Published:Updated:

ஒரு பாடல் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? - இப்படிக்கு அனுதின பயணி

உதயா தொழிற்சாலைக்கு செல்ல கூடிய வழியில் வரும் படப்பை எனும் ஊரிலும், அதை சுற்றிலும், வேலைக்காக, விற்பனைக்காக என பல்வேறு சுய நிகழ்வுகளுக்காக மக்களின் புழக்கமிருக்கும். அன்றைய நாளில் அப்படியான பகுதியை போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெல்ல கடக்க..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னையில் ஓரகடத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் துளியும் பிடிக்காமல் வேறு வழியின்றி வேலை செய்து கொண்டிருக்கிறான் உதயா. பாடல்களை வைத்து பயணத்தொலைவை சொல்பவர்களுள் ஒருவன்தான் உதயா. அவன் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து தொழிற்சாலைக்கு செல்ல, போக்குவரத்து நெரிசலை பொறுத்து இருபத்தைந்து நிமிடம் முதல் நாற்பது நிமிடம் வரை ஆகும். அந்த பயண நேரத்தில் பாடல் கேட்பது அவன் வழக்கம். மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் ஷிஃப்ட்டிற்கு செல்ல இவன் 2.20 க்கு, தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பேருந்தில் ஏறுவான். எப்போதும் பேருந்தில் ஏறியவுடன் இருக்கையில் அமர்ந்து ஹெட்செட்டுகளை காதில் பொறுத்திக்கொண்டு பாடலை ஒலிக்கவிடுவான்.

உதயா தொழிற்சாலைக்கு செல்ல கூடிய வழியில் வரும் படப்பை எனும் ஊரிலும், அதை சுற்றிலும், வேலைக்காக, விற்பனைக்காக என பல்வேறு சுய நிகழ்வுகளுக்காக மக்களின் புழக்கமிருக்கும். அன்றைய நாளில் அப்படியான பகுதியை போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெல்ல கடக்க, உதயாவின் காதில் ஹெட்செட்டுகளின் வழியே ‛மனிதன்’ திரைப்படத்தில் வரக்கூடிய ‛பொய் வாழ்வா’ எனும் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

MTC Bus
MTC Bus

“பொய் வாழ்வா?

வலியே தீர்வா?

இல்ல

உன் வாழ்வில் அர்த்தமுண்டு

மெய் உணரும் முன்பே சோர்வா?

பொரு நீ, ஒருநாள் புரியுமென்று!”

என்ற வரி ஒலிக்கும் போது உதயா அவனையே மனதளவில் தேற்றிக்கொண்டிருந்தான். தேற்றுகை நேருகையில் மனம் அடம்பிடித்து அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என மறுமொழி கூறி இன்னும் சோர்வடைந்தது. அப்போதுதான்


“இந்த வெறும விடாதா

ஒரு சிறகு விழாதா

சிறு பறவ எழாதா

அது கனவ தொடாதா

இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா?”


வரிகள் ஒலித்தது. இது அவனுக்கு, அவனின் உயிரின் ஏக்கத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்க மனம் பயணம் செல்லும் எங்கும் ஒய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும்தானா என அவன் ஒய்வெடுத்த நிழல் அவனைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்ட நிலையை நியாபகப்படுத்தியது. அந்த ஏக்கத்துடனே நியாபகத்துடனே ஜன்னலுக்கு அந்த பக்கம் நகர்கிற உலகை கவனிக்கிறான்.

ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதால் உலகம் விசாலமாக தெரிகிறது. மக்கள் பரந்து இருக்கிறார்கள். அவர்களின் வலிகள் சிரிப்புகள் தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரிகிறது. பாடலின் பல்லவி ஒலித்து இசைத்துணுக்குகள் தனியே அவன் காதில் விழ பூவை விற்க முயலும் அக்காக்கள், சவாரிக்கும் ஆட்களை கூவி அழைக்கும் அண்ணன்கள், சாப்பிட வாங்க என ஹோட்டலுக்கு வெளியே நின்றபடியே கத்திக்கொண்டும் கையசைத்துக்கொண்டிருக்கும் தாத்தா, பேருந்துகளுக்காக காத்திருக்கும் மக்கள், பிழைப்பிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள், முகத்திலே சோர்வு நன்றாக தெரியுமளவுக்கு நிற்கும் பலர் என அனைவரையும் உதயாவின் கண் நோட்டமிட்டு கொண்டிருக்கும்போதே


“வெற்றி தரும் முற்றுப்புள்ளி

தோல்விகளே செல்லும் வழி

யாருக்கு இங்க இல்ல வலி

அட! அக்கம்பக்கம் நீ கவணி”

என அந்த அற்புதமான வரி பாடலின் வழியே ஒலித்தது.

பேருந்து பயணம்
பேருந்து பயணம்

கண்களில் நீர் ததும்பிவிட்டது ஆனால் வெளிவரவில்லை. அந்த வரியில் இருக்கும் உண்மை அதை அந்த குரல் இவனுக்குள் கடத்திய விதம் உதயாவை ஏதொவொன்று செய்திருந்தது. ஒரு பாடல் உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்! இன்பத்தை அளிக்கும்! துன்பத்தை ஏற்றவும் செய்யும்! ஏக்கத்தை உங்கள் பக்கம் நின்று சொல்லும். உங்களின் உணர்வை வெளிப்படுத்தும்! ஒரு பாடல் அதன் வழியே அனைத்தையும் செய்யும் செய்ய தூண்டும்!

உதயாவுக்கோ மென்சோகத்தினூடே ஏக்கத்தினூடே அப்பாடல் ஆறுதலாய் அமைந்தது. பாடலை கேட்டபடியே அவனும் தொழிற்சாலை சென்றடைந்தான்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனுக்கும், பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கும், இப்பாடல் உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் ஒரு நன்றி அவன் தரப்பிலிருந்து இன்னமும் போய் சேரவில்லையென அவ்வபோது அவன் கூறவும் செய்வான்!


-சுரேந்தர் செந்தில்குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு