Published:Updated:

லாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்..! - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? #MyVikatan

பிற நாடுகளிலும் சில துறைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த நாடுகள் அத்தகைய துறைகளை மீட்டெடுக்க என்ன செயல்கள் செய்தன என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா ஊரடங்கில் இப்பொழுது அரசு பல தளர்வுகள் வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பொருளாதார சக்கரத்தில் அனைத்துத் தொழிற்சாலைகளும் முழுமையாக இயங்கத் தொடங்கினால்தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும்.

கோயம்பேடு
கோயம்பேடு
Vikatan Team

உதாரணமாக போக்குவரத்து ஆரம்பிக்காமல் சிறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் அந்தத் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க படாது. அந்தத் தொழிற்சாலைகளை நம்பியுள்ள தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்காது. பணப்புழக்கம் இல்லாததால் மக்களின் வாங்கும் திறன் குறையும். இது மளிகை கடை வைத்திருப்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால் இந்த சங்கிலித் தொடரில் சுழலாத சக்கரங்களால் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பலதுறைகளில் முழு முடக்கம் இன்னும் தொடர்கிறது. சுற்றுலாத்துறை, கோயில் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள், சினிமா துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை சார்ந்த குடும்பங்கள் முழுவதுமாக வருமானம் இழந்துள்ளனர். இதில் பணம் முதலீடு செய்துள்ள முதலாளிகள் தொடர் முடக்கம் காரணமாக பணத்தையும் இழந்து வருகின்றனர்.

மளிகை கடை
மளிகை கடை
Vikatan Team

உதாரணமாக ஒரு பேருந்து வைத்திருக்கும் முதலாளி பேருந்தை இயக்கவில்லை என்றாலும், அந்தப் பேருந்திற்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்த வேண்டும். அரசுக்கு இருக்கைகளில் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். அந்தப் பேருந்துக்கு கடன் வாங்கியிருந்தால் அதற்கு வட்டியும் கட்ட வேண்டும். அந்தப் பேருந்தை நம்பியிருக்கும் தொழிலாளியின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திட வேண்டும். இவ்வளவும் பேருந்தில் இருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் கிடைக்காத சூழ்நிலையில் அவர்கள் செய்திட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ஒவ்வொரு துறைகளிலும் நேரடியாக மட்டும் இன்றி மறைமுகமாகப் பலர் ஈடுபட்டு இருப்பர். யானைக்கு ஊட்டும் சோறு சிந்தி விழுந்தால் பல்லாயிரம் எறும்புகளுக்கு உணவு என்பது போல ஒரு தொழிலை சார்ந்து மற்றொரு துறை இருக்கும். இந்தச் சூழ்நிலையில் நேரடியாகத் தொழில் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதனால் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பர்.

வியாபாரி
வியாபாரி
Vikatan Team

இப்போது சிலதுறைகளில் தளர்வு கொடுக்கப்பட்டாலும் மக்களிடம் மிக அதிக அளவில் அச்ச உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்த நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பல ஆலோசனைகளை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தினமும் பெற்று வருகிறோம்.

அதில் பிரதானமாக மக்கள் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும், ஓட்டல்களில் உணவருந்தக் கூடாது, சுற்றுலாக்களுக்கு செல்லக் கூடாது போன்ற பல ஆலோசனைகள் நம் அனைவருக்கும் வந்திருக்கும்.

இதுபோன்ற மெசேஜ்கள் ஏற்கனவே பலத்த பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் துறைகளுக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும். இவை அனைத்தும் மிகப் பெரிய பொருளாதாரச் சுணக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த நோய் தொற்று உலகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிற நாடுகளிலும் சில துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அந்த நாடுகள் அத்தகைய துறைகளை மீட்டெடுக்க என்ன செயல்கள் செய்தன என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

New Zealand
New Zealand
Pixabay

நியூசிலாந்து நாடு மிகப் பெரிய சுற்றுலா நாடு ஆகும். வருடம் தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருவர். இந்தச் சுற்றுலாத்துறையை நம்பி பல்லாயிர கணக்கான நியூசிலாந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடு அங்கு தொழில் செய்யும் நிறுவனங்களிடம் வாரத்தில் நான்கு நாள்கள் மட்டும் அலுவலகம் வேலை செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறை என்றால் மக்கள் சுற்றுலாவிற்கு கிளம்பிச் செல்வார்கள். அதன்மூலம் அந்த துறை சார்ந்தவர்களுக்கு பொருள் உதவி கிடைக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

மேலும் லண்டன் நகரில் பல்லாயிரக்கணக்கான உணவகங்கள், மது விடுதிகள் போன்றவை உள்ளன. இந்த நோய்த் தொற்றுக்கு பிறகு மக்கள் அச்ச உணர்வு காரணமாக உணவகங்களுக்கு செல்வதைக் குறைத்துவிட்டனர். இதனால் இதனை சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

ஐ.டி துறையில் நீண்ட நாள்களுக்கு WFH செய்வதில் பல சிக்கல்கள்! -  விளக்கும் ஊழியர் #MyVikatan

இதனை ஈடு செய்வதற்கு அரசு தம் மக்களை உணவகங்களில் செலவு செய்ய ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நபரும் செய்யும் செலவில் பாதியைச் செலுத்தினால் போதும். மிச்சத்தை அரசு அந்த ஓட்டலுக்கு தந்துவிடும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி அந்த நாட்டின் அரசு 629 மில்லியன் யுஎஸ் டாலர் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய 450 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் உணவகங்கள் பயன்பெறும். இதனால் நேரடியாக 18 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த சலுகை மது விற்பனைக்கு மட்டும் கிடையாது.

London shops
London shops
Pixabay

ஆனால், நமது நாட்டில் எதார்த்தமாக அரசால் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது. மக்களாகிய நாம் இந்தத் துறைகளின் மீது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமல் இருப்போம். ஒரு துறையைப் பாதிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை அதன் உண்மைத்தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு அனுப்பாமல் இருப்போம்.

இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பியதால்தான் மார்ச் மாத காலத்தில் கோழி இறைச்சியின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கோழி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று சில விஷமிகள் பரப்பிய தவறான செய்திதான் இதற்கு காரணம்.

Chicken
Chicken
Representational Image

ஆகையால், மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இந்தத் துறைகளில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து திரும்ப இயக்க அனுமதி அளித்துள்ளது. நாமும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்தத் துறைகளுக்கு உதவிட வேண்டும். இந்தியப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற கொள்கையோடு நாம் இதனை அணுக வேண்டும்.

மேலும், அரசும் தன் வருமானத்திற்கு குறைவு ஏற்பட்ட காரணத்தினால்தான் டாஸ்மாக் திறக்கும் முடிவினை எடுத்துள்ளது. அரசுக்கே வருமானக் குறைவு கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் இன்றளவும் மூடப்பட்டிருக்கின்ற இத்துறை சார்ந்தவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும். மேலை நாடுகளில் கொடுக்கப்பட்டுள்ள சலுகை அளவிற்கு கொடுக்க முடியவில்லை என்றாலும் அரசு தம்மால் இயன்றதை இத்துறைகளுக்கு உதவிட வேண்டும்.

சாலையோர கடைகள்
சாலையோர கடைகள்
Vikatan Team

இந்த நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன்கள் வழங்குவது பதிப்புகளில் இருந்து விடுபட உதவும் என்றாலும் ஐந்து மாதங்களாகத் தொழில் நடத்த முடியாத பாதிப்பைக் கடன்களால் மட்டும் ஈடு செய்து விட முடியாது. ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி தள்ளுபடி நேரடி வரி சலுகைகள் போன்றவையே இந்தத் தொழிலை மீட்பதற்கு உதவும் அப்பொழுதுதான் அரசின் சுயசார்பு இந்தியா கொள்கைக்கு உண்மையான பலன் கிடைக்கும்.

- ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு