Published:Updated:

`ஸ்விக்கி ஊழியர்கள் பிற நிறுவனங்களில் பணிபுரியலாம்': புதிய விதிமுறையை அறிவித்த ஸ்விக்கி!

SWIGGY

நிறுவனத்தின் வேலைகளையும், உற்பத்தி திறனையும் பாதிக்காத வகையில், ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்கள், வேலை நேரம் முடிந்தவுடனோ அல்லது வார இறுதி நாட்களிலோ, வேறு நிறுவனங்களில் வேலை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

`ஸ்விக்கி ஊழியர்கள் பிற நிறுவனங்களில் பணிபுரியலாம்': புதிய விதிமுறையை அறிவித்த ஸ்விக்கி!

நிறுவனத்தின் வேலைகளையும், உற்பத்தி திறனையும் பாதிக்காத வகையில், ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்கள், வேலை நேரம் முடிந்தவுடனோ அல்லது வார இறுதி நாட்களிலோ, வேறு நிறுவனங்களில் வேலை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Published:Updated:
SWIGGY

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிறுவனம் சார்ந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். அப்படி நிறுவனம் விதிக்கும் முதல் விதிமுறையே, தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் போது, வேறு எந்த நிறுவனத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை செய்யக் கூடாது என்பது தான். நிறுவனத்தின் இத்தகைய விதிகளை மீறும் போது, ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Swiggy
Swiggy

ஆனால் ஆன்லைனில் உணவு விநியோகிக்கும் நிறுவனமான ஸ்விக்கி தன்னுடைய ஊழியர்கள் பணி நேரம் முடிந்ததும், மற்ற நிறுவன பணிகளில் ஈடுபடலாம் என அனுமதி அளித்துள்ளது.

அதாவது ஸ்விக்கி ‘மூன்லைட்டிங் பாலிசி’ (Moonlighting policy) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஸ்விக்கி நிறுவனத்தின் வேலைகளையும், உற்பத்தி திறனையும் பாதிக்காத வகையில், ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்கள், வேலை நேரம் முடிந்தவுடனோ அல்லது வார இறுதி நாட்களிலோ, வேறு நிறுவனங்களில் வேலை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்விக்கியில் பணியாற்றும் முழுநேர வேலைக்கு பின், ஊழியர்கள் ஒரு என்.ஜி. ஓ வில் தன்னார்வலராகவராக, நடன பயிற்சியாளராக, சமூக வலைத்தளத்தில் ஒரு கன்டென்ட் கிரியேட்டராக பணியாற்றுவது, அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை தரும் என ஸ்விக்கி உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது.

Swiggy
Swiggy

மூன்லைட்டிங் திட்டத்தை தொடர, ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களையும் ஸ்விக்கி பரிந்துரைத்துள்ளது. ஊழியர்கள் செய்யவிருக்கும் மற்ற வேலையானது, நிறுவனத்தின் அலுவலக பணியை பாதிப்பதாக இருக்கும்பட்சத்தில், நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்பே அவ்வேலையை தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``ஊழியர்களை அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிப்பதே எங்களின் குறிக்கோள். இதற்கு அவர்கள் பணிபுரியும் முழு நேர வேலை ஒரு தடையாக இருக்க கூடாது. உலகத்தர அளவில், மக்களை முன்னிறுத்தி செயல்படும் நிறுவனத்தின் பயணத்தில், மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை துறை தலைவர் கிரிஷ் மேனன் தெரிவித்துள்ளார்.