Published:Updated:

விமானப் பயணம்...குறைவான கட்டணத்தில் பறக்கலாம்!

ச.ஸ்ரீராம் படம்: இ.பொன்குன்றம்.

10 ரூபாயில் பெங்களூருக்கு விமானப் பயணம்... 1000 ரூபாயில் பாங்காக்குக்கு விமான டிக்கெட்... 10,000 ரூபாயில் ஆஸ்திரேலியாவுக்கே சென்று வந்து விடலாம்... இது வெறும் விளம்பரம் அல்ல. உள்ளபடியே இன்றைக்கு ஆஃபர் என்கிற பெயரில் விமானக் கட்டணத்தைத் தரைமட்டத்துக்கு குறைத்து விற்கின்றன பல விமான நிறுவனங்கள். இந்த ஆஃபர்களை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது என சென்னை டிராவல் ஏர் மெட்ராஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனந்த கிருஷ்ண குப்தாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘இந்த ஆஃபர்கள் எப்போதும் இருக்கும் விஷயமல்ல. சில குறிப்பிட்ட நாட்களில் அல்லது குறிப்பிட்ட மாதங்களில்தான் இருக்கும். இவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், குறைந்த செலவில் தங்களது விமானப் பயணத்தை அமைத்துக்கொள்ள முடியும்.

 அட்வான்ஸ் புக்கிங்!

நீங்கள் செல்லும் ஊருக்கு குறிப்பிட்ட மாதங்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தால் 40-50% என்ற அளவில் கட்டணக் குறைப்பு கிடைக்கும். இதைத்தான் அட்வான்ஸ் புக்கிங் என்கிறோம். உதாரணமாக, நவம்பர் மாதம் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால், அதாவது ஆகஸ்ட்டில் பதிவு செய்தால் கட்டணத்தில் ஆஃபர் அளிக்கப்பட்டுப் பயணிக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்ப வர்களுக்கு இந்த அட்வான்ஸ் புக்கிங் பேருதவியாக இருக்கும்.

விமானப் பயணம்...குறைவான கட்டணத்தில் பறக்கலாம்!

ரூபாய்களில் ஆஃபர்!

சென்னை டு பெங்களூரு 10 ரூபாய்க்கு, பெங்களூரு டு கோவா 100 ரூபாய்க்கு என பல ஆஃபர்களை அடிக்கடி நீங்கள் ஆன்லைனில் பார்த்திருப்பீர்கள். இதுவும் சாத்தியம் தான். ஆனால், வெறும் 10 ரூபாயில் நீங்கள் பெங்களூருக்குச் சென்றுவிட முடியாது. இந்த ஆஃபரில் நீங்கள் வாங்கிய டிக்கெட்டுக்கு கட்டவேண்டிய வரியானது அதிகமாகவே இருக்கும். தற்போது உள்ளூர் விமானங்களில் வரி களுமே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே, வழக்கமான விமான டிக்கெட்டைவிட இந்த ஆஃபர் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் குறைவாகவே இருக்கும்.

விமானப் பயணம்...குறைவான கட்டணத்தில் பறக்கலாம்!

ஆன்ஸ்பாட் ஆஃபர்ஸ்!

ஆன்ஸ்பாட் ஆஃபர்ஸ் என்பது விமான நிலையத்தில் உள்ள கவுன்டரில் டிக்கெட் பெற்றுக்கொண்டு பயணிப்பது, சில சமயங்களில் இதற்கென்று சிறப்பு ஆஃபர்களை அளிக்கின்றன சில விமான நிறுவனங்கள். குறிப்பிட்ட தினங்களில் டிக்கெட் விலை குறைவாக இருக்கும். ஏனெனில், அந்த நாட்களில் பயணிகள் குறைவான அளவில் பயணம் செய்வார்கள். குறிப்பாக, செவ்வாய்க் கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

இப்படிப்பட்ட நாட்களில் விமானம் குறைந்த பயணிகளுடன் காலியாகப் பயணம் செய்வதைக்காட்டிலும், குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த ஆஃபர்களை வழங்குகிறது. அவசரமாகப் பயணிக்கும் சிலருக்கு இந்த ஆஃபர்கள் பயனுள்ளதாக அமையும். ஆனால், இவையும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குமுன் மட்டுமே துவங்குகிறது.

ஆன்லைன் புக்கிங்!

விமானப் பயணம்...குறைவான கட்டணத்தில் பறக்கலாம்!

ஒருமுறை நீங்கள் ஆன்லைனில் புக் செய்துவிட்டால், அந்த நிறுவனம் விமானக் கட்டணம் பற்றிய ஆஃபர்களை யும், உங்களுக்கு என்று சில சிறப்பு ஆஃபர்களையும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்ந்து அனுப்பும். இதனையும் பயன்படுத்தி குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்.

சீஸன் புக்கிங்!

குறிப்பிட்ட சீஸனில் இந்த ஆஃபர் களை வழங்குகின்றன சில விமான நிறுவனங்கள். உதாரணமாக, தீபாவளிக்கு நீங்கள் புக் செய்ய வேண்டும் எனில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த ஆஃபர்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என்று விளக்கினார் குப்தா.

பிறகென்ன, அடுத்த ஆஃபரில் டிக்கெட் வாங்கி, விமானத்தில் பறக்க வேண்டியதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு