மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், உலகின் மிகப்பெரிய நகை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்று, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.9,860 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்ட மேசை கூட்டத்தில் மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அகமது மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் இந்தியா ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஓ. ஆஷார் ஆகியோர் இணைந்து ஒன்றாக இதனை அறிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மாநில தொழில்துறை அமைச்சர் திரு பி. ராஜீவ் ஆகியோர் உடனிருந்தனர். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், கருவூலம் மற்றும் புல்லியன் பிரிவின் தலைவர் திரு. திலீப் நாராயணனும் மாநாட்டில் பங்கேற்றனர். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், அதன் ‘மேக் இன் இந்தியா (Make in India), மார்க்கெட் டு தி வேர்ல்ட் (Market to the World)’ முயற்சியினை அதிகரிப்பதற்காக சமீப காலமாக அதன் முதலீடுகளை இரட்டிப்பாக்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் நகை விற்பனையாளர் 500 புதிய ஷோரூம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 11,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தேசிய தொழில்துறை காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களின் வட்ட மேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்திய அரசின் லட்சியமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதிலும், அதன் விரிவாக்கத் திட்டங்களின் மூலம் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நிறுவனம் முன்னுதாரணமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பாராட்டினார். இந்த விஷயத்தில் நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்தார்.

தற்போது, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பத்து நாடுகளில் 280க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும், ஐந்து நாடுகளில் 14 உற்பத்தி அலகுகளையும் கொண்டுள்ளது. இதில் 4,092 முதலீட்டாளர்களும் மற்றும் 14,169 நிர்வாகப் பணியாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்ட், IBM, அக்சென்ச்சர், IBM, E&Y டெலாய்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளை இந்நிறுவனம் தனது வணிக மாதிரியை மாற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது.
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் திட்டங்களைச் செயல்படுத்துகையில் சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுகை (உகுஎ) விதிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுகிறது. இது ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் மற்றும் அதன் லாபத்தில் 5% சமூக தொடர்புடைய நோக்கங்களுக்காக ஒதுக்குகிறது.