Published:Updated:

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்... இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிசினஸ்

பிசினஸ்

விளம்பரங்கள்... இன்றைய மில்லேனியல்கள் துளியும் விரும்புவ தில்லை. அதனால் இன்றைக்குப் பலரும் விளம்பரங்களை ‘ஸ்கிப்’ செய்துவிடுகின்றனர். இதனால் காலங்காலமாகப் பயன்படுத்தும் விளம்பர உத்திகள் இந்தக் காலத்து இளைஞர்களிடம் எடுபடாது.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

அவர்களிடம் நமது பிராண்டை எடுத்துச்செல்லக் கூடுதல் சாமர்த்தியம் அவசியம்” - கன்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி (CII) கடந்த வாரத்தில் சென்னையில் நடத்திய பிராண்ட் சம்மிட் கருத்தரங்கில் பி அண்டு ஜி (P&G) இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் சரத் வர்மா சொன்னபோது அரங்கமே ஆமோதித்தது. சரத் வர்மா பேசியபோது...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமூக அக்கறை என்கிற மார்க்கெட்டிங் ஏவுகணை

“பத்தில் ஒன்பது இளைஞர், சமூகம் சார்ந்த விஷயங்களில் அக்கறைகாட்டும் பிராண்ட் களையே விரும்புகின்றனர். 2015-ல் இந்தியாவின் 79% ஆண்களிடம் வீட்டு வேலைகள் பெண்களுக் கானது என்னும் மனநிலையே இருந்தது. அப்போது ஏரியல் #SharetheLoad என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு உருக்கமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அயராது அலுவலகத்தில் உழைத்துவிட்டு வீட்டிற்குவந்து, வீட்டுவேலை களைப் பார்க்கும் மகளைப் பார்த்து உருகும் தந்தை மகளிடம் மன்னிப்புக் கேட்பதுடன், இது தன்னுடைய தவறுதான்; அடுத்த தலைமுறைக்கு, தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவில்லை என வீட்டிற்குச் சென்று, துவைக்கும் வேலையைத் தன் மனைவியுடன் பகிர்ந்துகொள்கிறார்.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

இந்த விளம்பரத்தைக் கோடிக்கணக்கானவர்கள் பார்த்தார்கள். நாங்கள் இந்த விளம்பரத்துடன் நின்றுவிடவில்லை. ஒரு முன்னணி காலண்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து His, Her என ஆண்களுக்கும் பெண்களுக்கும் என நாள்களைப் பிரித்து அச்சிட்டோம். இதைக் கொண்டு குறிப்பிட்ட நாள்களில் கணவன், மனைவி என மாற்றிமாற்றித் துணி துவைக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#SharetheLoad பாலியல் சமநிலைக்கான குரலாக மாறியது. இன்று வீட்டுவேலைகள் பெண்களுக்கானது என்னும் மனநிலைகொண்ட ஆண்களின் சதவிகிதம் 52-ஆகக் குறைந்துள்ளது. இப்படியொரு நல்ல சமூக மாற்றம் கொண்டு வந்ததன் விளைவாக, ஏரியல் பிராண்டாகவும் மக்கள் மனதில் பதிந்தது. விற்பனையும் பெருமளவில் உயர்ந்தது” என்ற அவர், இதேபோன்று விஸ்பர் மற்றும் ஜில்லெட் மூலம் செய்த மற்ற சமூகம் சார்ந்த பிரசாரங்களைப் பற்றியும் அவற்றின் மூலம் பிசினஸ் எப்படி வளர்ந்தது என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

ஜென் Z முக்கியம் பாஸ்

ஜென் Z-தான் (1995-க்குப்பின் பிறந்தவர்கள்) இன்றைய ஒரிஜினல் இளைஞர்கள். இவர்களைக் கவர்வதற்கு செய்யவேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசினார் ‘சோஷியல்’ என்னும் கஃபே பார் குழுமத்தின் பிசினஸ் பிரிவு தலைவர் மயங் பட்.

“தொழில்நுட்ப மாற்றம் என்பது மற்றவர்களுக்குத்தான் மாபெரும் அதிசயம். ஆனால், ஜென் Z இளைஞர்களுக்கு அது அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். அறிவார்ந்த நபர்களாக இருப்பதால், இவர்களிடம் நமது பிராண்டைக் கொண்டுசெல்வது சிக்கலானதுதான். இவர்கள் சராசரியாக ஒரு விஷயத்தில் எட்டு விநாடிகளுக்குமேல் கவனம்செலுத்தமாட்டார்கள். அதற்காக இவர்களுக்குக் கவனச்சிதறல் அதிகம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. குறைந்த நேரத்தில் அதிகத் தகவல்களைக் கிரகித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இதனால் இவர்களின் கவனத்தை முதல் சில நொடி களிலேயே பெறவேண்டியது அவசியம். அதனால் இவர்களுக்குச் சிறிய வீடியோ வடிவிலான விளம்பரங்கள்தான் பெஸ்ட் சாய்ஸ். பெரும் நட்சத்திரங்களைவிட ஒரே கருத்துகள் கொண்ட சோஷியல் மீடியா பிரபலங்களால்தான் இவர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். Influencer Marketing-தான் இவர்களைச் சென்று சேரச் சிறந்த வழி.

பெரும்பாலான ஜென் Z இளைஞர்கள் பிராண்ட் பர்சனாலிட்டியை வைத்துத்தான் அதற்கு வாடிக்கையாளர் ஆகலாமா, வேண்டாமா என முடிவு செய்கின்றனர். அதனால் இதைச் சரியாகக் கட்டமைத்துக்கொள்வது அவசியம். மேலும், இவர்கள் ஏதேனும் ஒரு குழுவுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். அது கிரிக்கெட் டீமாக இருக்கலாம்; வெப்சீரிஸாக இருக்கலாம். இவற்றை உங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளுக்குள் கொண்டுவரும்போது உங்கள் பிராண்ட் அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும்” என்றார்.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

மாற்றம் ஒன்றே மாறாதது

நூற்றாண்டுக்காலமாகக் குளியலறைச் சாதனங்களுக்கான சந்தையில் மொத்த உலகிலும் முதல் இடத்திலிருப்பது ரோகாதான். ஸ்பெயின் நிறுவனமான ரோகா உலகெங்கும் துடிப்புடன் செயல் படுவதால், பல நிர்வாக இயக்குநர்களைக் கொண்டிருக்கிறது. இதில் ஸ்பெயின் நாட்டைச் சாராத ஒரே நபர், நம்மூர் ரங்கநாதன்தான். “நமது தயாரிப்புகளைக் கூட மற்றவர்கள் திருடிவிட முடியும். ஆனால், நாம் தரும் அனுபவத்தை யாராலும் திருட முடியாது. அதனால் ரீடெயில் கடைகளில் சிறந்த அனுபவத்தைத் தருவது மிகவும் அவசியம். அதுதான் வாடிக்கையாளருக்குப் பிராண்டுடன் சிறந்த இணக்கத்தைத் தரும். ‘நாங்க பல வருடங்களாக இருக்கும் பாரம்பர்ய பிராண்ட்’ என்று எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தால் ஒன்றுமில்லாமல் போய்விடும். புதிய முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்களுடன் இன்றைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாற வேண்டும். ப்ளூடூத் ஷாவர் போன்ற புதிய விஷயங்களைக் கொண்டுவந்துகொண்டே இருப்பதால்தான், பாத்ரூம் பிசினஸில் நாங்கள் முதலிடத்தில் நீடிக்க முடிகிறது” என்றார் அவர்.

மோடியைப் படியுங்கள்

“மோடியின் தேர்தல் வாக்குறுதிகளைப் படித்தால், மக்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவது எப்படி என்பது தெளிவாகப் புரியும்’’ என அதிரடியாகத் தொடங்கினார் சாம் பல்சாரா. இவர் மேடிசன் என்னும் முன்னணி மீடியா ஏஜென்சியின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர். ‘‘மக்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவதால், உங்கள் பிராண்டுக்கான மரியாதை கூடுகிறது. உதாரணமாக, எதிரிகளை பிசினஸ் பார்ட்னராக்கி வெற்றிகண்ட கேட்பரி நிறுவனத்தைப் பார்ப்போம். ரசகுல்லா முதலிய பல இனிப்பு வகைகளுக்குப் பெயர்பெற்ற மாநிலம் மேற்கு வங்காளம். இங்கு கேட்பரி போன்ற ஒரு சாக்லேட் நிறுவனத்திற்கு வாய்ப்புகள் அதிகம்தான். ஆனால், போட்டியும் அதிகம். தெருவுக்குத் தெரு இனிப்புக் கடைகள் இருக்கும் மாநிலம் அது. அப்போதுதான் ‘கேட்பரி மிஸ்தி’ என்ற புதிய வியூகத்தைக் கையில் எடுத்தது கேட்பரி. தங்களது சாக்லேட்டைக் கொண்டு சிறந்த புதிய இனிப்பை எந்த இனிப்புக் கடையால் செய்யமுடியும் என்று போட்டி வைத்தது. பிறகு, இதே போட்டியை வீடுகளுக்கும் கொண்டுசென்றது. இன்று கேட்பரியைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இந்தப் பலனை விற்பனையிலும் அறுவடை செய்தது அந்த நிறுவனம்’’ என்றார்.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

பிசினஸ் உலகின் முக்கிய ஜாம்பவான்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்கள். ‘இன்றைய தலைமுறைக்கேற்ப மாற்றி யோசித்தால் மட்டுமே ஒரு பிராண்ட் நிலைத்து நிற்கமுடியும்’ என்பதை அனைவருமே சொன்னது இந்தக் கருத்தரங்கின் ஹைலைட்!

75,000 பிரிவில் நிகழ்ச்சி தயாரிக்கும் நெட்ஃப்ளிக்ஸ்!

இந்தக் கருத்தரங்கில் இரண்டு அமர்வுகளுக்குத் தலைமை தாங்கினார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். பொழுதுபோக்குத்துறை யின் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், “சுமார் 75,000 பிரிவுகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள் தயாரிக்கிறது. மேலும், இந்தியாவில் தயாராகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அமெரிக்காவைவிடவும் அதிகம். இங்கு நடுத்தரப் பெண்களைக் குறிவைத்து தயாராகும் நிகழ்ச்சிகளே அதிகம் என்றாலும், இன்று ஸ்ட்ரீமிங்கும் முக்கியத்தளமாக மாறுகிறது” என்றார்.

சி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்...
இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்!

இதன்பின், ஸ்ட்ரீமிங் துறை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று பேசிய ஹங்கமா நிறுவனத்தை நிறுவிய நீரஜ் ராய், “இரண்டாம், மூன்றாம் கட்ட இந்தியர்களும் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஜியோவின் வருகைக்குமுன் சராசரியாக மாதம் 1 ஜி.பி-க்கும் குறைவாக டேட்டா பயன்படுத்திய நாம், இன்று 11 ஜி.பி பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் தரும் இந்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் ஒரு பிராண்ட்டின் சாமர்த்தியம் இருக்கிறது” என்றார்.

இதில் பர்சனாலிட்டியும் ஒரு பிராண்ட்தான் என்று பேசினார் நடிகை காஜல் அகர்வால். “போலி வேஷங்கள் எதுவுமின்றி உண்மையாக இருங்கள். நான் ஒரு நிறுவனத்திற்கு விளம்பரத்தூதுவர் ஆவதற்குமுன் அதில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா என்று பார்ப்பேன்’’ என்றார் அவர்.