Published:Updated:

`பாதுகாப்பான ஆன்லைன் பேங்க்கிங் வசதி!’ - இதோ பயனுள்ள 10 குறிப்புகள் #My Vikatan

ஆன்லைன் பேங்க்கிங்
ஆன்லைன் பேங்க்கிங்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஆபத்துகள் அதிகம் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. ஆனால், முறையாகப் பயன்படுத்தினால் ஆன்லைன் பேங்க்கிங் வசதி ஆபத்தில்லாத ஒன்றே!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாதுகாப்பாக ஆன்லைன் பேங்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த சில குறிப்புகள்:

1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்கள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் உள்நுழைவுகளில் சிரமம் பார்க்காமல், மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள். எளிமை என்பதைவிட, பாதுகாப்பே முக்கியம். தொடர் எழுத்துகள் மற்றும் எண்கள், நம்முடைய மற்றும் நம்முடைய நெருங்கிய உறவினர்களுடைய பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்டவற்றை பாஸ்வேர்டாக வைக்கவே வேண்டாம். அதற்குப் பதில், நமது வாழ்வில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வைச் சுருக்கி, பாஸ்வேர்டாக வைத்தல் சிறந்தது.

Representation image
Representation image

உதாரணமாக "I went to Ooty on the 8th of May" என்பதைச் சுருக்கி "Iwtoot@8om"என வைக்கலாம். இவ்வாறு, ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் ஏதாவது ஒரு நிகழ்வைச் சுருக்கி வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. நினைவு வைத்துக்கொள்வதும் எளிது! அல்லது "How a Password Changed My Life" என்ற நூலின் ஆசிரியரான "மோமோ எஸ்ட்ரெல்லா" என்பவர் வைத்ததுபோல பாஸ்வேர்டு வைக்கலாம்.

மனைவி செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பாஸ்வேர்டை Forgive@h3r (அவளை மன்னிக்க வேண்டும்) என்று வைத்திருந்தாராம். தினமும் பலமுறை பாஸ்வேர்டைப் பயன்படுத்த, சிறிது நாளில் மனைவி மேல் இருந்த வெறுப்பு குறைந்துவிட்டதாம்! அவ்வாறே சிகரெட் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்காக Quit@smoking4ever என பாஸ்வேர்டு வைத்தபின், சிகரெட் குடிக்கும் வேட்கை குறைந்ததாம்! இவ்வாறு நம்முடைய வாழ்க்கையின் லட்சியங்களை அல்லது நம்முடைய உணர்வுகளைக்கூட பாஸ்வேர்டாக வைக்கலாம்.

2. உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். Auto lock வசதியை அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கலாம்! ஆனால், உங்களுடைய மொபைல் போனை அவ்வாறு வைத்திருப்பது சிறந்ததல்ல.

வைஃபை
வைஃபை

3. பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வைஃபையைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனை செய்யாதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால், வை-ஃபையை அணைத்தே வையுங்கள். ஓசி வை-ஃபை வேண்டவே வேண்டாம்.

4. புதிதாக போன் மற்றும் ஆப்களில் வருகிற பாதுகாப்பு அப்டேட்டுகளை உதாசீனம் செய்யாதீர்கள். டேட்டாவைப் பார்த்தால், பின்னர் வங்கிக்கு பேட்டா தேய அலைய நேரிடும்.

5. எந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்தினாலும் அதைப் பயன்படுத்திய பின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள். அரைகுறை எதிலும் ஆபத்தானதே.

6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

7. அங்கீகாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

Representation image
Representation image

8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

10. உங்கள் பிறந்த தேதி, பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்றவற்றை யாரிடமும் பகிராமல் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்றரீதியில் வரும் தகவல்களை ஒரு புன்சிரிப்புடன் ஜென் மனநிலையில் கடந்துவிடுங்கள்.

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல