Published:Updated:

ஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு யார் போட்டி?

ஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு யார் போட்டி?

ஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு யார் போட்டி?

ஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு யார் போட்டி?

Published:Updated:

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஃப்ளிப்கார்ட். அடுத்த நாளே அமேசான் நிறுவனம் இந்தியாவில் இரண்டு பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாகச் சொல்லி, பரபரப்பை  அதிகப்படுத்தியது.

இந்தப் பரபரப்பை மேலும் கூட்டுகிற மாதிரி அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்தியாவுக்கு வந்தார். பெங்களூரில் சில நாட்கள் தங்கியிருந்து, இந்தியாவில் அமேசானின் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதில் மும்முரமாகச் செயல்பட்ட பெஜோஸ், புதுடெல்லியில் ஃபிக்கி நிறுவனம் ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் கலந்து கொண்டதுடன், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சரமாரி கேள்வி களுக்குச் சளைக்காமல் பதில் சொன்னார்.

ஜெட் வேக இ-காமர்ஸ்: யாருக்கு யார் போட்டி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இந்தியாவில் உங்களுக்கான போட்டி எப்படி இருக்கிறது?' என்று கேட்டார் ஒருவர். ‘‘எங்களுக்குப் போட்டி என்று யாரும் இல்லை. இந்தியாவில் இந்தத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனைப் பயன்படுத்தி, நாங்கள் வேகமாக வளர்ந்து வருகிறோம், அவ்வளவுதான். போட்டியாளர்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், பிசினஸ்  வளராது. வாடிக்கையாளர்களை கவனித்தால்தான் பிசினஸ் வளரும். நான் என் போட்டியாளர்களைவிட கஸ்டமர்களையே அதிகம் கவனிக்க விரும்புகிறேன்’’ என்று பெஜோஸ் சொன்னபோது, எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

‘ஃப்ளிப்கார்ட்டின் சச்சின் மற்றும் பென்னி பன்சால் ஆகிய இருவருமே உங்கள் நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் தானே?’ என்று கேட்டதற்கு, ‘எங்களது வருடாந்திரக் கூட்டத்தில்கூட போட்டியாளர்களைப் பற்றி பேசுவ தில்லை, இப்போதும் பேசப்போவ தில்லை’ என்று உறுதியாகச் சொன்னார். 

கூடிய விரைவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஆன்லைன் மூலம் சுடச்சுட வழங்கும் வேலையையும் அமேசான் செய்யப்போகிறதாம். இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியைப் பார்த்தால், நாளைக்கு மதியச் சாப்பாட்டுக்கான ஆர்டரை ஃப்ளிப்கார்ட்டில் தரலாமா, அல்லது அமேசானில் கொடுக்கலாமா என மக்கள் குழம்பிப்போய்விடுவார்கள் போலிருக்கிறது. ரீடெயில் கடைகள் இந்தப் போட்டியை எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism