்து பார்த்தபிறகே நான் விலைக்கு எடுத்துக்கொள்வேன்.

கலை ஆர்வம் பெருக வேண்டும்!

'ஓல்டு இஸ் கோல்டு’

என் கடையில் அரசர் காலத்தைச் சேர்ந்த எண்ணற்ற பழைய பொருட்கள் இருக்கின்றன. பழைய காமிக்ஸ் புத்தகங்கள், புகைப்படங்கள் மற்றும் நிகழ்காலக் கைவினைப்பொருட்களும் அதில் அடங்கும். இங்குள்ள பொருட்களில் பாதிக்குமேல் விற்பனைக்குக் கிடையாது. அவைகளை வாடிக்கையாளர்களின் பார்வைக்காகவே வைத்திருக்கிறேன். இன்றைய நிலையில் இளைய தலைமுறையினர் மத்தியில் ஆர்வத்தை உண்டு பண்ணுவதற்காகவே சில அரிய பழங்காலப் பொருட்களை  பார்வைக்கு வைத்திருக்கிறேன். மொத்தத்தில், கலை ஆர்வம் இருப்பவர்களுக்கு எங்கள் கடை ஒரு நல்ல விருந்தை அளிக்கும்'' என்றார்.

சேகரிப்பு தரும் உற்சாகம்!

பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான பொருட்களைச் சேமித்து, அதை ஓர் அருங்காட்சியகமாகவே நடத்தி வருகிறார் திருநெல்வேலி அத்தாளநல்லூர் விவசாயி முருகையா பாண்டியன். இவரைச்  சந்தித்துப் பழங்காலப் பொருள் சேகரிப்பு பற்றிப் பேசினோம்.

''நான் சிறுவயது முதலே பழங்காலப் பொருட்கள் சேமிப்பதைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தேன். நாளுக்குநாள் அதன் மீதான ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க பழங்காலப் பொருட்களும் அதிகரித்து வந்தது. அன்றைய நிலையில் பழங்காலப் பொருட்களைப் பணம் தந்தும், பணத்துக்குப் பதிலாக நெல்மணிகளைத் தந்தும் வாங்கியிருக்கிறேன். என் ஆர்வத்தைப் பாராட்டி சிலர் அவர் களிடம் இருக்கும் பழங்காலப் பொருட்களை இலவசமாகத் தந்தார்கள். தற்போதும் என் விளைநிலங்களில்

'ஓல்டு இஸ் கோல்டு’

இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பழங்காலப் பொருட்களைச் சேகரித்து இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்கிறேன். பழங்காலப் பொருட் களைச் சேகரிப்பது என்னை உற்சாகப்படுத்துகிறது.

பழங்காலப் பொருட்களை என்னிடம் விற்க கொண்டுவருபவர்களிடம் நான் பேரம் பேசுவதில்லை. ஆனால், அது உண்மையான பழங்காலப் பொருள்தானா என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே வாங்குவேன். இங்குள்ள பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கானது கிடையாது. எனக்குப்பின் வரும் என் சந்ததிகள் இந்த அருங்காட்சியகத்தைப் பராமரிப்பார்கள்'' என்றார்.

இவரிடம் 70 நாடுகளின் ஆயிரத்துக் கும் மேற்பட்ட நாணயங்கள், பழங்கால ஆயுதங்கள், 100 தேதிகளுடன் உள்ள கடிகாரம், ஆங்கிலேயர் பயன்படுத்திய ரிவால்வர், மலைவாழ் மக்களின் ஊதுகுழல், அனகோண்டா போன்ற பெரிய பாம்பின் மீது நேபாள மக்கள் அமர்ந்து, பாம்பை அடக்குவது போன்று செய்யப்பட்ட அபூர்வக் கம்பி, இரட்டை நாக்கு மணி, அரண்மனை களைப் பூட்டும் உழக்குப்பூட்டு, பெண்கள் கூந்தலைச் சிக்கெடுக்கும் சிக்குலி, முதுமக்கள் பயன்படுத்திய மண் இட்லிச்சட்டி என இருப்பவை அத்தனையும் வரலாறு பொதிந்த பொக்கிஷங்கள்.

'ஓல்டு இஸ் கோல்டு’

பழங்காலப் பொருட்கள் உங்களது வீட்டில் இருந்தால் அதைத் தயவு செய்து பராமரித்துப் பத்திரப்படுத்தி வையுங்கள். பிற்பாடு அது நிறைய பணத்தை உங்களுக்குச் சம்பாதித்துத் தரும்!