சில தொழில் நிறுவனங்கள் வங்கி களிடமிருந்து கடன் வாங்குகிற போது காட்டுகிற அக்கறை, அந்தக் கடனை திரும்பக் கட்டுவதில் கிஞ்சித்தும் காட்டுவதில்லை. அதுமாதிரியான நிறுவனங்களில் தலையாய நிறுவனமாக இருக்கிறது விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர். பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கிய மல்லையா, அதைத் திரும்பச் செலுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக யுவராஜ் சிங்கை மிகப் பெரிய தொகை தந்து வாங்கினார்.

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியே பல கோடி ரூபாய் நிலுவையில் இருக்க, மல்லையாவின் இந்த செயலைப் பார்த்து கடன் தந்த வங்கிகள் பெரிதும் எரிச்சல் அடைந்தன. இதற்குபின் அவர் தரவேண்டிய கடன் பணத்தை திரும்பத் தருமாறு வங்கிகள் கெஞ்சிப் பார்த்தன.
மனிதர் எந்த வகையிலும் மசியவே இல்லை என்பதால், இப்போது அவரை ‘வில்ஃபுல் டிஃபால்டர்’ (Wilful Defaulter), அதாவது, கடன் ஏய்ப்பாளர் என்று அறிவித்திருக்கிறது யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா. அவரோடு, கிங்ஃபிஷர் நிர்வாகத்தின் மூன்று இயக்குநர்களையும் வில்ஃபுல் டிஃபால்டர்களாக அறிவித்திருக்கிறது. வில்ஃபுல் டிஃபால்டர்கள் என்பவர் யார், எதன் அடிப்படையில் ஒருவரை இப்படி சொல்கிறார்கள், வில்ஃபுல் டிஃபால்டர் என்கிற பெயரை பெற்றால் என்ன ஆகும் என்கிற கேள்விகளுடன் வங்கி வட்டாரத்தில் பேசினோம். அவர்கள் தந்த விவரங்கள் இங்கே உங்களுக்காக...

யார் வில்ஃபுல் டிஃபால்டர்?

* வங்கியில் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த பணம் இருந்தும், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்களைக் கடத்துபவர்கள் வில்ஃபுல் டிஃபால்டர்களாகக் கருதப்படுவார்கள்.

* வங்கியில் கடன் வாங்கும்போது, இந்தத் தேவைக்காகத்தான் கடன் வாங்குகிறோம் என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தினால், அவர்களும் வில்ஃபுல் டிஃபால்டர்களாகவே கருதப்படுவார்கள். உதாரணமாக, தொழில் தொடங்குவதாகச் சொல்லி வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதை வீடு கட்டப் பயன்படுத்துவது அல்லது ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடனை அடைக்கப் பயன்படுத்துவது.

* வங்கியில் கடன் பெற்று ஏதேனுமொரு சொத்து வாங்குபவர், அந்தக் கடன் நிலுவையில் இருக்கும் போதே அந்தச் சொத்தை வங்கிக்குத் தெரியாமல் விற்றுவிட்டால் அவரும் வில்ஃபுல் டிஃபால்டர்தான். உதாரணத்துக்கு, வீடோ அல்லது காரோ வாங்குகிறார் எனில், அதற்கான கடனை செலுத்திவரும்போது, அந்த வீட்டை அல்லது காரை விற்பது.

எவ்வளவு கடன் பெற்றிருந்தால்?

கட்ட வேண்டிய தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்கள் வில்ஃபுல் டிஃபால்டர்களாக வங்கியால் அறிவிக்கப்படுவார்கள். கடன் வாங்கிய வர்கள் தங்களின் கடனுக்கான இஎம்ஐ-யை 90 நாட்கள் கட்டாமல் விடும் பட்சத்தில் அது வாராக் கடனாக (Non-Performing Asset) மாறிவிடும். இவ்வாறு வாராக் கடனாவதற்கு முன்பே, கடனை சரியாக திரும்ப தராதவர்களிடம் வங்கியானது உஷாராகிவிடும். இதன்பிறகு கடன் பணத்தை திரும்பப் பெற தொடர்ந்து முயற்சிக்கும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், வங்கியானது ஒருவரை வில்ஃபுல் டிஃபால்டராக அறிவித்து, அவர் பற்றிய விவரங்களை ரிசர்வ் பேங்க் மற்றும் சிபில் அமைப்புக்கு அனுப்பி வைக்கும். ஆர்பிஐ-க்கு வில்ஃபுல் டிஃபால்டர்களின் விவரம் கிடைத்தவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் செபிக்கு அந்த விவரங்கள் அனுப்பப்படும்.

வங்கி, வங்கிசாரா அரசு நிதி நிறுவனங்கள், வளர்ச்சி நிதி நிறுவ னங்கள், முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் கடன் ஏய்ப்பாளர்களாக வில்ஃபுல் டிஃபால்டர் என்கிற முத்திரையை வாங்கியவர்கள், அந்த வங்கியிலோ அல்லது மற்ற வங்கியிலோ அல்லது வேறெந்த நிதி நிறுவனங்களிலோ மேலும் கடன் பெற முடியாது. தவிர, வில்ஃபுல் டிஃபால்டர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் புதிதாத வேறெந்த தொழிலையும், நிறுவனங்களையும் ஆரம்பிக்க முடியாது.

தனிநபர் பாதிப்பு!

ஒரு தனிநபர் வாங்கும் கடனுக்கு கேரன்டி கையெழுத்து போடும்போது, அவர் இல்லாத பட்சத்தில் கட்டாத கடன் தொகைக்கு கேரன்டி கையெழுத்து போட்டவரே உத்தரவாதம் தர வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தச் சூழ்நிலையில் வங்கியில் கடன் பெறுபவர்கள் கட்டாமல் இருந்த நிலுவைத் தொகை 25 லட்சத்துக்கு மேல் இருந்து, கடன் பெற்றவர் அதனை திரும்பக் கட்டாமல் போகும் பட்சத்தில் கேரன்டி கையெழுத்து போட்டவரும் வில்ஃபுல் டிஃபால்டராகவே அறிவிக்கப்படுவார். மேலே சொன்ன வில்ஃபுல் டிஃபால்டருக்கு உண்டான அனைத்து விதிமுறைகளும் கேரன்டி கையெழுத்து போட்டு வில்ஃபுல் டிஃபால்ட ரானவருக்கும் பொருந்தும்.

ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கப்படும் போது அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் அந்தக் கடனுக்கு உத்திரவாதம் தரவேண்டும். அந்த நிறுவனமானது கடனை கட்டும் வாய்ப்பு இருந்தும் கட்டாமல் விடும்போது அந்த நிறுவனம் மட்டுமல்லாமல் கேரன்டி கையெழுத்து போட்ட இயக்குநர்களும் வில்ஃபுல் டிஃபால்டராக அறிவிக்கப்படுவார்கள்” என்றார்கள்.

வங்கியில் அதிகம் கடன் வாங்கி அதை சரியாக திரும்ப கட்டாமல் இருப்பவர்கள் ஜாக்கிரதை!