ஒரு மனிதன் தனது அனைத்து எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள சரியான வகையில் முதலீடு செய்வது அவசியம். இந்த முதலீடு பாதுகாப்பானதாகவும், அதே நேரத்தில் வங்கி டெபாசிட்டை விடக் கூடுதலாக வருமானம் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த எதிர்பார்ப்பை பங்குச் சந்தை முதலீட்டுக்கு அடுத்தபடியாக உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நிறைவேற்றி வருகின்றன. ஃபண்டுகளைத் தேர்வு செய்வதற்கு முன்பும், முதலீடு செய்து கொண்டிருக்கும்போதும் முதலீட்டாளர்களுக்கு ஒருவிதமான குழப்பம் நிலவும். அதாவது, நாம் தேர்வு செய்த ஃபண்ட் சரியானதா, இல்லையா என்பதுதான் அது. ‘‘இப்படி ஒரு குழப்பம் வரும்போ தெல்லாம் ஒரு ஃபண்டை நீங்களே சுயமாக ஆராய்ந்து பார்க்க முடியும்’’ என்று சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் இயக்குநருமான என்.சுவாமிநாதன்.

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த ஆய்வை ஒரு வருடத்துக்கு ஒருமுறை யாவது கட்டாயம் செய்ய வேண்டும். இந்த ஆய்வை முதலீட்டாளர்களே எளிதாகச் செய்யலாம். முதலில், நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்ட் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, மிட் கேப் வகையா, லார்ஜ் கேப் வகையா, கடன் சார்ந்த திட்டமா என பார்ப்பது அவசியம். உங்கள் ஆய்வில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய எட்டு வழிகள் இங்கே....

1. ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டுக்கும் ஒரு பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் இருக்கும். நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டின் வருமானமானது இண்டெக்ஸ் வருமானத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

2. ஃபண்ட் ஆரம்பித்த தேதியிலிருந்து அது கொடுத்துள்ள வருமானமா னது தொடர்ச்சியாக ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டும். வருமானமானது ஒரு வருடம் பெஞ்ச் மார்க்கைவிட அதிகமாக வும், அடுத்த சில வருடங்கள் பெஞ்ச்மார்க்கைவிடக் குறைவாகவும் கொடுத்திருக்கக் கூடாது.

3. முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது எப்போதும் டாப் 5-க்குள் இருப்பது அவசியம். இது தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அதாவது, 1, 3, 5 வருடங்கள் தொடர்ச்சி யாக இருப்பது அவசியம்.

4. முதலீடு செய்துள்ள அல்லது முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிப்பது ஃபண்ட் மேனேஜரா அல்லது ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீமா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு குழுவாக இருந்தால் சிறப்பாக இருக்கும். அதேபோல, ஃபண்ட் மேனேஜர் எத்தனை வருடமாக இந்த ஃபண்டை நிர்வகித்து வருகிறார், அந்த ஃபண்ட் கொடுத்துள்ள வருமானம் என்ன என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

5. சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் போது முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

6. நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்ட் நிர்வகிக்கும் மொத்த தொகையின் அளவை கவனிப்பது நல்லது. அதாவது, கடன் ஃபண்டுகள் எனில் குறைந்தபட்சம் ரூ.500 கோடி ரூபாயாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அதுவே, ஈக்விட்டி ஃபண்ட் எனில், இந்த அளவு ரூ.1,000 கோடியாக இருந்தால் சிறப்பு.

7. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் மட்டும் போதாது. அந்த ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுத்துள் ளீர்கள், அந்த ரிஸ்குக்கு ஏற்ப ரிட்டர்ன் கிடைத்துள்ளதா எனப் பார்ப்பது முக்கியம்.

8. முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட், மார்க்கெட் இறங்கும் சமயங்களில் அதைவிட அதிகமாக இறங்கி இருந்தால், அந்த ஃபண்டைவிட்டு வெளியேறுவது நல்லது. அதாவது, நீங்கள் எடுத்திருக்கும் ரிஸ்க்கின் அளவோடு ஒப்பிடும்போது இறக்கம் அதிகமாக இருந்தால் இந்த முடிவை எடுக்கலாம்.

இதன்படி ஒரு ஃபண்டினை ஆராய்ந்து, அந்த ஃபண்டை தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது வெளியேறி விடலாமா என்று முடிவு செய்யலாம்’’ என்று முடித்தார் சுவாமிநாதன்.

நீங்கள் வைத்திருக்கும் ஃபண்டு களையும் இதன்படி ஒருமுறை ஆராய்ந்து பாருங்களேன்.