கடந்த மே மாதத்தில்தான் ‘ஹார்ட் ப்ளீட்’ என்கிற வைரஸ் அனைத்து வலைதளங்களிலும் பரவி எல்லோரையும் பதைபதைக்க வைத்தது. அதேபோல, இப்போது இன்னொரு வைரஸ் உருவாகி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஸ்வைப்பிங் மெஷினில் பரவி எல்லோரையும் அச்சம்கொள்ளச் செய்திருக்கிறது. புதிதாக உருவாகி இருக்கும் இந்த வைரஸின் பெயர் புருட்-பிஓஎஸ்.

இந்த லேட்டஸ்ட் வைரஸ் பற்றி இந்தியாவில் ஆன்லைன் தகவல் திருட்டை தடுக்கும் அமைப்புகளில் ஒன்றான சிஇஆர்டி-இன் ( CERT-In) செய்திருக்கும் எச்சரிக்கை இதோ:

‘‘இந்திய வங்கி அமைப்பில், குறிப்பாக ஸ்வைப்பிங் மெஷினில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண் மற்றும் பாஸ்வேர்டுகளைத் திருடும் ‘புருட்-பிஓஎஸ்’ (BrutPOS) என்கிற வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் டிரோஜன் மற்றும் போட்நெட் குடும்பத்தைச் சார்ந்தது என தெரியவந்துள்ளது. ஆன்லைன் பயன்பாட்டின்போதும் புருட்-பிஓஎஸ் வைரஸ் தகவலை திருடிக்கொள்ளும்படியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை களை மேற்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும், புருட்-பிஓஎஸ் என்கிற இந்த வைரஸ், இந்தியாவில் பாயின்ட் ஆஃப் சேல்ஸ் (point of sales) எனப்படும் ஸ்வைப்பிங் மெஷினில் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, விண்டோஸ் தளத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்வைப்பிங் மெஷினாக இருந்தால், அதிவேகமாகவும், மிகச் சுலபமாகவும் தாக்குகிறது.

இந்த புருட்-பிஓஎஸ் வைரஸ் மூலம் இன்னொரு பிரச்னையும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வரும். அதாவது, இந்த வைரஸ் தாக்குவதன் மூலம் மற்ற வைரஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக மிக எளிதாக ஸ்வைப்பிங் மெஷினைத் தாக்குகின்றன. இதனால் மொத்த நெட்வொர்க்கும் பாதிப்புக்குள்ளாகிறது. அதுமட்டுமல்லாமல், மற்ற வைரஸ்கள் புருட்-பிஓஎஸ் வைரஸைத் தரவிறக்கம் செய்ய உதவுகின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் உள்ள கார்டு எண், பயனாளர் பெயர், காலாவதி தேதி, சிவிவி எண் போன்ற விவரங்களை இந்த வைரஸ் திருடிவிடுகிறது என்பதால், இதனிடம் நமது கார்டு பற்றிய தகவல்கள் சிக்கிவிட்டால் போதும், நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்துக்கு உத்தரவாதம் சொல்ல முடியாத நிலை உருவாகிவிடும்.

இந்த புருட்-பிஓஎஸ் வைரஸினால், கடைகளில் பரிவர்த்தனை செய்யும்போது எச்சரிக்கையாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இணையதளம் மூலம் பரிவர்த்தனை செய்யும்போதும் வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்த வேண்டும்; பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டும்; பரிவர்த்தனைக்கு முன்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என சிஇஆர்டி-இன் தெரிவித்துள்ளது.
இதுமாதிரி வைரஸ்கள் உண்டாக்கும் பிரச்னைகளைத் தவிர்க்கத்தான் கடைகளில் பொருட்களை கார்டுகளைக் கொண்டு வாங்கும்போது ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதையும், அந்த ரகசிய எண்ணை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் உஷாராக இருந்தால்தான் பணத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்!