Published:Updated:

நீங்க கஷ்டப்பட்டு உழைக்கிற ஆளா... உங்களுக்குத்தான் இந்த 4 பாயின்ட்!

ஒருவர், தன் வேலையை விட்டுச் செல்ல நான்கு காரணங்கள் இருப்பது போன்று, வேலையை விடாமல் இருப்பதற்கும் நான்கு காரணங்கள் உள்ளனவாம்.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

வியர்வை சிந்தி உழைப்பவர்களைவிடவும் ஏசி அறைக்குள், கணினி முன் அமர்ந்து உழைக்கும் வர்க்கத்துக்குத்தான் உடலளவிலும் மனத்தளவிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில், `ஸ்ட்ரெஸ்’ என்ற வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இருக்க முடியாது. குறிப்பாக பணியிடத்தில் பிரச்னை, மேலதிகாரியின் பிரஷர், பணிச்சுமை போன்ற காரணங்களால்தான், பலருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.

Representational Image
Representational Image

திறமைசாலியான நபர்கள் வேலையை விட்டு விலக நான்கு காரணங்கள் இருக்கலாம் என்கிறது, ஒரு அமெரிக்க ஆய்வு. நெகடிவ்வான பணிச்சூழல், வேலைப் பளுவால் அதீத மன அழுத்தம், சுவாரஸ்யம், சவால்கள் அற்ற பணிச்சூழல், அங்கீகாரம், சலுகைகள் கிடைக்காமல் இருப்பது என இந்த நான்கு காரணங்களால்தான் பெரும்பாலும் மக்கள் தங்கள் வேலையை விடுகின்றனர். 

ஒருவர், தன் வேலையை விட்டுச் செல்ல நான்கு காரணங்கள் இருப்பதுபோன்று, வேலையை விடாமல் இருப்பதற்கும் நான்கு காரணங்கள் இருக்கிறதாம். முதலில், வேலைக்கு ஏற்ற பாராட்டுகள், அங்கீகாரம், சலுகைகள் கிடைப்பது,  வேலை நிமித்தமாகத் தான் முன்வைக்கும் நிறைகுறைகளைக் காது கொடுத்துக் கேட்கும் மேலதிகாரி, சவால்கள் நிறைந்த வேலை,  தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் அப்டேட் செய்துகொள்ளவும் கற்றல் வாய்ப்புகள் என இந்த 4 விஷயங்கள் இருந்தால் ஹேப்பியாக வேலை செய்யலாம்.

நாம் பிறந்தது, இஎம்ஐ, லோன் மற்றும் இதர பில்களைக் கட்டி மடிவதற்காக அல்ல என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

நாம் இன்று இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லை... இல்லை. பிசியாகச் சுழன்றுகொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் வேலை வேலை என்று நம்மை நாமே தொலைத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நீங்கள் மரணித்துவிட்டால் உங்கள் இடத்தை நிரப்ப சில நாள்களுக்குள் வேறொருவர் பணியமர்த்தப்படுவார்.  நாம் பிறந்தது, இஎம்ஐ, லோன் மற்றும் இதர பில்களைக்  கட்டி மடிவதற்காக அல்ல என்பதை நினைவில் நிறுத்துங்கள். நம்மில் பலர், வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு, வார இறுதி நாள்களில் கொஞ்சமாக வாழ்க்கையை வாழ்கிறோம்.

Representational Image
Representational Image

மெர்சர் என்னும் அமெரிக்க  ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு, 33 சதவிகிதம் பேர் ஒரு வேலையில் சேர்ந்து 12 மாதங்களிலேயே வேலையை உதறித்தள்ள முடிவெடுக்கின்றனர் என்கிறது. 

சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில், வேலையை விடும் 79சதவிகிதம் பேர், தங்கள் உழைப்புக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற காரணத்துக்காகதான் வேலையை விடுவதாகத் தெரிகிறது. அக்கறை, பாராட்டு, அங்கீகாரம், சம்பளம் இது எதுவுமே தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்து கிடைக்காததே, அவர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு முக்கியக் காரணம்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கும் ஊழியருக்குமான உறவு சுமுகமாக இருப்பின், மேற்சொன்ன பிரச்னைகள் வரவே வராது. ஆனால், இது நடைமுறையில் கொஞ்சம் கஷ்டமான விஷயம். மேலதிகாரியும் ஊழியரும் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைப்பதே இல்லை.

Representational Image
Representational Image

ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ கணக்கெடுப்பு, ``அமெரிக்காவில் 58 சதவிகிதம் மக்கள், தங்கள் சொந்த முதலாளியைவிட அந்நியர்களை அதிகம் நம்புகிறார்கள்’’ என்கிறது. மேனேஜர்கள், பாஸ், டீம் லீடர் போன்று தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை நம்புவதில் அப்படி என்ன சிக்கல்? ஊழியர்கள், தங்கள் பாஸ்  நம் மீது என்ன அபிப்ராயம் வைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுதான் காரணம்.  சரி, உங்கள் Boss கதையை சற்று நிறுத்தலாம். அவர் உங்களைப் புரிந்து கொள்கிறாரா என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில், நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காமல்  இருந்தால் அந்த உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும் அல்லவா? உங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுகிறீர்களா?

அமெரிக்க மக்களை வைத்து நடத்திய ஆய்வில், 2017-ம் ஆண்டில் மட்டும், உழைக்கும் வர்க்கம் தங்களின் 50சதவிகிதம் paid vacation-ஐ விட்டுக்கொடுத்துள்ளனர். 10சதவிகிதம் பேர் vacation-க்கே செல்வதில்லை. இது, அமெரிக்காவின் நிலை. நம் நாட்டு மக்களின் நிலை சொல்லவேண்டியதில்லை. நம்மில் எத்தனை பேர் ஜாலியாக குடும்பத்துடன் ஊர் சுற்றி இளைப்பாறுகிறோம்? சுற்றுலா  செல்லும் அந்த சின்ன கேப்பில் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ, நம் வேலைகளின் சுமை கூடிவிடுமோ என்கிற அச்சமா... இல்லை சோம்பேறித்தனமா?

Representational Image
Representational Image

இப்போது அந்த ஸ்ட்ரெஸ் விஷயத்துக்கு வருவோம். பெரும்பாலானோர், ஸ்ட்ரெஸ் காரணமாகத்தான் வேலையை விடுகிறார்கள். career bulider ஆய்வறிக்கையின்படி, 5 -ல் இரண்டு பேர் வேலைக்குச் சேர்ந்த பின் எடை அதிகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  மற்றொரு ஆய்வின்படி 53சதவிகிதம் பேர் பிடிக்காத வேலையை வேறு வழியில்லாமல் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இவை அனைத்துமே மன அழுத்தத்தின் விளைவுதான். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல், அனைத்து நிறுவனங்களிலுமே ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதுக்தான் விஷயம்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் ஒரு சில யோசனைகளை முன்வைக்கிறோம்..

Representational Image
Representational Image

அன்புள்ள ஊழியர்களே, யாரோ ஒருவர் வந்து உங்கள் திறமையைக் கண்டறிய வேண்டும்,  அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காதீர்கள். பிறர் வந்து உங்களை நிர்வகித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையையும் பொன்னான நேரத்தையும் நீங்களே நிர்வகித்து ஒழுங்குபடுத்துங்கள்.  உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய மற்றவர்களின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டாம்.

உங்களின் திறமைக்கு உகந்த மதிப்பளிக்காத நிறுவனத்துக்காக உங்களை வருத்திக்கொண்டு உழைக்காதீர்கள்.

உங்களின் passion என்ன என்பதை உணருங்கள். மற்றவர்களின் பாராட்டுக்காகக் காத்திருப்பதை விட்டுவிட்டு, உங்களின் மதிப்பை முதலில் நீங்கள் உணருங்கள். பிறருக்கு ரோல் மாடலாக வாழ்ந்து காட்டுங்கள்.  உங்களின் திறமைக்கு உகந்த மதிப்பளிக்காத நிறுவனத்துக்காக உங்களை வருத்திக்கொண்டு உழைக்காதீர்கள். உங்களையும் உங்கள் நேரத்தையும் மதிக்காக ஒரு நிறுவனத்துக்காக ஓவர் டைம் வேலை பார்க்காதீர்கள். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். கொஞ்சமேனும் சுயநலமாக இருங்கள். உங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நேரம் ஒதுக்குவது உங்களின் பொறுப்பு.

நீங்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட, உங்களின் பாஸ் வந்து உதவுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அவர்களுக்கு அவர்களின் மன அழுத்தத்தையே சரிசெய்யத் தெரியாது. உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை உங்கள் மேனேஜர் வந்து உணர்த்துவார் என்று எதிர்பார்க்காதீர்கள்.  ஏனென்றால், அவர் வாழ்க்கையின் அர்த்தத்தையே அவர் இதுவரை உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனியுங்கள், உங்களுக்காக ஒரு சில வரிகள். கவனிக்கிறீர்கள் என்றால் நன்றி.

Representational Image
Representational Image

பெரும்பாலான டீம் லீடர்கள் 89 சதவிகிதம், தங்கள் டீமில் இருப்பவர்களைப் பற்றி தவறான புரிதலைத்தான் கொண்டுள்ளீர்கள். அவர்கள் வேலையை விட்டு போவதற்கு, போதுமான சம்பளம் இல்லாததே காரணம் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்காக வாய்ப்பு மறுக்கப்படும்போதுதான் வேலையை விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது. சிலர், சம்பளம் போதவில்லை என்று வேலையை விட்டு சென்றாலும், பெரும்பாலானோர் தங்களுக்கான மதிப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் வேலையை விட்டு செல்ல நினைக்கிறார்கள். ஒவ்வொரு ஊழியரின் திறமை, தனித்துவம், திறன்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முயற்சி செய்கிறீர்களா? உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும் ஊழியர்களின் திறமையைப் பாராட்டுகிறீகளா? அவர்களின் திறன்களைக் கண்டறிய என்ன செய்தீர்கள்?

இதோ சில யோசனைகள்...

1. உங்களின் டீமில் உள்ள ஒவ்வொருவருடனும் தனியாக மீட்டிங் ஏற்பாடுசெய்யுங்கள். 

2. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி கேளுங்கள். 

3. அவர்களின் வேலை அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Representational Image
Representational Image

4. பணிச் சூழலில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று அவர்களின் கருத்தைக் கேளுங்கள். 

5. வேலை மற்றும் குடும்பத்தை சமநிலையாகக் கையாள்கிறார்களா என்பதைக் கேளுங்கள். 

6. நிறுவனம் அவர்களுக்கு மதிப்பளிப்பதாக உணர்கிறார்களா என்பதைக் கேளுங்கள். 

7. இந்த வேலையை, பணியிடத்தை, பிடித்தமானதாக மாற்ற எப்படி உதவ வேண்டும் என்று கேளுங்கள்.

8. அவர்கள் சொல்லும் உண்மைகளை, விமர்சனங்களைப் பொறுமையாகக் கேளுங்கள். அவர்களின் குறை நிறைகளை நீங்கள் காதுகொடுத்துக் கேட்கும்போது, நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்.

Representational Image
Representational Image

``ஸ்மார்ட் ஊழியர்களை நாம் பணியமர்த்துவது, நாம் சொல்வதை அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.’’ இது, ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும். மேற்சொன்ன யோசனைகளை நீங்கள் ஏற்கெனவே பின்பற்றுபவர் என்றால், மேலே உள்ள கோப்பை உங்களுக்குதான்!