தங்கம்!

‘‘சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பெரிய சரிவைச் சந்தித்து வர்த்தகமானது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 60 டாலருக்கு மேல் குறைந்து 1,167 டாலருக்கு வர்த்தகமானது. இதற்குக் காரணமாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே உயர்த்தும் என்கிற செய்திதான். அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், முதலீட்டாளர் களின் கவனம் பங்கு வர்த்தகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஃபெடரல் வங்கியின் அறிவிப்பும் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையக் காரணமாகி யுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1,150 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது.

இந்திய கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரையில், தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகிறது. இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாவதும் முதலீட்டா ளர்களுக்கு பங்குச் சந்தை மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அதேசமயம், தேவைகளுக்காக நகைகளாகத் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. விலை குறைந்து வர்த்தகமாகும் தங்கத்தின் விலை 10 கிராம் 25,700 - 26,000 ரூபாய் வரை வர்த்தகமாகலாம். வரும் வாரத்திலும் இந்த இறக்கம் தொடரும்’’ என்றார்.

வெள்ளி!

வெள்ளியின் விலை கமாடிட்டி வர்த்தகத்தில் இறக்கத்திலேயே காணப்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், டாலர் மதிப்பு அதிகரித்து வருவது வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் 3.6% குறைந்து, ஒரு அவுன்ஸ் 16.4 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளிலும் தங்கத்தின் விலைச் சரிவு மற்றும் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி ஆகியவற்றால் வெள்ளியின் விலை 2% குறைந்து வர்த்தகமானது. வரும் வாரத்திலும் சர்வதேச நிலவரங்களால் வெள்ளியின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பர்!

சர்வதேச சந்தையில் காப்பரின் விலை 0.3% குறைந்து வர்த்தகமானது. கடந்த ஓர் ஆண்டில் காப்பரின் விலை 8% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், உலோகங்களின் மீதான முதலீட்டுக்கு ஆர்வம் குறைந்து, பங்குச் சந்தை முதலீடுகளில் ஆர்வம் அதிகரித்ததே ஆகும். இதற்கேற்ப அமெரிக்க ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதத்தை விரைவில் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த விலை இறக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கமாடிட்டி சந்தையில் காப்பரின் விலை ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் ஆகிறது. வரும் வாரங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியில் காணப் படும் என்பதாலும், சீனாவின் காப்பர் தேவை குறைந்து வருவதாலும் காப்பரின் விலை வரும் வாரத்தில் ஏற்ற இறக்கத்திலேயே வர்த்தகமாகலாம்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தே வர்த்தகமானது. இந்தியச் சந்தையில் ஒரு பேரலுக்கான விலை ரூ.5,000-க்கு கீழ் வர்த்தகமானது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வர்த்தகமாகி வருவதாலும், அமெரிக்கா வின் எண்ணெய் இருப்பு அதிகரித்து வருவதும் விலை குறையக் காரணமாகி உள்ளது. இதனிடையே அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான தகவல்களாலும் இதன் விலை குறைந்து வர்த்தகமாகிறது.

இந்திய கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 0.76 சதவிகிதமும் அதாவது, பேரலுக்கு 38 ரூபாய் குறைந்து வர்த்தகமாகியது. ஆசிய - ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து காணப்படுவதால், வரும் வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாகலாம்.