Published:Updated:

‘ஜீனியஸ்’நியூட்டன்!

ச.ஸ்ரீராம்

தடைக்கல்லும் படிக்கல்லே!

பார்க்கில் மரத்தின் அடியில் உட்காருபவரின் தலையில் ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் அது என்ன என்று பார்த்துவிட்டோ அல்லது தலையில் அடிபட்டிருக்கிறதா என்று தடவிப்பார்த்துவிட்டோ சென்றுவிடுவார்கள். ஆனால், உலகத்திலேயே ஒரே ஒருவர்தான் இது ஏன் விழுந்தது என்று யோசித்தார். அப்படி யோசித்ததன் காரணமாகத்தான் உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான புவிஈர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார் ஐசக் நியூட்டன். இன்றைக்கு நாம் எளிதாக புரிந்துகொள்ளும் உண்மையைக் கண்டுபிடிக்க நியூட்டன் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

நியூட்டன் 1643-ல் இங்கிலாந்தில் உள்ள வோல்ஸ்தோர்ப் எனும் இடத்தில் பிறந்தார். நியூட்டனின் மூன்றாம் வயதில் அவரது தாயின் இரண்டாம் திருமணத்தால் அவரைவிட்டு பிரிந்து தனது பாட்டியின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘ஜீனியஸ்’நியூட்டன்!

வீட்டில் வளர்ந்தார். அவரது 12-வது வயதில் மீண்டும் நியூட்டன் தாயுடன் இணைந்தார். பள்ளிப்படிப்புக்காக கிராந்தாமில் உள்ள கிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்ட நியூட்டனுக்கு படிப்பு வரவில்லை என்று பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். நியூட்டனின் தாய் அவரை பண்ணைக்கு  வேலை செய்ய அனுப்பினார். அந்த வேலையும் பிடிக்காமல் வெளியேறிய நியூட்டன், தன் மாமாவின் உதவியுடன் படிப்பைத் தொடர்ந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரிப் படிப்பை தொடர்ந்த நியூட்டன், சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தார். 1687-ல் ஒருநாள் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அவரது தலையின் மீது ஒரு ஆப்பிள் விழுந்தது. இந்த ஆப்பிள் பூமியை நோக்கிவர என்ன காரணம் என்ற கேள்விதான், அவரை புவிஈர்ப்பு விசை என்ற விஷயத்தை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல அடிப்படையாக இருந்தது.
 
இவர் எழுதிய பிலசோபியா நேச்சுரலிஸ் ப்ரின்ஸிபியா மேத்தமெட்டிகா (Philosophiae Naturalis Principia Mathematica) என்னும் புத்தகம்தான் மெக்கானிக்கல் துறையின் வேதமாக உள்ளது. டிரினிட்டி கல்லூரியில் மிக முக்கிய பொறுப்பில் அவர் இருந்தபோது, அந்த நாட்டு அரசர் கைகாட்டியவருக்கு எல்லாம் என்னால் பட்டம் வழங்க முடியாது என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தார்.

மக்கு பையன் என்று திட்டுவாங்கிய மாணவன்தான் பிற்பாடு அடிப்படை அறிவியல் உண்மையை எடுத்துச் சொல்லும் ஜீனியஸ் ஆனான். உழைப்பும், வித்தியாசமான சிந்தனையும் வரலாற்றில் உங்களுக்கு நீங்காத இடத்தைத் தேடித் தரும் என்பதற்கு இந்த ஜீனியஸ் நல்லதொரு உதாரணம்.