Published:Updated:

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள்...

மக்களுக்கு என்ன பயன்?செ.கார்த்திகேயன் படங்கள்: ப.சரவணகுமார், இரா.யோகேஷ்வரன்.

பிரீமியம் ஸ்டோரி

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ''விவசாயிகள், வருமானம் குறைவாக உள்ள குடும்பங்கள், சிறுதொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறை சார்ந்தவர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களின் கடன் மற்றும் நிதித் தேவை களை பூர்த்தி செய்யும்விதமாக சிறு வங்கிகள் மற்றும் டெபாசிட் வங்கிகள் (small and payment banks) அமைக்கப்படும்'' என்று அறிவித் திருந்தார்.

இதன் முதல்கட்டமாக சமீபத்தில் ஆர்பிஐ, சிறு வங்கிகள் மற்றும் டெபாசிட் வங்கிகள் தொடங்குவதற்கான வரைவு வழிகாட்டியை (Draft Guideline)  வெளியிட்டிருக்கிறது.

ஆர்பிஐ வரைவு வழிகாட்டி!

இந்த வழிகாட்டியின்படி, டெபாசிட் வங்கியின் (payment bank) செயல்பாடு பணத்தைத் திரட்டுவது மற்றும் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்வது என்கிற அளவிலேயே இருக்கும். இந்த வங்கி கடன் எதுவும் தராது. ஆனால், சிறு வங்கிகள் பணத்தை டெபாசிட் பெறுவதுடன், சிறு விவசாயிகள் மற்றும் அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கவும் செய்யும்.

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள் பற்றி ஆர்பிஐன் வரைவு வழிகாட்டியில் உள்ள முக்கிய விஷயங்கள் இனி:

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள்...

டெபாசிட் வங்கிகளில் பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சேமிக்க முடியும்.

வங்கிசாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், மொபைல் டெலிபோன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் சிறு மற்றும் டெபாசிட் வங்கிகளுக்கான உரிமத்தைப் பெறலாம்.

இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் பட்சத்தில் ஏதேனும் ஒரு வங்கியை ஆரம்பிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு வங்கிசாரா நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பு 120 கோடி ரூபாயாக இருந்தால், அந்த நிதி நிறுவனம் சிறு வங்கி அல்லது டெபாசிட் வங்கியில் ஏதேனும் ஒன்றை தொடங்கலாம். இரண்டையும் தொடங்க நினைக்கும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 200 கோடி ரூபாயாக இருக்கவேண்டியது அவசியம்.

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகளைத் தொடங்க நினைக்கும் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிர்வாகத்தில் 10 வருடம் அனுபவம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்.

உள்ளூர் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்களும் சிறு வங்கிகளாகத் தங்களை மாற்றிக்கொள்ளலாம்.

முதல் மூன்று ஆண்டுகளில் வங்கிகளே இல்லாத கிராமப்புறங்களில் 25 சிறிய வங்கி கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்.

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள்...

வரவேற்கிறோம்!

டெபாசிட் மற்றும் சிறிய வங்கிகள் ஆரம்பிக்க வரைவு வழிகாட்டியை ஆர்பிஐ வெளியிட்டிருப்பது தொடர்பாக, அதன் சாதக, பாதகங்கள் குறித்து ராம் குழுமத்தின் இயக்குநர் ஜி.எஸ்.சுந்தரராஜனிடம் பேசினோம்.

''டெபாசிட் மற்றும் சிறிய வங்கிகளை ஆரம்பிக்க ஆர்பிஐ டிராஃப்ட் கைடுலைன்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். கிராமப்பகுதி களில் வங்கி சேமிப்புகளை டெபாசிட் வங்கிகள் அதிகரிக்கும்.

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள்...

இந்த வங்கிகள் மூலம் திரட்டப்படும் நிதிக்கு தகுந்த வட்டியானது வழங்கப்படும்படியாகவே திட்டங்கள் அமைக்கப்படும். அல்லது அந்தப் பணத்தை வைத்து லாபம் ஈட்டும்விதமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் விதிமுறைகளை ஆர்பிஐ வகுக்கும் என்பதே என் கருத்து.

அதேபோல, சிறிய வங்கிகளின் செயல்பாடும், உள்ளூர் வங்கிகளின் செயல்பாடும் ஏறக்குறைய  ஒரேமாதிரி இருக்கிற மாதிரியே ஆர்பிஐ கைடுலைன் வெளியிட்டிருக்கிறது. சிறு வங்கிகளைப் பொறுத்தவரை, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் தொடங்க அனுமதி வழங்க வேண்டும்''  என்றார்.

இன்னும் தெளிவு வேண்டும்!

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி என்.சுந்தரத்திடம் கேட்டோம். ''டெபாசிட் மற்றும் சிறிய வங்கிகள் வரும்போது இதுவரை வங்கியை பயன்படுத்தாத வர்கள் பயன்படுத்துவார்கள். டெபாசிட் வங்கியைப் பொறுத்தவரை சர்வீஸ் மட்டுமே என்கிறபடியான வழிகாட்டுதலை ஆர்பிஐ தந்திருக்கிறது. இதனால் டெபாசிட் வங்கி ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்கு லாபம் தரும் விஷயம் எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் இதில் இன்னும் தெளிவு தேவை.

சிறு மற்றும் டெபாசிட் வங்கிகள்...

சிறிய வங்கியைப் பொறுத்தவரை, வழக்கமான வங்கிகளைப்போல கடன் வழங்குதல், டெபாசிட் பெறுதல் மற்றும் பணப் பரிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருப்பதால், பெரும்பாலானவர்கள் சிறிய வங்கி களையே ஆரம்பிக்க முன்வருவார்கள்'' என்றார்.

ஆர்பிஐ இந்த வரைவுவழி காட்டியை வெளியிட்டு பல துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது.ஆகஸ்ட் 28க்குள் இந்தக் கருத்தை ஆர்பிஐ எதிர்பார்ப்பதால், டெபாசிட் மற்றும் சிறிய வங்கிகள் குறித்த புதிய கைடுலைன் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு