?ஒரே டின் நம்பரை வைத்து எத்தனை தொழில்கள் செய்ய முடியும்?

ஆறுமுகம், காஞ்சிபுரம். - வி.பி. மணவாளன், ஆடிட்டர்.

‘‘ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் (Tax Information Network) எண் என்பதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் அடிப்படை. இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் எத்தனை பிசினஸ் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் பிசினஸ் செய்ய வேண்டும். இருவர் சேர்ந்து ஆரம்பிக்கும் பிசினஸ்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்த முடியாது. ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய பிசினஸ் செய்யும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.’’

?டிடிசிபி அப்ரூவல் மனையை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

- கருப்பசாமி, கோவை.பி.ரவீந்திரநாத், உதவி பொதுமேலாளர், வீட்டுக் கடன் பிரிவு, எஸ்பிஐ.

“நீங்கள் வாங்கும் மனையின் தேவையைப் பொறுத்து கடன் வழங்கப்படும். அதாவது, முதலீட்டு நோக்கில் மனை வாங்கினால் கடன் கிடைக்காது. அதுவே, அடுத்த இரண்டு வருடங்களில் வீடு கட்டுவீர்கள் எனில் கடன் கிடைக்கும். 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில்தான் கடன் கிடைக்கும்.”

?போர்ட்ஃபோலியோவில் எத்தனை பங்குகளை வைத்துக்கொள்ளலாம்?

ஆண்டனி, திருநெல்வேலி. எஸ். லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர், ஆர்எம்ஆர் ஷேர்ஸ்.

‘‘ஒரு போர்ட்ஃபோலியோவில் இத்தனை பங்குகள்தான் வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறையும் கிடையாது. ஆனால், ஒருவர் 20 நிறுவனப் பங்குகள் வைத்திருப்பது போதுமான தாக இருக்கும். ஏனெனில், பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் மட்டும் இல்லாமல், முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் செயல்பாடு எப்படி உள்ளது, அந்தத் துறையின் வளர்ச்சி, எதிர்காலம் எப்படி உள்ளது என்பதையெல்லாம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இதை யெல்லாம் தவறாமல் செய்ய முடியும் எனில், ஒருவர் எத்தனை பங்குகளை வேண்டுமானாலும் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக் கொள்ளலாம்.”

?ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு, ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் 2012-ம் ஆண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா? கூடுதலாக மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதை எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

- பன்னீர் செல்வம், புதுச்சேரி. முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் முதலீடு செய்துள்ள அனைத்து ஃபண்டுகளும் நல்ல நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும், கூடுதலாக முதலீடு செய்ய விரும்பும் ஆயிரம் ரூபாயை ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்டிலே முதலீடு செய்யலாம். இஎல்எஸ்எஸ் திட்டங்கள் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் வரிவிலக்கு பெற முடியும்.’’

?கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

- ஆர்.சுரேஷ், ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

‘‘ டீசல் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கிய நிலையில் ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல் போன்ற எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இதுவரை இருந்து வந்த சுமை குறையும். ஏனென்றால், சந்தை விலையைவிட டீசலை 40% குறைவாக விற்க வேண்டிய நிர்பந்தம் இந்த நிறுவனங்களுக்கு இருந்தது.

இதேபோல், ஓஎன்ஜிசி நிறுவனம் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு 60 சதவிகித விலையைக் குறைத்து விற்று வந்தது. இனி, இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்புண்டு.

தற்போதைய நிலையில், எண்ணெய் நிறுவனங்களே சில்லறை விற்பனை விலையை நிர்ணயம் செய்ய அதிகாரம் அளித்துள்ளது, இந்த நிறுவனங்களுக்குச் சாதகமான செய்தி யாகும்.

இன்றைய நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதற்குமேலும் சரியாமல் இருக்கும்பட்சத்தில், இந்தப் பங்குகளில் நிச்சயமாக முதலீடு செய்யலாம். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்பட்சத்தில், இந்தப் பங்குகளின் விலை ஏறும்.”

?ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் கடந்த இரண்டு வருடமாக மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடு நஷ்டத்தில் இருப்பதால், இதிலிருந்து வெளியேறி வேறு எதில் முதலீடு செய்யலாம்?

சங்கரன், கோவில்பட்டி. முகுந்தன், நிதி ஆலோசகர்.

“அமெரிக்கப் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பதால், தங்கத்தின் விலை இன்னும் ஓரிரு ஆண்டுகள் அதிக ஏற்ற இறக்கமின்றி சீராக இருக்கும். எனவே, விலையேறும் காலங்களில் கோல்டு ஃபண்ட் முதலீட்டை சிறிது சிறிதாக விற்று, பிர்லா சன் லைஃப் லாங் டேர்ம் ஃபண்ட், ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட், பிரின்சிபல் குரோத் ஃபண்ட், கோட்டக் நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் முதலியவற்றில் கலந்து முதலீடு செய்யலாம்.”

?எல்ஐசி நிறுவனத்தில் ஐந்து பாலிசிகள் வைத்திருக்கிறேன். பங்குச் சந்தை இறங்கும்போது அந்த பாலிசிகளில் கடன் வாங்கி, சந்தையில் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டுமா?

-செந்தமிழ்தாசன், சென்னை. எல்.சார்லஸ், ஆடிட்டர்.

“சந்தை இறங்கும் சமயங்களில் பங்குகளில் முதலீடு செய்து சந்தை உயரும்போது அதை விற்பனை செய்கிறீர்கள். பங்குச் சந்தை முதலீட்டை 12 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருக்கும்போது அது நீண்ட கால மூலதன சொத்தாகக் கருதப்படும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த தேவையில்லை. அதுவே, முதலீட்டை 12 மாதங்களுக்கு குறைவாக வைத்திருந்து விற்றால், அது குறுகிய கால மூலதன சொத்தாகக் கருதப்படும்.

ஓராண்டுக்குள் பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்துக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% செலுத்த வேண்டும். நீங்கள் எல்ஐசி பாலிசிகள் மூலமாக கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள். இந்தக் கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகையை செலவாக லாபத்தில் கழித்துக்கொள்ள முடியாது. எனவே, குறுகிய காலத்தில் பங்கு முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதுக்கும் வரிச் செலுத்த வேண்டும்.”

?மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய தனியார் நிறுவனத்தை அணுகினேன். டீமேட் கணக்கு மற்றும் பவர் ஆஃப் அட்டர்னி கேட்கிறார்கள். இது சரியா?

- தியாகு, காரைக்குடி.பி.சதீஷ், துணை மேலாளர், வாடிக்கையாளர் பிரிவு, கேம்ஸ்.

“மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம். பான் கார்டு அல்லது டீமேட் கணக்கு மூலமாக முதலீடு செய்ய முடியும். ஆனால், கட்டாயம் டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல, பவர் ஆஃப் அட்டர்னியும் முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கொடுக்கலாம்.

அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பனை செய்யும்போது முதலீட்டாளர் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டால் மட்டும்தான் யூனிட்களை விற்பனை செய்ய முடியும். அதுவே, பவர் ஆஃப் அட்டர்னி இருந்தால் போன் செய்தால் போதும்; யூனிட்களை விற்பனை செய்ய முடியும்.”

படம்: ஜெ.வேங்கடராஜ்.