நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

ரயில்வே பட்ஜெட் 2014 :இனி ரயில் கட்டணம் ஏறியிறங்கும்!

நீரை.மகேந்திரன்

ரயில்வே பட்ஜெட் 2014 :இனி ரயில் கட்டணம் ஏறியிறங்கும்!

தனது முதல் ரயில் பட்ஜெட் தாக்கல் மூலம் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா. இந்த ரயில் பட்ஜெட் எப்படி இருந்தது, அது தொழில் துறையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என சொன்னார் பிஎஸ்ஆர் ஆலோசனை நிறுவனத்தின் பார்ட்னர் (கேபிஎம்ஜி-ன் துணை நிறுவனம்) ஆர்.வெங்கடேசன்.

ரயில்வே பட்ஜெட் 2014 :இனி ரயில் கட்டணம் ஏறியிறங்கும்!

''பட்ஜெட்டுக்கு முன்பே ரயில் கட்டணங்களை ஏற்றிவிட்டதால் இப்போது விலை ஏற்றப்படவில்லை. அந்தவகையில் எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சாமர்த்திய பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அந்நிய நேரடி முதலீடு, ரயில் நிலைய மேம்பாடு, சரக்கு ரயில்கள் வடிவமைப்பில் மாற்றம், ரயில்வே சொத்துக்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது, டிக்கெட் புக்கிங் செய்வது முதல் ரயில்களில் இணைய வசதி கொடுப்பதுவரை மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகப்படுத்துவது, அடுத்த ஐந்து வருடங்களில் பேப்பர் பயன்பாடு குறைப்பது என அனைத்து மட்டத்திலும் தங்களது பார்வையைச் செலுத்தியுள்ளது.

இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் வருமானத்தில் 94 பைசா வரை செலவாகிறது. 6 பைசா மட்டுமே உபரியாக நிற்கிறது. ரயில்வே வருமானம் இப்படியிருக்க புதிய திட்டங்களை நிறைவேற்றுவது இந்திய ரயில்வே முன்னுள்ள மிகப் பெரிய சவால்தான்.

கடந்த 30 வருடங்களில் 676 திட்டங் கள் அனுமதிக்கப்பட்டு, அதில் 317 திட்டங்கள்தான் நிறைவேறியுள்ளன. மீதமுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில், ரூ.1.82 லட்சம் கோடி முதலீடு தேவை. தவிர, வைர நாற்கரத் திட்டத்துக்கு 9 லட்சம் கோடியும், புல்லட் ரயில் திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடியும் தேவை என மதிப்பிடப் பட்டுள்ளது. இதுதவிர, ரயில்வே துறையை நவீனப்படுத்த ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வீதம் அடுத்த பத்து வருடங்களுக்கு 5 லட்சம் கோடியும், ரயில்

ரயில்வே பட்ஜெட் 2014 :இனி ரயில் கட்டணம் ஏறியிறங்கும்!

பாதைகளை மேம்படுத்த 40 ஆயிரம் கோடியும் தேவையாக உள்ளது.

ரயில்வே துறையை நவீனப்படுத்த, புதிய திட்டங் களைச் செயல்படுத்த தனியார் - பொதுமக்கள் கூட்டு முதலீடுகள் திரட்டப்படும் எனவும், அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கிய பிறகு இந்தத் திட்டங்களைத் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதுபோல தனியார் - பொதுமக்கள் கூட்டு முதலீடு திட்டங்களும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆக மொத்தத்தில், வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பட்ஜெட் இது'' என்றார். அவர்

ஆனால், ரயில்வே கட்டணமானது இனி எரிபொருளின் விலையேற்றதுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் முடிவு செய்திருப்பதால், இனி ரயில் கட்டணம் அடிக்கடி ஏறியிறங்க வாய்ப்புண்டு. இது ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்!