Published:Updated:

``ஒருவேளை தங்க முட்டையாக இருக்குமோ..?” - அதிர வைத்த மும்பை ஹோட்டலின் விலை

இன்னும் சிலர் இது வெறும் முட்டையின் எம்.ஆர்.பி-தான். உப்புக்கும் பெப்பர் பொடிக்கும் தனியாக காசு கொடுக்கணும்.

முட்டை
முட்டை

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக நடிகர் ராகுல் போஸ் , ஒரு ஹோட்டலின் பில்லை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு வாழைப்பழத்தின் விலை 442.50 ரூபாய் எனப் போடப்படிருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சமூக வலைதளத்தில் அதிர்வையும் ஏற்படுத்தியது.

வாழை பழ பில்
வாழை பழ பில்

இந்நிலையில், ``இது என்ன பிரமாதம்... இதவிட ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு” என நடிகர் வடிவேலு சொல்வது போன்று மும்பையில் ஒரு ஹோட்டலின் முட்டை விலை இருக்கிறது. மும்பை ஹோட்டலின் இந்த பில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பில்லில் இரண்டு அவித்த முட்டையின் விலை 1,700 ரூபாய் என உள்ளது. அதாவது ஒரு முட்டையின் விலை 850 ரூபாய். மேலும் ஒரு ஆம்லெட்டின் விலையும் 850 ரூபாய். இது ட்விட்டரில் வெளியானது முதல் செம ஹிட்.

முட்டையின் பில்
முட்டையின் பில்

இதை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள், முட்டையின் இந்த விலைக்கு பல்வேறு காரணங்களை நக்கலாகத் தெரிவித்து அதிரடிக்க வைக்கிறார்கள். ஒருவர், `ஒருவேளை அந்தக் கோழி தங்க முட்டை போட்டு இருக்கும்' என்றார்.

பிரியாணி 10 ரூபாய்… பரோட்டா 1 ரூபாய்… பெரியகுளத்தை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்!

மற்றொரு நெட்டிசன், பணக்கார கோழி இட்ட முட்டை போலும் எனக் கொளுத்திப் போட்டார். இன்னும் சிலர் இது வெறும் முட்டையின் எம்.ஆர்.பி-தான். உப்புக்கும் பெப்பர் பொடிக்கும் தனியாகக் காசு கொடுக்கணும். முட்டை வேக பயன்படுத்தப்பட்ட கேஸுக்குத் தனியாக பில் கட்டணும் போல என கமென்ட் செய்தார்.

ஒரு முட்டையின் விலை 850 ரூபாய் என்பதற்கு உங்களின் கருத்து என்ன? ஜாலியா கமென்ட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!