Published:Updated:

டாப் 10 சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் இந்தியர்கள் 3 பேர்!- யார் அவர்கள்?

இந்தப் பட்டியலானது, சி.இ.ஓ-க்கள் ஃபைனான்ஸியல் செயல்பாடுகளை மையமாக வைத்து மட்டுமே வெளியிடப்படவில்லை.

சி.இ.ஓ-க்கள்
சி.இ.ஓ-க்கள்

உலக அளவில் `சிறப்பாகச் செயலாற்றும் டாப் 100 சி.இ.ஓ' பட்டியலை ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ (Harvard Business Review (HBR)) வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியாவில் பிறந்த மூவர் இடம்பெற்றிருக்கிறார்கள். இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த, அடோப் நிறுவனத்தின் சி.இ.ஓ சாந்தனு நாராயண் 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சி.இ.ஓ அஜய் பங்கா 7-வது இடத்தையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான சத்யா நாதெள்ளா 9-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். டி.பி.எஸ் பேங்க் சி.இ.ஓ பியூஷ் குப்தா 89-வது இடத்தையும், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் கூக் 62-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான, நிவிடியாஸ் என்கிற நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி ஜென்சென் ஹாங் பிடித்திருக்கிறார்.
Vikatan

இந்தப் பட்டியலானது, சி.இ.ஓ-க்கள் ஃபைனான்ஸியல் செயல்பாடுகளை மையமாக வைத்து மட்டுமே வெளியிடப்படவில்லை. சுற்றுச்சூழல், சமூக நலன் மற்றும் ஆளுமை (இ.எஸ்.ஜி) மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டது என ஹெச்.பி.ஆர் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி ஜெஃப் பெசோஸ், 2014 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஃபைனான்ஸியல் செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். ஆனால், குறைந்த இ.எஸ்.ஜி மதிப்பெண் காரணமாக இந்த ஆண்டு பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.