கையில் ஒரு புத்தகத்துடன் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘நீர் நாணயம் விகடனில் வெளியிட்ட டாக்டர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய பணவளக்கலை புத்தகம் எப்போது வரும் என்று காத்திருந்தேன். இன்று வந்தவுடன் வாங்கிவிட்டேன். பரிசு தர ஏற்ற புத்தகம்’’ என்று புகழ்ந்தவர், செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 519 புள்ளிகள் அதிகரித்து 27865-ஆக நிலை பெற்றது. மத்திய அரசு சீர்திருத்தங்களை (கட்டுமானத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளில் தளர்வு) மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது, எஃப் அண்ட் ஓ-வில் அதிகமாக ஷார்ட் பொசிஷன்களை கவரிங் செய்திருப்பது, ஜப்பான் அரசாங்கம் அதன் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பெரிய அளவில் சலுகை அறிவித்ததே இதற்கு முக்கிய காரணம்.

இந்த வாரத்தில் 178 பங்குகள் புதிதாக 52 வார உச்சத்தை எட்டி இருக்கின்றன. இதில், வங்கி மற்றும் நுகர்வோர் துறை பங்குகள் அதிகம். குறிப்பாக, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, கெயில் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் மாருதி சுஸூகி போன்றவற்றைக் குறிப்பிடலாம்’’ என நீண்ட விளக்கம் தந்தார்.

‘‘சந்தைக்கு சிறு முதலீட்டாளர்கள் வருகை அதிகரித்துள்ளது போலிருக்கே?’’ என்றோம் உற்சாகமாக.

‘‘செப்டம்பர் காலாண்டில் சுமார் 600 நிறுவனப் பங்குகளில் சிறு முதலீட்டாளர் களின் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், எல் அண்ட் டி, டாடா பவர், ஹேவல்ஸ் இந்தியா, ஜெயின் இர்ரிகேஷன், ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, பூஷன் ஸ்டீல், ஜேபி பவர், ஜிந்தால் ஸ்டீல் போன்றவைக் குறிப்பிடத்தக்க பங்குகளாகும்.

அதேநேரத்தில், சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், கடந்த மூன்று மாதத்தில் பிஎஸ்இ-ல் மட்டும் சுமார் 35 நிறுவனங்கள் சஸ்பென்ட் செய்யப்பட் டிருக்கின்றன. சரியான நேரத்தில் பங்குச் சந்தைக்கு, முதலீட்டாளர்கள் விவரத்தைத் தெரிவிக்காமல் இருப்பது, காலாண்டு முடிவுகளை சமர்ப்பிக்காமல் இருப்பது போன்ற காரணங்களுக்காக சுமார் 1,250 நிறுவனங்கள் சஸ்பென்ட் ஆகி இருக்கின்றன. ஸ்பான்கோ, துலிப் டெலிகாம், ஃபர்ஸ்ட் லீஸிங், ஏசியன் எலெக்ட்ரானிக்ஸ், பிர்லா பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் சஸ்பென்ட் ஆகி இருக்கின்றன. முதலீடு செய்யும் போது இந்தமாதிரி விஷயங்களைக் கவனிப்பது அவசியம்’’ என்றவருக்கு, சுடச்சுட ஏலக்காய் டீ தந்தோம்.

‘‘மியூச்சுவல் ஃபண்டிலும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘கடந்த ஆறு மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டில் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.6% உயர்ந்துள்ளது. அதாவது, இந்தக் காலகட்டத்தில் சிறு முதலீட்டாளர்கள் மூலம் 16.6 லட்சம் புதிய ஃபோலியோக்கள் உருவாகி இருக்கிறது'' என்றார், உற்சாகம் பொங்க.
‘‘காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கிறது?’’ என்று வினவினோம்.

‘‘செலவுக் குறைப்பு மற்றும் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால், மாருதி சுஸூகியின் நிகர லாபம் 29% அதிகரித்து ரூ.863 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல், செலவுக் குறைப்பு நடவடிக்கை மற்றும் விற்பனை உயர்வால் சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி-ன் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 62% அதிகரித்துள்ளது. அம்புஜா சிமென்ட்ஸ்-ன் நிகர லாபம் 44% உயர்ந்திருக்கிறது. வட்டிச் செலவு அதிகரித்ததால், பொதுத் துறையைச் சேர்ந்த நீர் மின்சார உற்பத்தி நிறுவனமான என்ஹெச்பிசி-ன் நிகர லாபம் 3% குறைந்துபோய் உள்ளது.

வாராக் கடனுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இரண்டாம் காலாண்டில் ரூ.245 கோடியை நிகர இழப்பாகப் பெற்றுள்ளது. இதன் மொத்த வாராக் கடன் 7.35 சதவிகிதமாக உள்ளது. நிகர வாராக் கடன் ரூ. 9,109 கோடியாக இருக்கிறது. இதனால் காலாண்டு முடிவு வெளியான தினத்தில் பங்கின் விலை 4.11% குறைந்துபோனது.

மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்ததால், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 170% அதிகரித்து ரூ.1,383 கோடியாக உள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

‘‘நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் லாட் சைஸ் குறைக்கப்பட்டுள்ளதே? என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘நிஃப்டி பங்குகள் மீதான வர்த்தகம் 2007 மார்ச் முதல் இதுவரையில் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்-ன் பங்களிப்பு குறைந்துகொண்டு வந்துள்ளது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் லாட் சைஸ் ஆரம்பிக்கப்பட்டபோது, 50-ஆக இருந்தது. இது வர்த்தக அளவை அதிகரிக்கும் நோக்கத்தோடு, அக்டோபர் 31-ம் தேதி முதல் பாதியாக, அதாவது 25-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2015-ம் ஆண்டுக்கான கான்ட்ராக்ட்களை புதிய லாட் சைஸின்படி வாங்க முடியும். இனி, குறைந்த செலவில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் டிரேடர்கள் விளையாட ஆரம்பிக்கலாம்’’ என்றார்.

‘‘கமாடிட்டி டிரேடிங்-ல் பிஎஸ்இ களம் இறங்கப் போகிறதாமே?’’ என்றோம் ஆச்சர்யத்துடன்.

‘‘தேசிய பங்குச் சந்தையான (என்எஸ்இ), நேஷனல் கமாடிட்டி அண்ட் டெரிவேடிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச்-ல் அதிக பங்கு மூலதனத்தை கொண்டிருப்பதன் மூலம் கமாடிட்டி வர்த்தகப் பிரிவில் இருக்கிறது. இப்போது மும்பை பங்குச் சந்தையும் (பிஎஸ்இ) கமாடிட்டியில் களமிறங்க திட்டமிட்டுள்ளது'' என்று சொல்லிவிட்டு, புறப்படத் தயாரானார்.

‘‘ஷேர் டிப்ஸ் ஏதாவது?’’ என்று தடுத்தோம். ‘‘ஐந்து அருமையான பங்குகளைத் தந்துவிட்டு, என்னிடம் வேறு கேட்கிறீரா?’’ என்று பொய்க் கோபம் காட்டிவிட்டு, விருட்டென புறப்பட்டுச் சென்றார்.