Published:Updated:

வெல்டன் ரகுராம் ராஜன்!

ச.ஸ்ரீராம்

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்று ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் ரகுராம் ராஜன். இந்த ஓராண்டு காலத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரது பாராட்டையும் பெறவே செய்திருக்கிறது.

சர்வதேச நிதி ஆணையத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ராஜன், 2012-ல் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவியேற்றார்.

அப்போது பணவீக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால், ராஜனின் தொடர்ச்சி யான பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால், மொத்த விலை குறியீட்டு எண் 7 சதவிகிதத்திலிருந்து 5.2 சதவிகிதமாகக் குறைந்தது. அதேபோல, நுகர்வோர் விலை குறியீட்டு எண் 9.84 சதவிகிதத்திலிருந்து 7.96 சதவிகிதமாகக் குறைந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெல்டன் ரகுராம் ராஜன்!

ராஜனின் புத்திசாலித்தனமான அணுகுமுறையினால், 275 பில்லியன் டாலராக இருந்த நம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, இப்போது 318 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.  ராஜன் பதவியேற்றபோது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாயாக இருந்தது. தற்போது 60 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாவது மிகப் பெரிய சாதனையே.

நாட்டின் ஜிடிபி 2013-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 4.6 சத விகிதமாக இருந்தது. தற்போது புதிய அரசின் தாக்கம் மற்றும் ஆர்பிஐயின் நடவடிக்கைகளால் 5.7 சதவிகிதமாக உயர்கிற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம், சிஆர்ஆர், எஸ்எல்ஆர் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு பலமுறை ஜாடைமாடை யாக கோரிக்கை வைத்தும், எந்த விதத்திலும் வளைந்து தராமல் நாட்டின் வளர்ச்சிக்காக தனக்கு சரியென்று பட்டதையே செய்தார் ராஜன்.

மோடி பிரதமரானவுடன் இவரது பதவி பறிக்கப்படும் என்று சிலர் சொன்னார்கள். புதிய ஆட்சி அமைந்த வுடன் அந்தப் பேச்சு தவிடுபொடி யானதில் இருந்தே இவரது தேவை புரிந்தது.

மொத்தத்தில், ‘வெல்டன்’ சொல்ல வைத்த ராஜனுக்கு நம் வாழ்த்துகள்!