Published:Updated:

`தசரா, தீபாவளி சிறப்பு விற்பனை!’ - கார் நிறுவனங்கள் நிம்மதிப்பெருமூச்சு

கார்களின் விலைக்கேற்ப 10,000 ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்தன. நவராத்திரி, தசராவையொட்டி 10 நாள்களில், கடந்த ஆண்டைவிட 5-7% விற்பனை அதிகரித்துள்ளது.

கார் விற்பனை
கார் விற்பனை ( vikatan )

பொருளாதார மந்த நிலையால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து, நுகர்வு மனப்பான்மையே குறைந்து காணப்பட்டது. இந்த ஆண்டில், பெரிய விற்பனைச் சரிவைச் சந்தித்து, கார் உற்பத்தியையே நிறுத்திவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெரிய கார் நிறுவனங்களும் சரி, கார் டீலர்களும் சரி, நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையைத்தான் பெரிதும் நம்பியிருந்தார்கள். அவர்களது நம்பிக்கை வீணாகவில்லை.

கார் விற்பனை
கார் விற்பனை
vikatan

முன்னணி கார் நிறுவனங்கள், அதிரடி விலைக்குறைப்பு அறிவிப்புகளோடு சிறப்பு விற்பனையில் ஈடுபட்டன. கார்களின் விலைக்கேற்ப 10,000 ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை தள்ளுபடி விலையில் விற்பனைசெய்தன. நவராத்திரி, தசராவையொட்டி 10 நாள்களில், கடந்த ஆண்டைவிட 5-7% விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி நிறுவன வாகனங்களின் விற்பனை, நவராத்திரி, தசரா காலகட்டத்தில் 7% அதிகரித்திருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 10% அதிகரித்துள்ளது. தீபாவளி விற்பனையைப் பொறுத்தவரை, ஒரே நாளில் மாருதி நிறுவனத்தின் கார்கள் 10%, ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் 16% மற்றும் மஹேந்திரா நிறுவனத்தின் கார்கள் 100% விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது.

கார் விற்பனை
கார் விற்பனை
vikatan

நவராத்திரி 10 நாள் விற்பனையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் 60,000 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்துக்கு 25,000 கார்கள் விற்பனையாகியுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையில், மாருதி சுசுகி நிறுவனத்துக்கு 45,000 கார்களும், ஹூண்டாய் நிறுவனத்துக்கு 14,000 கார்களும் விற்பனையாகியுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையில், மெர்சிடஸ் நிறுவனத்தின் 600 எஸ்.யூ.வி வகை கார்கள் விற்பனையாகியுள்ளன. எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் 700 வாகனங்களும் கியா நிறுவனத்தின் 2,100 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. பல மாதங்களாக விற்பனைச் சரிவைச் சந்தித்துவந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த விற்பனை உயர்வின்மூலம் சற்று நிம்மதியடைந்துள்ளன.