Published:Updated:

LIC Digi Zone - எல்.ஐ.சி-யின் புதிய முன்னெடுப்பு!

LIC Digi Zone
News
LIC Digi Zone

வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பாலிசிகளைப் பெறுவதற்கும், பிரீமியம் செலுத்துவதற்கும், பிற சேவைகளைப் பெறுவதற்கும் எல்.ஐ.சி.யின் இந்த டிஜி மண்டலத்தைப் பயன்படுத்தலாம்.

லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), அதன் டிஜிட்டல் செயல்பாடுகளை, அதாவது அதன் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை மற்றும் சேவைகளை மேம்படுத்த ‘LIC Digi Zone’-ஐத் தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி-யின் தலைவர் எம்.ஆர். குமார், மேலாண்மை இயக்குனர்கள் ராஜ்குமார், சித்தார்த்த மொஹந்தி, பி.சி.பட்நாயக், மேற்கு மண்டல மேலாளர் சி.விகாஸ் ராவ் ஆகியோர் முன்னிலையில் டிசம்பர் 29, 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தொழில்நுட்பத்திறன் கொண்டு செயல்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகத் திகழும் எல்.ஐ.சி., இந்த அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கியோஸ்க்குகள் மூலம் அதன் திட்டங்கள் மற்றும் சேவைகளைத் தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பாலிசிகளைப் பெறுவதற்கும், பிரீமியம் செலுத்துவதற்கும், பிற சேவைகளைப் பெறுவதற்கும் எல்.ஐ.சி.யின் இந்த டிஜி மண்டலத்தைப் பயன்படுத்தலாம். இது திறக்கப்பட்டவுடனே அங்குவந்த வாடிக்கையாளர்கள் இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்.

எல்.ஐ.சி-யின் தலைவர் எம்.ஆர். குமார் இந்த முன்னெடுப்பு குறித்து பேசும்போது, “‘எல்.ஐ.சி., டிஜி மண்டலம் தொடங்கப்பட்ட இந்த தினம் மிகவும் மகிழ்ச்சியான தினம். எல்.ஐ.சி., தனது அடுத்துவரும் டிஜிட்டல் மாற்றங்கள் மூலம் நிறுவனம் வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு மற்றும் முகவர்களின் செயல்பாட்டுத் திறன் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுக்க இருக்கிறது,” என்றார்.