Published:Updated:

உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோர் உதய் கோட்டக்!

ச.ஸ்ரீராம்

உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோர் உதய் கோட்டக்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

கோட்டக் மஹிந்திரா பேங்கின் நிர்வாக இயக்குநரான உதய் கோட்டக்கை இந்த ஆண்டின் உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோராக தேர்வு செய்துள்ளது எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம். 51 நாடுகளிலிருந்து 60 தொழில்முனைவோர்களை தேர்வு செய்து, அதிலிருந்து இறுதியாக உதய் கோட்டக்கை உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோராக தேர்வு செய்துள்ளது எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம்.

உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோர் உதய் கோட்டக்!

2003-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி இந்தப் பெருமையை பெற்றார். அவருக்குப்பின் பத்து ஆண்டுகள் கழித்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது இந்தியர் உதய் கோட்டக்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1959-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் உதய்; சிறுவயதில் பள்ளியில் இரண்டு விஷயங்களில் வல்லவராக இருந்தார். அதில் ஒன்று, கிரிக்கெட். பள்ளி அணியில் அவர் படிக்கும் காலம் முழுவதுமே கேப்டனாக விளங்கினார். இன்னொன்று, கணிதம். இந்த இரண்டாவது திறமைதான், அவரது வாழ்க்கையைத் தீர்மானித்தது. வங்கிகளில் வைப்பு நிதிகளுக்கு குறைவான வட்டி வழங்கப்படுவதும், ஆனால் நாம் வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதும் சிறுவயதிலேயே உதயை யோசிக்க வைத்தது. வங்கிகளைவிடக் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க, சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் உதய். அது நல்ல வரவேற்பை பெற்றது.

1986-ம் ஆண்டு ஃபைனான்ஸ் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட கோட்டக் நிறுவனம், கொஞ்சம்

கொஞ்சமாக அடுத்த நிலைகளுக்கு முன்னேறிச் சென்றதில் உதய் கோட்டக்கின் செயல்பாடுகள் அதிகம். ஆட்டோ ஃபைனான்ஸ், செக்யூரிட்டீஸ், இன்ஷூரன்ஸ் என பல துறைகளிலும் கால்பதித்த கோட்டக் நிறுவனம், 2003-ம் ஆண்டில் வங்கியாக மாறியது. வங்கியாக மாறிய முதல் நிதி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றது கோட்டக்.

தற்போது 354 இடங்களில் 605 கிளைகளோடு 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கி வரும் கோட்டக் மஹிந்திரா வங்கியை வெற்றிகரமாக நடத்த காரணமாக இருக்கும் உதய் கோட்டக், உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோர்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism