Published:Updated:

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

பிரீமியம் ஸ்டோரி

அதிக பணவீக்க விகிதம், அதிக வட்டி, ரூபாய் மதிப்பு குறைவு, பொருளாதார மந்தநிலையைத் தாண்டி முடிந்த மார்ச் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிகர லாபம் ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது. இதேகாலத்தில் விற்பனை 13% கூடி இருக்கிறது. சிறந்த நிர்வாகம் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமாகி இருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

முடிந்த காலாண்டில் ஐ.டி, டெலிகாம், வாகன உதிரிபாகங்கள், உரம் போன்ற துறை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சிகண்டுள்ளன. இதில், அதிபட்சமாக ஐ.டி நிறுவனங்களின் வருமானம் ஏறக்குறைய 40% உயர்ந்துள்ளது. டி.சி.எஸ்., ஜென்ஸார், விப்ரோ, இன்ஃபோசிஸ், என்.ஐ.ஐ.டி., ரோல்டா இந்தியா, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களின் லாபம் உயர்ந்ததால் இந்த அதிகரிப்பு சாத்தியமாகி உள்ளது.  

அதேநேரத்தில், சுழற்சி அடிப்படையில் இயங்கும் கேப்பிட்டல் கூட்ஸ், சிமென்ட், கட்டுமானம், மெட்டல்ஸ் போன்ற துறைகளின் வளர்ச்சி பின்னடைவு கண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் நிலைமை அடுத்த ஓரிரு காலாண்டுகளில் மாறும் என அனலிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

வாகனத் துறை!

வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் நிகர லாபம் 1.3% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், வாகன உதிரிபாக நிறுவனங்களின் லாபம் 25% அதிகரித்துள்ளது.  

டயர் துறை நிறுவனங்களின் நிகர லாபம் 29% அதிகரித் திருக்கிறது. மார்ச் காலாண்டில் அப்போலோ, சியட், குட்இயர் போன்ற நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சி பெற்றிருக் கின்றன.

வங்கி!

வாராக்கடனுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, கடன் வளர்ச்சிக் குறைவு போன்றவற்றால் வங்கிகளின் லாபம் 3% குறைந்துள்ளது. அதே நேரத்தில், நிதிச் சேவை நிறுவனங்கள் 3.5% வளர்ச்சி கண்டுள்ளது.

சிமென்ட்!

உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் கட்டுமான வேலைகள் பெரிய அளவில் நடக்கவில்லை என்பதால், சிமென்ட்கான தேவை குறைந்து, அந்தத் துறை நிறுவனங்களின் நிகர லாபம், மைனஸ் 3 சதவிகிதமாக உள்ளது.  

எரிசக்தி!

எனர்ஜி என்கிற எரிசக்தி துறை நிறுவனங்களின் நிகர லாபம், முடிந்த மார்ச் காலாண்டில் 14% குறைந்துள்ளது. கெய்ர்ன் இந்தியா (28%), எஸ்ஸார் ஆயில் (123%), ஓ.என்.சி.ஜி. (44%) தவிர, இதர நிறுவனங்கள் இழப்பில் இருக்கின்றன.

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

உரம்!

இந்திய உரத்துறை நல்ல உரமாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனங்களின் நிகர லாபம் 335 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. கொரமண்டல், குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைஸர்ஸ் போன்றவற்றின் நிகர லாப வளர்ச்சியே இதற்கு காரணம்.

எஃப்.எம்.சி.ஜி!

இந்தத் துறை நிறுவனங்களின் நிகர லாபம் ஒட்டுமொத்தமாக 30% அதிகரித்துள்ளது. ஐ.டி.சி., பிரிட்டானியா, கோத்தாரி புராடக்ட்ஸ், நெஸ்லே போன்ற நிறுவனங்களின் நிகர லாப உயர்வு இதற்கு கைகொடுத்துள்ளது.

பார்மா!

பார்மா நிறுவனங்களின் நிகர லாபம் 14% அதிகரித்துள்ளது. வொக்கார்ட், ரான்பாக்ஸி,  பைஷர், நோவார்ட்டீஸ், டாக்டர் ரெட்டீஸ், கெடிலா, சிப்லா, எல்டர் பார்மா, ஜி.எஸ்.கே. பார்மா போன்ற முன்னணி நிறுவனங்களின் லாபம் நிகர இழப்பில் இருப்பதே முக்கிய மூல காரணம்.

பவர்!

என்.டி.பி.சி, பி.டி.சி போன்ற நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டால் பவர் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம் 36% உயர்ந்துள்ளது.

  ஸ்டீல்!

ஸ்டீல் நிறுவனங்களின் நிகர லாபம் 6% குறைந்துள்ளது. டாடா ஸ்பான்ச், டாடா ஸ்டீல், டின் பிளேட், மஹாராஷ்ட்ரா சீம்லெஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பில்தான் இருக்கின்றன.

  டெலிகாம் சேவை!

இந்தத் துறையில் பட்டிய லிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் முடிந்த மார்ச் காலாண்டில் சிறப்பாக இயங்கி இருக்கின்றன.

பார்தி ஏர்டெல் (120%), பார்தி இன்ஃப்ரா டெல் (66%), ஐடியா (91%), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (512%) போன்ற நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.

1,650 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைக் கொண்டு பார்க்கும்போது, நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் 17% உயர்ந்துள்ளது இது கடந்த மூன்றாண்டுகளில் மிக அதிகமாக இருக்கிறது.

மொத்தத்தில், முடிந்த மார்ச் காலாண்டு முன்னேற்றத் துக்கான அச்சாரமாக இருக்கிறது எனலாம்.

           - சி.சரவணன்

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?
மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

.கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை சரியாகப் புரிந்துகொள்ள இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம்.

 முக மதிப்பு! (Face Value)

ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10, 100 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

புத்தக மதிப்பு! (Book Value)

ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி?

செயல்பாட்டு லாப வரம்பு! (Operating Profit Margin)

நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம் செயல்பாட்டு லாபம்.

இந்த லாபம் விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்! (Market Capitalization)

ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட் டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.  

இ.பி.எஸ்.! (Earning per share)

ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ் எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது.

நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ் அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  

பி/இ விகிதம்! (Price to Earnings Ratio)

ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம்.

இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பி/பி.வி.! (Price to book Value)

நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது.

இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.  

 - சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு