உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்தது, உலக அளவில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஆட்சேபிக்கும் விஷயங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவது தொடர்பானது. இரண்டாவது, அரசாங்கமே விவசாயி களிடம் நேரடியாக உணவு தானியங் களைக் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா கறாராக இருப்பதன் மூலம் நமது விவசாயிகளின் பிரச்னையைத் தீர்த்துவிட முடியுமா?

உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய குறைந்தபட்ச ஆதார விலை தந்தால்தான், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதனால் அவர்கள் தொடர்ந்து உற்சாகமாக விவசாயம் செய்வார்கள். இதன் காரணமாக, உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வராது என நம் அரசாங்கம் நினைப்பதாலேயே இந்த இரண்டு விஷயங்களில் இவ்வளவு உறுதியாக இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நிலைமை வேறுமாதிரி இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைத் தந்து வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதார விலையானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10% உயர்ந்தி ருக்கிறது. ஆதார விலை தொடர்ந்து உயர்ந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து கொண்டுதான் வருகிறது. அதாவது, பயிரிடும் பரப்பளவு 130 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 120 மில்லியன் ஹெக்டேராக குறைந்திருக்கிறது.

கடந்த காலங்களில் விவசாய உற்பத்தித்திறன் அதிகரித்திருந்தாலாவது, விளைச்சல் குறைந்திருக்காது. கடந்த சில பத்தாண்டுகளாக ஒரு ஹெக்டேருக்கு வெறும் 2% அளவுக்கு மட்டுமே விவசாய உற்பத்தித்திறன் அதிகரித்திருக்கிறது. இதனால்தான் விவசாய உற்பத்தி வளர்ச்சி 4 சதவிகிதமாக இருக்க வேண்டும் என் நாம் நினைத்தாலும் 2 சதவிகித வளர்ச்சியே நம்மால் எட்ட முடிகிறது.

அரசாங்கம் அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையானது பெருவாரியான விவசாயிகளுக்குப் போய்ச்சேருவதே இல்லை என்கிற உண்மையை கமிஷன் ஃபார் அக்ரிகல்சுரல் காஸ்ட் அண்ட் பிரைசஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் அசோக் குலாட்டியே சொல்லி யிருக்கிறார். மொத்த விவசாய உற்பத்தியில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான விளைபொருட்கள் அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதார விலை தந்து வாங்கப்படுகிறது. (1990க்கு முன்பு இது 20 சதவிகிதத்துக்கு கீழேதான் இருந்தது!) மீதமுள்ள விளைபொருட் களில் குறிப்பிடத்தகுந்த அளவு தனியார்களே வாங்குகின்றனர்.

குறைந்தபட்ச ஆதார விலை பெருவாரியான விவசாயிகளுக்குக் கிடைக்காமல்போகக் காரணம், உற்பத்தியான உணவு தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை. எனவே, ஆதார விலையைவிட கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும் உள்ளூரிலேயே விற்றுவிடுகிறார்கள் விவசாயிகள். பல கஷ்டங்களைத் தாண்டி விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவந்து விற்றாலும் அரசாங்கத்தாலும் அதிக அளவில் வாங்கிவைத்து பாதுகாக்க முடியாது. அதிகபட்சம் 25% அளவுக்கு மட்டுமே வாங்கிப் பாதுகாக்க முடியும்.

ஆக, குறைந்தபட்ச ஆதார விலையை இன்னும் தீவிரமாகவும், சரியாகவும் செயல்படுத்துவதினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க முடியும் என்றாலும், அதை மட்டுமே வைத்து விவசாய உற்பத்தியைப் பெருக்கி ஏழை விவசாயிகளைக் காத்திட முடியாது. விவசாயத்துக்கான செலவுகளை கணிசமாகக் குறைப்பதன் மூலமே விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானத்தை உயர்த்த முடியும். இதற்கு விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு விஷயங்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த துறையாக இருந்தாலும், சாராத துறையாக இருந்தா லும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களால் நம் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்ப தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் குறைந்தபட்ச ஆதார விலை என்கிற ஒன்றை மட்டுமே திரும்பத் திரும்ப பேசி என்ன பிரயோஜனம்?

எல்லாவற்றுக்கும் மேலாக, உலக மயமாக்கலுக்குப்பின் நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று தனித்து எந்த நாடும் இருக்க முடியாது. விவசாயம் தொடர்பான பிரச்னையில் நாம் கறாராக இருந்தால், நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகும் சில பொருட்களுக்கு வளர்ந்த நாடுகள் தடைகளை விதிக்கலாம்.

உதாரணமாக, தற்போது 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாம், அடுத்த பத்து ஆண்டுகளில் இதை 300 பில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் என்று திட்ட மிட்டிருக்கிறோம். நமது இந்த இலக்கை எட்ட முடியாதபடிக்கு வளர்ந்த நாடுகள் சில தடைகளை விதித்தால், நம்மால் என்ன செய்ய முடியும்?

எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், நாம் என்ன இழக்கப் போகிறோம், என்ன பெறப்போகிறோம் என்பதை கணக்கிட்டுதான் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.