Published:Updated:

"சிர்கோனியா ஜுவல்லரி" - ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மகுடத்தில் மேலும் ஒரு பொன்!

கோவாவில் நடைபெற்ற தேசிய நகை விருதுகள் 2020-21ல், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் லேட்டஸ்ட் காதணி (ear cuff) நகை, “ஆண்டின் சிறந்த சிர்கோனியா ஜுவல்லரி” என்ற பிரிவில் விருதை வென்றுள்ளது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் எப்போதும் “வாடிக்கையாளர்களே முதன்மை” எனும் அணுகுமுறை கொண்டது. பல ஆண்டுகளாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசிக் கற்கள் போன்றவற்றில் நவீன மற்றும் பாரம்பரிய ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்து வழங்கி வருகின்றனர். ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் ஆபரணங்கள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தினை உறுதி செய்யும் விதமாகப் பிரத்யேகமாக மிகச் சிறந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டவை மற்றும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் எப்போதும் அதிநவீன மற்றும் புத்தம் புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 20 அக்டோபர் 2021 அன்று கோவாவில் நடைபெற்ற தேசிய நகை விருதுகள் 2020-21ல், சிர்கான் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அதன் லேட்டஸ்ட் காதணி (ear cuff) நகை, “ஆண்டின் சிறந்த சிர்கோனியா ஜுவல்லரி” என்ற பிரிவில் விருதை வென்றுள்ளது. பட்டாம்பூச்சி இறக்கைகளின் வடிவம் போல உருவாக்கப்பட்ட ட்ரென்டியான இந்த இயர் கஃப் (ear cuff) கலைநயமிக்க அற்புதப் படைப்பாகும்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “வாடிக்கையாளர்கள், ஜிஆர்டி ஜுவல்லர்ஸுக்கு வருகை தரும் ஒவ்வொரு முறையும் புதிய ஆபரணங்களைப் பெற்று மகிழ்வதை, உறுதி செய்வதற்காக நாங்கள் எப்போதும் நேர்த்தியில் அதிக கவனம் செலுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு அளித்துவரும் ஆதரவிற்கும், முழு முனைப்போடு அயராது உழைத்து வரும் எங்களின் பணியாளர்கள் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

சிர்கோனியா ஜுவல்லரி
சிர்கோனியா ஜுவல்லரி

மேலும், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன், “பிரமிப்பூட்டும் டிசைன்களே எப்போதும் ஜிஆர்டியின் முக்கிய அம்சமாக இருந்துவருகிறது. வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, தொழில்துறையும் எங்களை அங்கீகரிக்கிறது என்பதை இந்தச் சமீபத்திய விருது நிரூபிக்கிறது. இது போன்ற அங்கீகாரம் எங்களைப் பெருமை கொள்ளச் செய்கிறது மற்றும் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்ய எங்களை ஊக்குவிக்கிறது,” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு