Published:Updated:

மிராக்கிள் மேன் மோரிஸ் குட்மேன்!

மிராக்கிள் மேன் மோரிஸ் குட்மேன்!

பிரீமியம் ஸ்டோரி

தடைக்கல்லும் படிக்கல்லே!

கடுமையான விமான விபத்து. அதிலிருந்து உயிர் பிழைத்த தோடு, நொந்துபோயிருப்பவர்களை எல்லாம் தட்டியெழுப்பும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் ஆகவேண்டும் எனில், எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையின் இன்னொரு பெயர்தான் மோரிஸ் குட்மேன்!

1945-ல் அமெரிக்காவில் பிறந்த மோரிஸுக்கு சிறுவயது முதலே படிப்பில் அதிக நாட்டமில்லை. கல்லூரியில் படிக்கப்போன இவர், பாதியிலேயே படிப்பைவிட்டு வெளியேறினார். பின்னர் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் செலுத்திய மோரிஸ், தனது உறவினரின் வழிகாட்டுதலில் இன்ஷூரன்ஸ் பாலிசி விற்கும் தொழிலை செய்ய ஆரம்பித்தார்.

பத்து ஆண்டுகளில் மோரிஸ் குட்மேன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். நல்ல முறை யில் தொழில் செய்துவந்த அவருக்கு விமானம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். எனவே, விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸுக்கு விண்ணப்பம் செய்தார்.

மிராக்கிள் மேன் மோரிஸ் குட்மேன்!

அனுமதி கிடைத்தவுடன் புதிய விமானம் ஒன்றையும் வாங்கினார். ஒருநாள் விமானம் ஓட்டும்போது நடுவானில் திடீரென அதன் இன்ஜின் செயலிழந்தது. பக்கத்திலிருந்த விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயற்சித்தபோது, அந்த விமானம் விபத்துக்குள்ளானது. மோரிஸின் முதுகுத் தண்டுவடம் உடைந்து படுத்தபடுக்கையானார்.

இனி அவரால் சாதாரண மனிதரைபோல் செயல்பட முடியாது என்று மருத்துவர்கள் கூற, ஒருநாள் திடீரென அவரது தங்கை மோரிஸின் கண்களில் அசைவு இருப்பதை அறிந்தார். இதையடுத்து, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து, அவர் பழைய நிலைமைக்குத் திரும்பப் போராடினார்கள். பலகட்ட சிகிச்சைக்குபின், மோரிஸ் குணமடைந்தார்.

குணமடைந்த மோரிஸ் தனது
அனுபவத்தை ‘மிராக்கிள் மேன்’ எனும் புத்தகமாக எழுதத் துவங்கினார். இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கை ஊட்டுவதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. பல லட்சம் பிரதிகள் விற்றன. அவரது பேச்சுகள் கோமாவில் இருக்கும் நபரையும் தட்டியெழுப்புகிற அளவுக்கு இருந்தது. அவர் பேசுவதைக் கேட்க, பலரும் பணம் கட்டிக் காத்திருந்தனர்.

உடைந்து போன எலும்புகளே அவரது தன்னம்பிக்கையில் உயிர்பெறும்போது, உடைந்துபோன உள்ளங்கள் மீண்டும் உயிர் பெறாதா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு