Published:Updated:

ஜியோர்ஜியன் ஸ்டைல்; 9 கோல்ஃப் மைதானங்கள்!- கேர்ள் பெஸ்டிக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த அமேசான் ஓனர்

அமேசான் ஓனர் ஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்
அமேசான் ஓனர் ஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்

ஜெப் பஸாஸுக்கு சமீபகாலமாக மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டதால் இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

வர்த்தக உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான ஜெப் பஸாஸ் தன் மனைவி மெகென்ஸிக்கு விவாகரத்து கொடுத்தார். ஏதோ சாதாரண விவாகரத்து அல்ல அது. உலகின் காஸ்ட்லியான விவாகரத்து எனப் பெயர்பெறும் அளவுக்கு தன் நிறுவன பங்குகளை மனைவி மெகென்ஸிக்கு விட்டுக்கொடுத்தார் ஜெப். 25 வருடமாகக் கணவன் மனைவி வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருவரும் இருந்துவந்த நிலையில் ஜெப் பஸாஸுக்கு சமீபகாலமாக மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டதால் இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்
ஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்

அதன்படி தன் தோழி லாரன் சான்செஸ் உடன் சமீபகாலமாக பஸாஸ் வலம்வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. சமீபத்தில் இந்தியா வந்தபோதுகூட சான்செஸ் உடன் பஸாஸ் வந்தார். இந்தநிலையில் சான்செஸுக்காகக் கடந்த ஒருவருடமாக பஸாஸ் வீடு தேடிவந்த நிலையில், தற்போது அவருக்காக 1,178 கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Vikatan

அமெரிக்காவில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீட்டைத்தான் இவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து பஸாஸ் வாங்கியுள்ளார். பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் ஏற்கெனவே பஸாஸ் இரண்டு மாளிகைகளை வைத்துள்ளார். அதன் மதிப்பும் மில்லியன் கணக்கில் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது வாங்கியுள்ள இந்த வீட்டை தனது தோழிக்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான வார்னர் சகோதரர்களுக்காக 1930-ம் ஆண்டில் கட்டப்பட்டதுதான் இந்த வீடு.

ஜியோர்ஜியன் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைத்தான் தற்போது பஸாஸ் தன் பெண் தோழிக்காக வாங்கியுள்ளார். மொட்டை மாடியில் நிறைந்துகிடக்கும் தோட்டம் எனக் குட்டி வனம்போல இந்த வீடு மொத்தம் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு விருந்தினர் மாளிகைகள், ஒன்பது ஹோல் கோல்ஃப் மைதானங்கள், ஒரு டென்னிஸ் மைதானம், 3 கண்ணாடி மாளிகைத் தோட்டங்கள், மிகப்பெரிய நீச்சல் குளம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள், 6 வாகன கேரேஜ்கள், 7 மாளிகைகளுக்கு நிகரான 7 படுக்கையறைகள் என்று பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த வீட்டில் விரைவில் இருவரும் குடியேறுவார்கள்.

வாட்ஸ்அப் வீடியோவில் விழுந்த ஜெப் பஸாஸ்... வலைவிரித்த சவுதி இளவரசர்!
பின் செல்ல