நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

த்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் தொழில் துறையினரை திருப்திப்படுத்தியிருக்கிறதா என்பதை அறிய அந்தத் துறையைச் சேர்ந்த பல முக்கிய தொழிலதிபர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் சொன்ன கருத்துக்கள் இனி:

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

பொருளாதாரமும், தொழிலும் வளரும்!

ஒய்.எம்.டியோஸ்தாலீ, தலைவர்,
எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்.

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான பிரச்னைகள் நிதியாண்டு முடிவுக்குள் சரிசெய்யப்படும். திட்டம் சாராத செலவுகளைக் குறைத்தல், நிலையான வரி முறை உள்ளிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். சாலை மேம்பாட்டுக்காக ரூ.37,880 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன்மூலம் நாட்டில் போக்குவரத்து வசதி மேம்பட்டு, தொழில் துறை வளரும் என எதிர்பார்க்கலாம்''.

 வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!

சி.கே.ரங்கநாதன், நிறுவனர், கெவின்கேர் .

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''இந்த பட்ஜெட் நீண்ட காலத்தில் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்டாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி என்பது 7 - 8 சதவிகிதம் இருக்கும் என கூறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக தனியாக குழு அமைப்பது, மானிய செலவைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது, இன்ஷூரன்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்திருப்பது ஆகியவை வரவேற்கத்தக்கது. மேலும், புதிதாகத் தொழில் துவங்குவதற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது அதிகமாக தொழில் துவங்குவதற்கு வழிவகைச் செய்யும். ஜிஎஸ்டி கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.'

ஐ.டி துறைக்கு நல்ல வாய்ப்பு!

கிருஷ்ணகுமார், சிஇஓ மைண்ட்ட்ரீ.

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''ஐ.டி துறையில் இருந்த வேலையின்மை பட்ஜெட்டுக்குபின் இல்லாத நிலை உருவாகும். காரணம், தொழில் முனைவோர்களுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறையினர்களுக்கும் பொதுவானது என்றாலும், ஐ.டி துறையில் சாதிக்க நினைக்கும் தொழில்முனைவோர்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு பயன் தருவதாகவே இருக்கும். இந்த நிதியைக் கொண்டு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

ஐ.டி துறை சார்ந்து இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் 'குட் கவர்னன்ஸ்’ திட்டத்துக்கு 100 கோடி ரூபாயையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 500 கோடி ரூபாயையும் ஒதுக்கியிருப்பதே. அரசு துறை சார்ந்த வேலைகளின் பளுவைக் குறைக்க மற்றும் அனைத்து இடங்களிலும் பிராட்பேண்ட் வசதியை அமைக்க இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறை மட்டுமல்லாது, மற்ற அனைத்து துறைகளுக்கும் நிதியை ஒதுக்கியிருக்கிறது இந்த அரசாங்கம். அதன் செயல்பாடுகளின் தீவிரம் இனி எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.''

ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

ரஃபீக் அஹமது, தலைவர், ஃபியோ.

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''மத்திய அமைச்சர் இந்த பட்ஜெட்டில் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை மேம்படுத்த திட்டங்களை அறிவித்திருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை இது ஏற்படுத்தும். மேலும், முக்கிய துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பரிமாற்றங்கள் ஒற்றைசாளர முறையாக்கப்படும் என்பதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களின் நேரத்தையும் பணத்தையும் குறைக்க பெரிதும் உதவும். பொருளாதாரச் சிறப்பு மண்டலங்கள் புதுப்பிக்கப்படுவதால் எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு மொத்தத்தில் இந்த பட்ஜெட் பயனளிப்பதாக உள்ளது.''

எஸ்எம்இகளுக்கு ஏமாற்றம்!

கோபாலகிருஷ்ணன், தலைவர், டான்ஸ்டியா

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''இந்த பட்ஜெட்டில் எஸ்எம்இ-களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. வட்டிவிகிதம் குறைப்பு, சேவை வரிவரம்பு அதிகரிப்பு மற்றும் வாராக் கடனுக்கான உச்சவரம்பு காலத்தை (90 நாட்களிலிருந்து 180 நாட்களாக) அதிகரிப்பது போன்றவற்றைக் கேட்டிருந்தோம். ஆனால், இதுபற்றிய அறிவிப்புகள் எதுவுமில்லாதது ஏமாற்றமே. சென்னை - பெங்களூரு தொழிற்பாதை, புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள சோலார் திட்டம் போன்றவை எஸ்எம்இ-களுக்கு நல்ல வாய்ப்பாகும். தொழில் தொடங்க வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்ட் ரூ.10,000 கோடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் புதுப்பிக்கப்படுவதும் சாதகமானவை. ஆனால், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாததால், இந்த பட்ஜெட் எஸ்எம்இ-களுக்கு அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை.''

டெக்ஸ்டைல் கிளஸ்டர்களை உருவாக்குவது வரவேற்கத்தக்கது!

இ.கோ.பொன்னுசாமி, தலைவர், கொடிசியா.

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

''திறன்வளர்ப்பு மையங்கள் மூலமாக அதிக வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும். 7 புதிய தொழில் நகரங்கள், 20 புதிய தொழில் அமைப்புகளும், 6 டெக்ஸ்டைல் அமைப்புகளும் உருவாக்குவது வரவேற்கத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உணவு பதப்படுத்தல், காலணி மற்றும் தயாரிப்புத் துறைகளுக்கான உற்பத்தி வரியைக் குறைத்திருப்பது அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.'  

 - நாணயம் டீம்

விலைவாசி உயரும்!

டி.பி.கபாலி, பொருளாதார நிபுணர்.

 ''இந்த பட்ஜெட் பற்றி கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. இதில் கூறியுள்ள விஷயங்களை வைத்துப்பார்த்தால், நாட்டில் வளர்ச்சி ஏற்படுவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. கடும் விலைவாசி  உயர்வே வளர்ச்சி குன்றியதற்கான மிக முக்கிய காரணம். ஆனால், இந்த பட்ஜெட்டினால் விலைவாசி இன்னும் உயருவதற்கான அறிகுறிகளே தெரிகிறது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பற்றாக்குறை என்பது இருக்கவே செய்யும். அந்தப் பற்றாக்குறையை எப்படி நிரப்புவது என்பதுதான் மிக மிக முக்கியமான விஷயம். பற்றாக்குறையை காங்கிரஸ் அரசாங்கம் ரூபாய் நோட்டை அச்சடிப்பதன் மூலமே பெருமளவு நிரப்பியது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்தது.  ஆனால், புதிய அரசும்  அதே வழிமுறையைத்தான் கடைப்பிடிக்கும் என்று தெரிகிறது.

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

நோட்டு அடித்து பற்றாக்குறையைக் குறைப்பதவிட, மானியங்களை பெருமளவில் குறைப்பதன் மூலம் பற்றாக்குறையைக் குறைக்கலாம். இது குறுகியகாலத்தில் மக்களுக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு அது ஒன்றே வழி. பட்ஜெட்டில் நிதி அமைச்சர்  வருகிற 2015 - 16ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.6 சதவிகிதமாகவும், 2016 - 17ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகவும் குறைத்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறார். அவ்வாறு குறைப்பது எண்களின் ஜாலத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.'

''வழக்கம்போல் வியாபாரம்''  

 அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர்.

''பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் அரசாங்கம் ஏற்படுத்தி விட்டுப்போன பிரச்னைகளைஅனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர்.

வெள்ளை அறிக்கையாக வெளியிட  வேண்டும் என கடந்த மே 19ம் தேதி அன்று கோரிக்கை வைத்தேன். வெள்ளை அறிக்கையை விட்டுவிட்டு, இந்த பட்ஜெட் மூலம் கசப்பு மருந்து தந்திருக்கலாம். ஆனால், இதைச் செய்ய தவறிவிட்டார்கள். அந்தவகையில் பாரதிய ஜனதா, காங்கிரஸிலிருந்து வேறுபடவில்லை. வழக்கம்போல் வியாபாரம்தான்!

தொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்வார் என்றுதான் மோடியிடம் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி இருக்கிறது. 201415ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவிகிதமாகக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை. அரசின் நிறுவனம் சாராத வருமான வரியை 27 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். அது இன்னும் ஏழு மாதத்தில் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த பட்ஜெட் அறிவிப்புகள், இந்திய பொருளாதாரத்தைப் பாதி ரயில் பயணத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.''