Published:Updated:

உண்மையான முதலீடு எது ?

ரவிக்குமார், இயக்குநர், எம்எஸ்ஆர் கன்சல்டன்ட் தொகுப்பு: இரா.ரூபாவதி.

உண்மையான முதலீடு எது ?

ரவிக்குமார், இயக்குநர், எம்எஸ்ஆர் கன்சல்டன்ட் தொகுப்பு: இரா.ரூபாவதி.

Published:Updated:

பெரும்பாலான மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பல்வேறு வழிகளில் முதலீடு செய்கிறார்கள். இதில்  எந்தவகையான முதலீடுகள் சரியானவை அல்லது  சிறந்தவை என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. எந்த  முதலீடுகள் சரியானவை  என்று பார்ப்போம்.

 வங்கி முதலீடு!

முதலில் வங்கி முதலீடு குறித்துப் பார்ப் போம். பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த முதலீடு வங்கி டெபாசிட்தான். இதில் பலவகையான டெபாசிட் உள்ளது. அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்டி, டேர்ம் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்கு மூலமாகக் கிடைக்கும் வட்டி. வங்கி சார்ந்த முதலீடு கள் குறுகிய காலத் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும். நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைக்காது. மேலும், நீண்ட காலம் வைத்திருந்தால் முதலீடு செய்த அசல் தொகையின் மதிப்பு குறைந்துபோகவும் வாய்ப்புண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மையான முதலீடு எது ?

 ரியல் எஸ்டேட்!

இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் சேமிப்பை ரியல் எஸ்டேட்டில்தான் முதலீடு செய்கிறார்கள். ஏனெனில், கடந்த பத்து வருடமாக துரிதமான நகரமயமாக்கல் காரணமாக மனைகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அமைப்புசாரா துறையாகும். இந்தத் துறையில் கறுப்புப் பணம் அதிகமாகப் புழங்குவதாலும் விலை ஏறி இறங்கும்.

ஒவ்வொருவரும் தனது தேவைக்கு அதிகமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு அதை விற்க நினைக்கும்போது அதை எளிதில் விற்க முடிவதில்லை. உலகளவில் ரியல் எஸ்டேட் விலை குறைந்து வருகிறது. இந்தியாவிலும் எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல் ரியல் எஸ்டேட் விலை

உண்மையான முதலீடு எது ?

ஏறிக்கொண்டே செல்லும் என்று சொல்ல முடியாது.  

மேலும், ரியல் எஸ்டேட் சொத்துக் களின் ஆவணத்தை அவ்வளவு எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல, ஆவணங்களில் உள்ள டெக்னிக்கல் வார்த்தைகள் பல்வேறுவிதமான அர்த்தங்களைக் கொடுத்து குழப்பத்தை உண்டு பண்ணும். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அல்லது நன்கு தெரிந்தவர்களின் உதவி யுடன் அந்தச் சொத்தை வாங்கலாமா என்கிற முடிவை எடுக்க வேண்டும். இப்படி வாங்கியவர்களுக்கும் எப்போதும் அந்த சொத்தைப் பற்றிய பயம் இருந்துகொண்டேதான் இருக்கும்.  ஒரே இடத்தைப் பலருக்கு விற்பனை செய்வது, முறைப்படி அனுமதி பெறாமல் இடத்தை விற்பது போன்ற பிரச்னைகள் பல உள்ளன.

மேலும்,  தற்போது ரியல் எஸ்டேட்டை கண்காணிக்க தனியாக ஒழுங்குமுறை ஆணையம் எதுவும் கிடையாது. இந்தத் துறையில் அரசின் கடுமையான கொள்கைகள் எதுவும் இல்லை என்பது கவலையளிக்கும் நிஜம். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாக வானளாவிய வாக்குறுதிகள் கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்ட மானது இதற்கு சிறந்த உதாரணம்.

ரியல் எஸ்டேட் முதலீடு முழுவதையும் தவிர்க்கச் சொல்லவில்லை. ஆனால், இதில் முதலீடு செய்யும்முன், பில்டர், புரோமோட்டர்ஸ் சிறந்தவரா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்காது.

ஒரு குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகளே போதுமானதாக இருக்கும். ஆனால், சிலர் வெறித்தனமாக காலியிடங்களை வாங்கிக் குவிப்பார்கள். (இதில் பெரும்பாலானவர்களுக்கு வாங்கும் இடத்தின் தன்மையும்,  புரோமோட்டர் பற்றிய விவரங்களும்  தெரியாது!)

எனவே, ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் முதலீடு செய்வது நல்லது.

 பொன்ஸி திட்டங்கள்!

ஈமு கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு என பல புதுப்புது அவதாரங்களை எடுத்துக்கொண்டே இருப்பவைதான் பொன்ஸி திட்டங்கள்.  இந்த வகை முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நடுத்தர மற்றும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தை இதில் கட்டாயம் போடக்கூடாது. 

 உண்மையான முதலீடு எது?

அப்படியானால், எதுதான் உண்மையான, சரியான முதலீடு என்று கேட்கிறீர்களா? இப்போது உள்ள நிலையில்,  பணவீக்க விகிதத்தைவிட குறைந்தபட்சம் 2% அதிக வருமானம் தருகிற முதலீடுதான்  நியாயமான, அர்த்தம் உள்ள முதலீடாக இருக்கும்.

வங்கி சார்ந்த முதலீடுகள் தவிர்த்து பிற முதலீடுகள் (பங்குச் சந்தை சார்ந்த) நல்ல வருமானத்தைத் தரக்கூடிய வையாகும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடு எப்போதுமே நல்ல வருமானத்தைக் கொடுக்கும். உதாரணமாக, 34 வருடங்களுக்கு முன் ஒருவர் விப்ரோ நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் ரூ.535 கோடியாக இருக்கும். இதுபோன்ற பல ஆயிரம் மடங்கு லாபம் அள்ளித் தந்த பங்குகள் பல உள்ளன.

உண்மையான முதலீடு எது ?

உங்கள் முதலீட்டில் பங்கு சார்ந்த முதலீடுகள் மட்டும்தான் நல்ல வருமானம் தரக்கூடியது. ஆனால், இதில் பங்குகளைத் தேர்வு செய்யும்போது சரியான வழிக்காட்டுதல் வேண்டும். மேலும், முடிவு எடுப்பதில் உணர்ச்சி களைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

உண்மையான முதலீடு எது ?

நடுத்தர வருமானம் உடைய மக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் யூலிப் இன்ஷூரன்ஸ் பிளான் சார்ந்த திட்டங்கள் நீண்ட காலத்தில் ஓரளவுக்கு  நல்ல வருமானம் கொடுக்கும். மேலும், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எஸ்ஐபி முறையும், முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு எஸ்டபிள்யூபி முறைகள் சிறந்ததாக இருக்கும். இந்த முதலீடுகள் அனைத்திலும் கண்காணிப்பு என்பது அதிகமாக இருக்கும். அதேபோல இந்த முதலீடுகளை நிர்வகிப்பதற்கு சிறந்த நிபுணர்கள் குழுவும் இருக்கும். எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் நிகழும் சமயங்களில் நிச்சயம் கைதரும். குறுகிய கால நோக்கில்  இந்த முதலீட்டை அணுகவே கூடாது.

ஒரு வருடத்துக்கு மேற்பட்ட பங்கு  சார்ந்த முதலீடுகளைத் திரும்ப எடுக்கும் போது வரிச் சலுகையும் கிடைக்கும். மேலும், இந்தவகையான முதலீடுகளில் பாதுகாப்பு இருக்கும். அதேநேரத்தில், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தையும் தரும். ரியல் எஸ்டேட் போல, உங்களிடம் இருக்கும் பங்கு முதலீட்டை யாரும் மிரட்டி, பறிக்க முடியாது. உங்களின் நிதி சார்ந்த தேவைகளை எளிதாக அடைய எஸ்ஐபி முதலீடு அல்லது ஒரேமுறை முதலீடு என எதையாவது ஒன்றை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

 கடந்தகால ஒப்பீடு!

உண்மையான முதலீடு எது ?

1995-ம் ஆண்டு முதல் மாதம் 2,500 ரூபாய் வீதம் ரிலையன்ஸ் குரோத் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் நீங்கள் முதலீடு செய்திருந்தீர்களானால், இன்று வரை நீங்கள் மொத்தமாக 5.65 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். ஆனால், இப்போது அதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாயாக இருக்கும்.

ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் ஆரம்பிக்கும்போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இப்போது அதன் மதிப்பு 65.76 லட்சம் ரூபாயாக இருக்கும். 1 லட்சம் ரூபாய் முதலீடு கடந்த 19 ஆண்டுகளில்65 மடங்கு உயர்ந்துள்ளது.

2003-ம் வருடம் 5 லட்சம் ரூபாயை சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டில் (என்ஏவி 22.90) முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு கடந்த ஜூலை 3-ம் தேதி (என்ஏவி 430.14) சுமார் 1.28 கோடி ரூபாயாக இருக்கும். இப்படி கிடைக்கும்  வருமானத்துக்கு வரிச் சலுகையும் உண்டு.

ஆக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடே சிறந்த, சரியான முதலீடு  என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமே!'' 
குறிப்பு: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு சந்தையில் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்முன் உரிய ஆவணங்களை கவனமாக படித்துப் பார்ப்பது அவசியம்.)