தடைக்கல்லும் படிக்கல்லே!

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் ஒரு நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக முடியுமா? வித்தியாசமாக யோசித்தால் நிச்சயம் ஆகமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளத்தின் ஐபிஓவை அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜாக் மா, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை இதோ...

சீனாவின் ஸீஜியாங்க் பிராந்தியத்தில் உள்ள ஹங்க்சோவ் என்னும் ஊரில் அக்டோபர் 15, 1964-ல் பிறந்தார் ஜாக் மா. தனது 13-வது வயதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். இதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து 45 நிமிட சைக்கிள் பயணம் செய்து, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குச் செல்வார். ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் இருந்ததால், கல்லூரியிலும் ஆங்கிலப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த மா, அந்த வேலையில் நாட்டம் இல்லாமல் ராஜினாமா செய்தார்.

அமெரிக்கா சென்ற மா, கேஎஃப்சியில் வேலைக்குச் சேர விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1995-ல் அமெரிக்காவில் இருந்தபோது இன்டர்நெட் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதைப் பார்த்தார். இன்டர்நெட் மூலம் உலகம் முழுக்க உள்ள தகவல்கள் சில நொடிகளில் கிடைப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். பீர் என்கிற வார்த்தையை இணையதளத்தில் அவர் தேட, அமெரிக்க பீர், ஜெர்மன் பீர் பற்றிய தகவல் கிடைத்தது. ஆனால், சீன பீர் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சீனா பற்றியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. உடனே சீனா பற்றி ஓர் இணையதளத்தை உருவாக்கி வெளியிட, அடுத்த சில மணி நேரத்திலேயே ஐந்து இ-மெயில்கள் அவருக்கு வந்து சேர, ஆச்சர்யம் அடைந்தார்.

இணையதள சேவைதான் எதிர்கால வாழ்க்கை என்பதை உணர்ந்த ஜாக் மா, 1999-ல் அலிபாபா டாட் காம் என்கிற பெயரில் ஓர் இணையதளத்தை ஆரம்பித்தார். அது இன்று உலக அளவில் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்து, ஜாக் மாவை பெரும் பணக்காரராக மாற்றி இருக்கிறது. ‘சமூகத்தின் பிரச்னையை எப்படித் தீர்க்க முடியும் என்று யோசியுங்கள். உங்களுக்கான பிசினஸை நீங்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவீர்கள்’ என்று சொல்லும் ஜாக் மா, வித்தியாசமான பிசினஸ்மேன் தான்!