Published:Updated:

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

சி.சரவணன்

நடப்பு ஆண்டில்  மாதத்துக்கு ஒரு லட்சம் பேர் சந்தைக்குள் புதிதாக நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் பலர், சந்தை இறக்கத்தில் முதலீட்டுக்கான வாய்ப்பைத் தவறவிட்டவர்களாக இருக்கக்கூடும்.  இவர்கள் இனி முதலீடு செய்யவில்லை எனில், எந்தப் பங்குகளை வாங்கலாம் என பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகரிடம் கேட்டோம்.

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

‘‘ஏற்கெனவே சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்கள் இனி முதலீடு செய்ய வேண்டுமெனில் லார்ஜ் கேப் பங்குகளே ஏற்றதாக இருக்கும். லார்ஜ் கேப் பங்குகள் எனப்படும்  பெரிய நிறுவனங்களின் பங்குகள் எனில், சிக்கல் அதிகம் இருக்காது.  இந்த நிறுவனப் பங்குகள் புதிய முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு, நல்ல வருமானமும் தருவதாக இருக்கும். அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற சில நிறுவனப் பங்குளை பரிந்துரை செய்துள்ளேன்” என்றவர், ஐந்து லார்ஜ் கேப் பங்குகளை பரிந்துரைத்தார். இதோ அவர் பரிந்துரை செய்த பங்குகள்...

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!
சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

இந்தியாவிலே அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இயங்கி வருகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஒருங்கிணைந்த மின்சார ஆலை களுக்கான கருவிகளைத் தயாரித்து அளிக்கும் முன்னணி நிறுவனமான பிஹெச்இஎல் (பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்) நிறுவனத்துக்கு நிலக்கரிப் பற்றாக்குறை பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

அதே நேரத்தில், இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துவரும் ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்குமுன் சீன நிறுவனங்களுக்குச் சென்ற பல ஆர்டர்கள் இப்போது இந்த நிறுவனத்துக்குக் கிடைத்து வருகிறது. சீன நிறுவனங்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

அதேநேரத்தில், பிஹெச்இஎல்-ன் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளும் குறைவாக இருக்கிறது. மேலும், மின்சாரம், பகிர்மானம், தொழில், போக்குவரத்து (ரயில்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆயில் அண்ட் காஸ், ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான 180-க்கும் மேற்பட்ட பொருள்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதை அடுத்து, 2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு மஹாரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது.

பங்கின் விலை :   255.10
இபிஎஸ்:  13.03
பிஇ விகிதம்: 19.57
புத்தக மதிப்பு:   138.52
விலை/புத்தக மதிப்பு: 1.84

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

பொதுத்துறையைச் சேர்ந்த நவரத்னா நிறுவனமான ஆர்இசி (Rural Electrification Corporation Limited) இந்தியா முழுக்க மின்சார வசதியை அளிப்பது என்கிற இலக்கோடு இயங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த நிறுவனம் மின் வசதியை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இதன் நிகர வட்டி வரம்பு 4.99 சதவிகிதமாக உள்ளது. இது வங்கிகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். பொதுத்துறை வங்கிகளில் இந்த நிகர வட்டி வரம்பு 2 முதல் 2.5 சத
விகிதமாகத்தான் உள்ளது.

ஆர்இசி நிறுவனம் கொடுத்த கடனில் 15% மட்டுமே தனியார் நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. மீதி மாநில அரசுகளின் மின்சார வாரியங்களுக்குத்தான் அளிக்கப் பட்டிருக்கிறது. அந்தவகையில் நிறுவனத்தின் மீதான ரிஸ்க் குறைவாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு வாராக் கடன் குறைவாக உள்ளது. இது, இதன் மிகப் பெரிய பலமாக இருக்கிறது.

முடிந்த  2013-14ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் (இபிஎஸ்) ரூ.47-ஆக உள்ளது. இது நடப்பு 2014-15ம் ஆண்டில் ரூ.60-ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக மின் பற்றாக்குறை இருக்கிறது.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முயற்சி இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக
இருக்கிறது.

நிறுவனம் வளரும் போது பங்கு முதலீட்டின் மூலமும் கணிசமான லாபத்தை முதலீட்டாளர்கள் பார்க்க முடியும்.

பங்கின் விலை  :   294.05
இபிஎஸ்   :  48.74
பிஇ விகிதம்  :  6.03
புத்தக மதிப்பு  :   209.32
விலை/புத்தக மதிப்பு :  1.40
டிவிடெண்ட்  :  95.00%
டிவிடெண்ட் யீல்டு  :  3.23%
முக மதிப்பு  :   10.00
52 வார அதிகம்  :  383.40
52 வார குறைவு  :  166.50

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

இந்தியாவின் டாப் 10 வணிகக் குழுமங் களில் ஒன்றான பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்தது, பஜாஜ் ஆட்டோ.

இந்த நிறுவனம், ஆரம்ப நிலை இருசக்கர வாகன தயாரிப்பை நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக பிரீமியம் பிரிவில் இருசக்கர வாகனத் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மூன்று சக்கர வாகனமான ஆட்டோ தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

மஹாராஷ்டிரா மற்றும் உத்தராஞ்சலில் இந்த நிறுவனத்துக்கு உற்பத்தி தொழிற்சாலை கள் இருக்கின்றன.  பஜாஜ் ஆட்டோவின் வருமானத்தில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எவ்வளவு வாகனங்களை விற்கிறது என்று பார்ப்பதை விட, லாப வரம்புதான் முக்கியம் என்று செயல்பட்டு வருகிறது. இதன் லாப வரம்பு 22 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாக இந்த நிறுவனப் பங்கின் செயல்பாடு சரி இல்லை. இனிவரும் காலத்தில் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாப வரம்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது, பஜாஜ் ஆட்டோ.

பங்கின் விலை ஓராண்டு காலத்தில் 40 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கின் விலை  :  2,577.50
இபிஎஸ்   :  103.65
பிஇ விகிதம்  :  24.86
புத்தக மதிப்பு  :  332.04
விலை / புத்தக மதிப்பு :  7.76
டிவிடெண்ட்  : 500%
டிவிடெண்ட் யீல்டு  :  1.94%
முக மதிப்பு  :  10.00
52 வார அதிகம்  :  2,585.00
52 வார குறைவு  :   1,793.20

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

பொதுத்துறையைச் சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசி-ன் உற்பத்தித் திறன் 43,128 மெகா வாட்-ஆக இருக்கிறது. இதனை 2032-ம் ஆண்டில் 1,28,000 மெகா வாட் ஆக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது.

ஒரு காலத்தில் இந்த நிறுவனம் அதன் உற்பத்தித் திறனில் 96% அளவுக்கு இயங்கியது. இப்போது 82% என்கிற நிலையில் இயங்கி வருகிறது. இதனை அதிகரிக்க மத்திய அரசு அதிக முயற்சி எடுத்து வருகிறது.

நிலக்கரி பற்றாக்குறையால்தான், இந்த உற்பத்தி குறைகிறது. அண்மையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கிறது.

அதாவது, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலக்கரியை ஒதுக்கிக் கொடுப்பதில் சிக்கல் இருக்காது என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் என்டிபிசிக்கான நிலக்கரிப் பற்றாக்குறை சரியாகிவிடும்.

அப்போது இந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து லாபம் அதிகரிக்கும். அது பங்கின் விலையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனப் பங்கின் டிவிடெண்ட் யீல்டு 3.92 சதவிகிதமாக உள்ளது.

கடன் பெரிய அளவில் இல்லை என்பது இந்த நிறுவனத்துக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது.

பங்கின் விலை  :   147.10
இபிஎஸ்   :  12.91
பிஇ விகிதம்  :   11.40
புத்தக மதிப்பு  :    110.80
விலை/புத்தக மதிப்பு :    1.33
டிவிடெண்ட்  :   57.50%
டிவிடெண்ட் யீல்டு  :    3.91%
முக மதிப்பு  :  10.00
52 வார அதிகம்  :   168.90
52 வார குறைவு  :  110.65

சந்தை ஏற்றத்தைத் தவறவிட்டவர்களுக்கு... லாபம் தரும் லார்ஜ் கேப் பங்குகள்!

இயற்கை எரிவாயு (காஸ்) விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக காஸ் விலை ஏற்றப்படாமல் இருந்தது. காஸ் விலை 5.61 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சந்தையில் 12 முதல் 13 டாலராக உள்ளது.

காஸ் விலை ஒவ்வொரு ஆறு மாதமும் மாற்றியமைக்கப்பட இருப்பது ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டிருப்பது இந்த நிறுவனத்தின் மானியச் சுமையை வெகுவாகக் குறைக்கும்.

தற்போதைய நிலையில் ஆயில் இந்தியா நிறுவனம், அதன் கையிருப்பில் குறைவான காஸை எடுத்து வருகிறது. இதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும், காஸ் விலையை ஆயில் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில், ஓராண்டு காலத்தில் தற்போது 5.61 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருப்பது 8 டாலர் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

வடகிழக்கு இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு எரிவாயுக் கிணறுகள் அதிகம் இருக்கின்றன. வடகிழக்கு இந்தியாவை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாப அதிகரிப்புக்கு உதவிகரமாக இருக்கும்.

பங்கின் விலை :  616.05
இபிஎஸ்  :  53.63
பிஇ விகிதம் : 11.49
புத்தக மதிப்பு :  344.48
விலை/புத்தக மதிப்பு :  1.79
டிவிடெண்ட் :  215%
டிவிடெண்ட் யீல்டு : 3.49%
முக மதிப்பு : 10.00
52 வார அதிகம் :  669.95
52 வார குறைவு :   616.05

அடுத்த கட்டுரைக்கு